Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தலை" எங்கேடா.. சுடுகாட்டில் உருண்ட "எலுமிச்சம் பழம்".. மயான குழிக்குள் மாயமான பிஞ்சு.. தலைமுடி வேற

மதுராந்தகம் சிறுமியின் தலை எங்கே மாயமாகி போனது என்பது குறித்த விசாரணை நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: 3 நாட்களை கடந்தும், சிறுமியின் தலையை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.. அந்த தலை எங்கே போயிருக்கும்?

மதுராந்தகம் அருகே சித்திரவாடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்... இவரது மகள் கிருத்திகா.. 12 வயதாகிறது.. அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 5-ந்தேதி ஸ்கூல் லீவு என்பதால், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள்.. அப்போது, அங்கிருந்த தெரு விளக்கை மாற்ற கலைச்செல்வன் என்பவர் கரண்ட் கம்பத்தில் ஏறி இருக்கிறார்.

 கரண்ட் கம்பம்

கரண்ட் கம்பம்

அந்த கரண்ட் கம்பம் ரொம்ப பழையதாம்.. நீண்ட காலமாக ரிப்பேரில் இருந்துள்ளது.. முழுமையாக சேதமடைந்த அந்த கம்பத்தில், கலைச்செல்வன் ஏறியபோது, அது அப்படியே முறிந்து சாய்ந்து, விளையாடிக் கொண்டிருந்த கிருத்திகா மீது விழுந்தது... இதில் கிருத்திகாவுக்கு தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது.. உடனடியாக சென்னை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.. ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 14 -ந்தேதி கிருத்திகா இறந்துவிட்டார்.

 சுடுகாடு மயானம்

சுடுகாடு மயானம்

இதையடுத்து மறுநாள் அதாவது கடந்த 15-ந்தேதி, இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.. சித்திரவாடி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் கிருத்திகாவின் உடல் புதைக்கப்பட்டது.. இந்நிலையில், கடந்த 24ம் தேதி, கிருத்திகா புதைக்கப்பட்டிருந்த இடத்தை யாரோ தோண்டி வைத்திருந்தார்கள்.. அந்த இடத்தில் மஞ்சளும், குங்குமமும் சிதறி கிடந்தன.. ஒரு எலுமிச்சம் பழம் கீழே கிடந்தது.. டார்ச்லைட், தலைமுடி, கிளவுஸ் போன்றவையும் அந்த இடத்தில் விழுந்து கிடந்தன.. இதை பார்த்து பதறிப்போன அந்த பகுதி மக்கள், உடனடியாக இந்த விஷயத்தை கிருத்திகாவின் வீட்டுக்கு தெரியப்படுத்தினர்.

 மஞ்சள் குங்குமம்

மஞ்சள் குங்குமம்

இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பதறியடித்துக் கொண்டு சுடுகாட்டுக்கு ஓடிவந்தனர்.. மயானத்தில் கிருத்திகா புதைக்கப்பட்டிருந்த இடத்தில் மண் தோண்டப்பட்டு கிடந்ததை கண்டு, சித்தாமூர் போலீசில் புகார் செய்தனர்... புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு கிடப்பதால், அங்கு உடல் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.. சித்தாமூர் போலீசாரும், சுடுகாட்டுக்கு வந்து, கிருத்திகா புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி பார்க்க முடிவு செய்தனர். அதன்படி வருவாய்த்துறை மற்றும் மருத்துவ குழுவினர் முன்னிலையில் அந்த இடம் தோண்டப்பட்டது.

 மிஸ்ஸிங்

மிஸ்ஸிங்

மாணவி கிருத்திகாவின் உடல் அங்கேயேதான் இருந்தது.. ஆனால், தலையை காணவில்லை. உடலில் இருந்த தலை மட்டும் மாயமாகி இருந்தது... அதனை மர்மநபர்கள் யாரோ வெட்டிஎடுத்து சென்று இருந்தனர். இதையடுத்து உடலும், சேதப்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை கண்டுபிடிக்க செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த உடலை அனுப்பி வைத்தனர்... கிருத்திகாவின் உடலில் இருந்த தலையை எடுத்து சென்றிருப்பது மந்திரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பூஜை பொருட்கள் கிடந்தது அந்த சந்தேகத்தை மேலும் அதிகரிக்க செய்தது.

 தலைச்சன்பிள்ளை

தலைச்சன்பிள்ளை

கிருத்திகா, அவரது வீட்டிற்கு முதல் மகள் ஆவார்... பொதுவாக, தலைச்சன் பிள்ளை என்றால், அவர்களது தலையை மாந்திரீகத்துக்காக பயன்படுத்துவார்களாம்.. மயானத்தில் பூஜை செய்யப்பட்ட நாளன்று சூரியகிரகணம் ஆகும்.,.. அந்த நாளில் மந்திரவாதிகள் பூஜைகள் செய்ய இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு, மாந்திரீகம் செய்பவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து சித்தாமூர் போலீசார் தீவிர விசாரணையை கையில் எடுத்தனர்.. 3 நாளாகிவிட்டது.. இன்னும் யாருமே சிக்கவில்லை.. தலையும் கிடைக்கவில்லை.. மற்றொருபுறம் இது நரபலி சம்பவம் காரணமாக நடந்திருக்குமோ என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.

 ஷாக் ஷாக்கிங்

ஷாக் ஷாக்கிங்

சமீபகாலமாகவே கேரளாவை போலவே தமிழகத்திலும் நரபலி தலைதூக்கி உள்ளது.. இந்தியாவிலேயே பெண்கள் அதிக அளவு படித்த மாநிலமாக கேரளா உள்ளது.. போதாக்குறைக்கு கடவுளின் தேசம் என்ற பெயரும் உண்டு.. ஆனால், கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்யும் கேரள மாநிலத்திலேயே, நரபலி கொடூரம் நடந்து வருவது அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது.. இந்த நரபலிக்கு நம் தமிழகத்து பெண்கள் ஆளாகி உள்ளது, அதைவிட அதிர்ச்சியை கிளப்பி விட்டு வருகிறது.. ஒருவேளை அந்த வகையில், கிருத்திகாவும் நரபலி செய்யப்பட்டிருப்பாரோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது... இருந்தாலும், புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி, சடலத்தின் தலையை மட்டும் வெட்டி எடுத்துள்ள செயல், தமிழகத்தை பதற வைத்தபடியே உறையவும் வைத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+