"சூத்திரதாரி".. அதிமுக அலுவலக சீலுக்கு யார் காரணம்? ஓபிஎஸ் மெகா பிளான்! சீக்ரெட்டை உடைத்த வழக்கறிஞர்
சென்னை: ஓ பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன, சட்ட ரீதியாக அவர் என்ன செய்வார் என்று ஓபிஎஸ் வழக்கறிஞர் திருமாறன் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இதை எதிர்த்து ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மாற்றங்கள் விதிகளை மீறி செய்யப்பட்டுள்ளதாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு முறையிட்டுள்ளது.

ஓபிஎஸ்
இது தொடர்பாக ஓபிஎஸ் வழக்கறிஞர் திருமாறன் அளித்த பேட்டியில், அதிமுக பொதுக்குழு உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் நடந்துள்ளது. இதில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவைத்தலைவர் அழைத்து, தலைமை கழகம் அழைத்து பொதுக்குழுவை கூட்டி இருக்கிறார்கள். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கி உள்ளனர். இடைக்கால பொதுச்செயலாளர் பதவி கொண்டுவந்துள்ளனர்.

முடியவில்லை
இது இன்னும் முடியவில்லை. இன்னும் மெயின் கேஸ் இருக்கிறது. இடைக்கால மனு மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்ட போராட்டங்களை மேற்கொள்வோம். இந்த பொதுக்குழுவே செல்லத்தக்கது இல்லை. தேர்தல் ஆணையத்திற்கு செல்லுவோம், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். தொடர்ந்து வழக்கு விசாரணைகள் நடக்கும்.

சட்ட போராட்டம்
சட்ட போராட்டம் தொடரும். இந்திய தேர்தல் ஆணையம் முன் எங்கள் கருத்துக்களை வைப்போம். இந்த பொதுக்குழுவை கூட்ட தார்மீக அடிப்படை எடப்பாடி தரப்பிற்கு கிடையாது. அதை நிரூபிப்போம். அதிமுக விதிகளை மீறி இருக்கிறார்கள். அதை நிரூபிப்போம். தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும். பொறுத்திருந்து பாருங்கள்.

கல்வீச்சு
நாங்கள் அதிமுக அலுவலக மோதலில் கல் வீசவில்லை. கல் வீசியது யார் என்று எல்லோருக்கும் தெரியும். எங்கள் தரப்பில்தான் பலர் காயம் அடைந்துள்ளனர். அது எல்லோருக்கும் தெரியும். மோதலை தொடங்கியது அவர்கள்தான். அதிமுக அலுவலகம் மூட நாங்கள் காரணம் இல்லை. அதற்கு யார் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும்., என்று ஓபிஎஸ் வழக்கறிஞர் திருமாறன் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications