கையை பிசையும் ஓபிஎஸ்.. பறிபோன தலைமை அலுவலகம்.. சென்னையில் ஆபிசுக்கு இடம்தேடும் ஆதரவாளர்கள்
ஓபிஎஸ் தரப்பினர் சென்னையில் புது அலுலவகத்துக்கு இடம் தேடுவதாக கூறப்படுகிறது
சென்னை: ராயப்பேட்டையில் அதிமுகவின் தலைமைக்கழக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.. இது எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாளின் கட்டிடம் ஆகும்..
அந்த கட்டிடத்தை அவர் கட்சிக்காக வழங்கினார்... அதிமுகவின் பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் இந்த கட்டிடத்திற்குள் நடந்துள்ளன.. அதேபோல சர்ச்சைகளும் பலமுறை ஏற்பட்டுள்ளன..
அளவுக்கதிகமான சர்ச்சை காரணமாக 2 முறை மட்டும், இந்த அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.. ஆனால், உடனடியாக மீட்கப்பட்டுவிட்டது.

ஆர்டர் போட்ட கோர்ட்
இப்போது மறுபடியும் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ளது.. கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது.. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக, 3-வது முறையாக தலைமை கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டது... ஆனால் கோர்ட்டு மூலம் அந்த தடையை உடைத்து அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி அணியினர் தற்போதைக்கு தங்கள் வசமாக்கிவிட்டனர்.. எனினும், ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி வரை தலைமை கழகத்துக்குள் யாரும் செல்லக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

கையை பிசையும் ஓபிஎஸ்
கோர்ட் கெடு முடிந்தவுடனேயே, எடப்பாடி பழனிசாமியும், அவரது தரப்பினரும், வழக்கம்போல் கட்சி பணியை அங்கு மேற்கொள்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. அந்த வகையில், இனி அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நுழைய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.. அலுவலகம் எடப்பாடி தரப்புக்குதான் என்று கோர்ட்டே உத்தரவிட்ட நிலையில், அதற்கு மேலும், சட்ட இதை எதிர்கொள்ள முடியாமல் கையை பிசைந்து வருகிறார் ஓபிஎஸ்.

ஆபீஸ் எங்கே?
ஓபிஎஸ் டீமுக்கு சென்னையில் இப்போதைக்கு எங்குமே ஆபீஸ் இல்லை.. அதனால்தான், தன்னுடைய வீட்டிலேயே அடிக்கடி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்... தொண்டர்களையும் அங்குதான் சந்தித்து பேசினார்.. ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவும், இந்த சந்திப்புகள் அனைத்தும் நின்றுவிட்டன.. எனவே, கட்சி பணிகளை மேற்கொள்ள, புதிதாக ஒரு இடத்தில் அலுவலகத்தை உருவாக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் நினைக்கிறார்கள்.. இதற்காக சென்னையில் பல்வேறு இடங்களிலும் ஆபீஸ் போடுவதற்கான இடங்களை அவரது ஆதரவாளர்கள் தேடி வருகிறார்கள்.
Recommended Video

புது வியூகம்
சரியான இடம் கிடைத்ததும் அங்கு கட்சி தலைமை அலுவலகத்தை தொடங்க ஓபிஎஸ் திட்டமிட்டு உள்ளாராம்.. ஒருவேளை, தேர்தல் ஆணையம் மற்றும் கோர்ட்டு மூலம் மாறுபட்ட தீர்ப்புகள் வரும் பட்சத்தில் புதிய அலுவலகத்தில் இருந்து போட்டி அதிமுகவை இயக்கவும், ஓபிஎஸ் புது வியூகம் வகுத்து வகுத்து வருகிறாராம்.. இதை கருத்தில் கொண்டு புதிதாக அமைக்கப்பட இருக்கும் கட்சி அலுவலகத்துக்கு நிர்வாகிகளை தினமும் வரவழைக்க முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications