சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கைமாறிடுச்சாமே".. நள்ளிரவிலும் நீண்ட பாஜக பிளான்.. பாமகவை விட்டுறாதீங்க.. 2 திமுக அமைச்சர்கள் யார்?

திமுகவுக்கு எதிரான வியூகங்களை தமிழக பாஜக கையில் எடுத்து வருகிறதாம்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக தலைவர் தமிழகம் வந்துள்ள நிலையில், எம்பி தேர்தலுக்கான பல்வேறு ஆலோசனைகளும், அதையொட்டிய வியூகங்களும், வகுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. அந்தவகையில் நட்டாவின் வருகையானது நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பூஸ்ட் கிடைத்தது போலாகி உள்ளதாம்.

பாஜக தேசிய தலைவர் நட்டா தமிழகம் வருவதற்கு காரணமே, தென்மண்டலங்களில் தங்கள் கட்சி காலூன்ற வேண்டும் என்பதற்காவே.. பாஜக பலவீனமாக உள்ள 144 தொகுதிகளில் பாதி தொகுதிகளுக்கு, ஜேபி நட்டா நேரடியாகவே செல்ல திட்டமிட்டுள்ளார்.

மீதமுள்ள தொகுதிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் செல்வார்கள் என்று கூறப்படுகிறது...

முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதங்களை தீட்ட சொன்ன பாஜக பிரக்யா சிங்.. உச்சநீதிமன்றத்தில் காங். வழக்கு முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதங்களை தீட்ட சொன்ன பாஜக பிரக்யா சிங்.. உச்சநீதிமன்றத்தில் காங். வழக்கு

 தொங்கும் கத்திகள்

தொங்கும் கத்திகள்

நட்டாவின் வருகையானது, தமிழக பாஜகவுக்கு புது தெம்பை தந்து வருகிறது.. கடந்த 6 மாதங்களுக்கு முன்பேயே மற்ற கட்சிகளைவிடவும், பூத் கமிட்டி மும்முரத்தில் தாமரை கட்சி முந்திக்கொண்டு தமிழகத்தில் வேலை பார்க்க ஆரம்பித்தது.இப்போது அடுத்தக்கட்டமாக, தங்களுக்கு சாதகமாக உள்ள 7 தொகுதிகளை குறி வைத்து காய்நகர்த்தல்களை துவங்கி உள்ளனர்.. அந்தவகையில், கோவை, நீலகிரி மாவட்டத்தை கையில் எடுத்துள்ள நிலையில், திமுகவின் ஆ.ராசாவுக்கு போடப்படும் முட்டுக்கட்டையாக அல்லது முன்கூட்டியே தரப்படும் நெருக்கடியாக இந்த வியூகம் பார்க்கப்பட்டும் வருகிறது..

நள்ளிரவு

நள்ளிரவு

தேசிய தலைவர் நட்டாவின் கவனம் நீலகிரியில் குவிந்துள்ளதே இதற்கு காரணம்.. அதுமட்டுமல்ல, தலித் ஓட்டுக்களையும் குறி வைத்து, பாஜக தன் ஆட்டத்தை துவங்கி உள்ளதாக தெரிகிறது.. மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட, தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகளிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து நட்டா கேட்டறிந்துள்ளார்.. கோவை உள்ளிட்ட பொதுக்கூட்டங்களில் பேசினாலும், தமிழக நிர்வாகிகளிடம் விடிய விடிய நட்டா ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.. நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினாராம். அப்போது என்ன விவாதிக்கப்பட்டது என்ற தகவல்களும் லேசாக வெளிவந்துள்ளது..

 விஜயகாந்த்

விஜயகாந்த்

நட்டாவிடம் தமிழக நிர்வாகிகள், கடந்த 2019 எம்பி தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணியை, திமுக இப்போது வரை தக்க வைத்துள்ளது... இதைதவிர பலம் வாய்ந்த கூட்டணியாக எம்பி தேர்தலில் களமிறங்க போவதாக ஸ்டாலினும் சொல்லி வருகிறார்.. வரும் எம்பி தேர்தலில் பாமக, தேமுதிக, மநீம போன்ற கட்சிகளையும் சேர்க்க, திமுக பிளான் செய்து வருகிறது என்று நட்டாவிடம் சொன்னார்களாம்.. அதுமட்டுமல்ல, அதிமுக பிளவுபட்டிருப்பதை திமுக தங்களுக்கு சாதகமாக காய் நகர்த்தி வருகிறது.. அதிமுக வாக்குகள், எக்காரணம் கொண்டும் பாஜகவுக்கு சென்று விடக் கூடாது என்ற கவலையும் திமுகவுக்கு இருக்கிறது..

 அதிருப்தி

அதிருப்தி

அதிமுகவில் உள்ள திராவிட சிந்தனை கொண்டவர்கள், பாஜக கூட்டணியை விரும்பவில்லை என்ற யதார்த்த நிலைமையை நட்டாவிடம் தெள்ளத்தெளிவாக விளக்கி உள்ளனர்.. அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட நட்டா, "எம்பி தேர்தலில் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பெற்றுவிடக்கூடாது.. 50 சதவீத இடங்களையாவது பிடிக்கும் வகையில்தான் கூட்டணி அமைக்க வேண்டும். திமுக மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது. பால் விலை, கரண்ட் பில், சொத்து வரி உயர்வு, வாரிசு அரசியல் விவகாரம் இப்படி நிறைய விமர்சனங்கள் ஆளும் தரப்பு மீது உள்ளது.. இதுதான் முக்கியமான பலம்.. இதையும், திமுகவின் ஊழல்களையும் கண்டிப்பாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்..

 டாப் 5

டாப் 5

பாமக, தேமுதிக கட்சிகளை பாஜக கூட்டணி பக்கம் கொண்டு வரும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். எந்தெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு, அதற்கான வேட்பாளர்கள் யார் என்பதையும் இப்போதே அடையாளம் கண்டு லிஸ்ட் எடுக்க வேண்டும்" என்பது உட்பட பல்வேறு அறிவுரைகளை நட்டா வழங்கினாராம்.. அதுமட்டுமல்ல, திமுக அமைச்சர்கள் மீதான நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகள் குறித்தும், அதில் டாப் 5 புள்ளிகள் குறித்தும் நீண்ட நேரம் பேசப்பட்டுள்ளது.. அநேகமாக, திமுக அமைச்சர்கள் 2 பேரான வழக்கை தூசி தட்டி எடுக்கவும் ரெடியாகி வருகிறதாம் பாஜக.

 கைமாறிய ஃபைல்ஸ்

கைமாறிய ஃபைல்ஸ்

2 நாட்களுக்கு முன்பே ஒரு செய்தி கசிந்தது.. ஏற்கெனவே திமுக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் உள்ள நிலையில், செந்தில் பாலாஜிக்கும் நெருக்கடிகள் எகிறி வருகிறது.. அதனால்தான், தமிழகம் வந்த நட்டாவிடம், தமிழக அமைச்சர்கள் சிலர் தொடர்பான சீக்ரெட் ஃபைல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாம்... அந்தவகையில், திமுகவில் சில அமைச்சர்களுக்கும் நெருக்கடி கொடுத்து அவர்களையும் விசாரணை வளையத்தில் கொண்டுவந்துவிட வேண்டும்.. இவ்வளவும், எம்பி தேர்தலுக்கு முன்பேயே நடந்துவிட வேண்டும், அப்போதுதான், அது தங்களுக்கு பிரச்சாரத்தின்போது சாதகமாக இருக்கும் என்றும் பாஜக நம்புகிறதாம். அந்தவகையில், திமுகவுக்கு நெருக்கடி தரவும், டேமேஜ் தரவும் தயாராகிவிட்டதாம் பாஜக..!!!

2 குறி

2 குறி

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், தலித் வாக்குகளுக்கு குறி + வாரிசு அரசியல் இந்த 2 விவகாரங்களை, திமுகவுக்கு எதிராக தற்சமயம் கையில் எடுத்துள்ளது பாஜக.. ஆனால், இந்த வியூகங்களைதான் நாம் தமிழர் கட்சியும் மும்முரமாக்க போவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், பாஜகவும் அதே ரூட்டை எடுத்துள்ளது.. முக்கியமாக, திருமாவளவனுக்கு செல்லக்கூடிய வாக்குகளை தங்கள் பக்கம் திருப்புவது, அல்லது விசிகவுக்கு சிறுபான்மையினர் ஓட்டுக்களை கிடைக்காமல் செய்வது என்பதே முதல் குறியாக உள்ளது.. அதனாலேயே பாஜக அருந்ததி நிர்வாகி வீட்டில், நட்டா உட்பட தமிழக பாஜக தலைவர்கள் டீ குடித்துவிட்டு, பிரச்சாரத்தை தொடர்ந்துள்ளனர்.. எனினும், பாஜகவின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்து வரும் திமுக, அனைத்துவிதமான குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ளவும் தயாராக இருப்பதாக தெரிகிறது.

English summary
Who are the 2 DMK ministers and What are BJP's strategies against DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X