முதலமைச்சருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தும்... மருத்துவ அறிக்கை வெளியிட தவறிய மருத்துவமனை..!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனியில் அறுவைச் சிகிச்சை நடைபெற்ற நிலையில் இதுவரை அது தொடர்பான மருத்துவ அறிக்கை வெளியிடப்படாதது விவாதத்தை எழுப்பியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஹெர்னியா பிரச்சனை காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று மாலை ஹெர்னியா அறுவைச் சிகிச்சை நடைபெற்ற நிலையில் 3 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இன்று காலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி தனது இல்லம் திரும்பியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மருத்துவமனையில் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் அவர் வீட்டிலிருந்தே ஓய்வெடுக்கும் திட்டத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது.
இதனிடையே முதலமைச்சராக இருப்பவர் ஒரு நாள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியிருக்கும் சூழலில், அது தொடர்பான மருத்துவ அறிக்கையை அந்த மருத்துவமனை வெளியிடாதது விவாதத்தை எழுப்பியிருக்கிறது.
முக்கியப் பிரமுகர்கள் யார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அவர்களது உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிடுவது தான் மருத்துவமனை நிர்வாகத்தின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் விவகாரத்தில் இது எப்படி தவறவிடப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட ஹெர்னியா அறுவைச் சிகிச்சை ஏற்கனவே திட்டமிடப்பட்டு, பிறகு தேர்தலுக்காக தள்ளிவைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications