மின்சார வாரியம் இருக்கட்டும்.. எந்தெந்த துறைகளுக்கு ஆதார் கட்டாயம் தெரியுமா.. விவரங்கள் இங்கே
சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் வேறு எந்த துறைகளில் எல்லாம் ஆதார் எண் அவசியம் இணைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்ற விவரங்களை இங்கே காணலாம்.
தமிழகத்தில் 7 துறைகளில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களை தவிர்த்து பிற அனைவரும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அரசின் நலத்திட்டங்கள், மானியங்கள் பெற என அனைத்திற்கும் தற்போது ஆதார் எண் கேட்கப்படுகிறது. வங்கிக் கணக்கு விவரங்களுடன் ஆதார் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. செல்போன் சிம் கார்டு வாங்க வேண்டும் என்றால் கூட தற்போது ஆதார் கார்டு இருந்தால் தான் எளிதாக வாங்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது.

ஆதார் எண்
அரசின் எந்த திட்டங்கள் என்றாலும் முதலில் ஆதார் எண்கள் தான் கேட்கப்படுகின்றன. 12 இலக்கங்களை கொண்ட ஆதார் எண்களின் ஒருவரின் அனைத்து விவரங்களும் அடங்கியிருப்பதால் இதன் மூலம் மோசடிகளை தடுக்க முடியும் என்றும் போலிகளை களைந்து உண்மையான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் சேரும் என்ற அடிப்படையிலும் ஆதார் அட்டைகள் நல்லத்திட்டங்களுக்கு அவசியம் கேட்கப்படுகிறது.

எந்த மானியமும் ரத்து செய்யப்படாது
மின் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின் இணைப்பு பெற்றுள்ளவர்களின் விவரங்களை முழுமையாக பெறும் வகையில் ஆதார் எண்ணை இணைக்க மின்சார வாரியம் அறிவுறுத்துவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி ஆதார் எண் இணைப்பதால் எந்த மானியமும் ரத்து செய்யப்படாது என்றும் வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் உள்பட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மின்சார வாரியத்தில் ஆதார் எண்
ஆதார் எண் இணைப்பதற்காக சிறப்பு முகாம்களையும் மின்சர வாரியம் அமைத்துள்ளது. வரும் 31 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள மின்சார வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஆன்லைன் மூலமாகவும் ஆதார் எண் இணைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தில் ஆதார் எண் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவது போல மேலும் பல திட்டங்களுக்கும் ஆதார் எண் கொடுப்பது அவசியம் ஆக்கப்பட்டுள்ளது.

7 துறைகளில்..
அதாவது தமிழகத்தில் 7 துறைகளில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அந்த 7 துறைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
* தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களை தவிர்த்து பிற அனைவரும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மீன் பிடி தடை கால உதவி தொகை
* அரசுகொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்ச அடிப்படை விலையில் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
* தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்படும் 53 வகையான மத்திய மாநில விவசாய உதவி திட்டங்களை பெற ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
* மீன் பிடி தடை கால உதவி தொகை உள்ளிட்ட 21 வகை நலத்திட்டங்களை பெற மீனவர்களுக்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பெற..
* மாற்றுத்திறனாளிகள் 73 வகை நலத்திட்டங்கள் மூலம் உதவிகளை பெற ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
* மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டத்தில், அரசு பள்ளியில் பயின்ற உயர்கல்வி மாணவர்களுக்கு பின்னர் இளங்கலை பட்டப்படிப்பு மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications