ஆமா.. பூமர் அங்கிள்னா என்ன? “பேமி பூமர்” பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா -இதற்கு இப்படி ஒரு வரலாறா
சென்னை: கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் கிரிஞ்சு, பூமர் அங்கிள் போன்ற வார்த்தைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அறிவுரை செய்பவர்கள் தொடங்கி ஆபாசமாக பேசுபவர்கள் வரை பலரை பூமர் அங்கிள் என்று விமர்சிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் பூமர் அங்கிள் என்றால் என்ன? யாரை அப்படி சொல்கிறார்கள் என்று விரிவாக பார்ப்போம்.
சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் பல்வேறு வார்த்தை பிரயோகங்கள் மக்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக புழங்கத் தொடங்கி உள்ளன. இளைய தலைமுறை தொடங்கி முதியவர்கள், பெண்கள் என அனைவரும் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்.
அதிலும் குறிப்பாக கிளேஷே, கிரிஞ்சு, பூமர் அங்கிள் போன்ற வார்த்தைகளை நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்த தொடங்கி உள்ளார்கள். ஆனால் பலரும் இதன் அர்த்தம் புரியாமல் எதற்கெடுத்தாலும், பூமர், கிரிஞ்ச் என்று விமர்சிப்பதை பார்க்க முடிகிறது.

வரலாற்று பின்னணி?
பொதுவாக 1945 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டுக்கு இடைபட்ட காலத்தில் பிறந்தவர்களை தற்போது பூமர் அங்கிள்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது இன்றைய நாளின் கணக்கின்படி 57 வயதை கடந்தவர்களை பூமர் அங்கிள் என்கிறார்கள். 2 ஆம் உலகக்கோப்போர் முடிந்த பிறகு உலகம் முழுவதும் குழந்தை பிறப்பு விகிதம் பெருமளவில் அதிகரித்தது. ஒருவர் 10, 15 குழந்தைகளை எல்லாம் பெற்றுக்கொண்டார்கள்.

மக்கள் தொகை பெருக்கம்
இந்தியாவிலும் சுதந்திரத்துக்கு பிறகு இதேபோல் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமானது. போரில் இருந்து வீடு திரும்பிய வீரர்கள் குடும்ப வாழ்வில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கினார்கள். 2 ஆம் உலகப்போரில் இருந்து மீண்ட நாடுகள் மற்றும் அந்த காலகட்டத்தில் காலனி ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளில் இந்த வயதுக்கு உட்படவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது.

பேபி பூமர்
இப்படி குறிப்பிட்ட சில ஆண்டுகளில் மக்கள் தொகை பெருகியதை "பூம்" என்று ஆங்கில சொல்லில் அழைத்தார்கள். அதையே பூமர் என்று அழைக்கத் தொடங்கினர். அந்த காலத்தில் பிறந்த குழந்தைகளை உலக நாடுகளில் பேமி பூமர் என்று செல்லமாக அழைத்தார்கள். அந்த காலக்கட்டத்தில் பிறந்த தற்போதைய முதியவர்கள் சொல்லும் பிற்போக்கான கருத்துக்கள் பூமர், கிரிஞ்சு என்று விமர்சிக்கப்படுகின்றனர்.

பூமர் அங்கிள்
பொதுவாக வருடங்கள் செல்ல செல்ல செயலும் மனதும் முதிர்ச்சி பெற வேண்டும். ஆனால், 55 வயதை கடந்தவர்கள் தங்கள் காலத்துடனே தற்போதைய இளைஞர்களையும் மாணவர்களையும் பொறுத்திப் பார்த்து அறிவுரை சொல்வதைம், குறை சொல்லிக்கொண்டே இருப்பதையும் கண்டு டென்சன் ஆன இளம் தலைமுறையினர் பூமர் அங்கிள் என்ற பதத்தை பயன்படுத்த தொடங்கினார்கள்.

பிற்போக்குவாத
தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 1950 களில் சாதிய கண்ணோட்டங்களும், பிற்போக்கு கலாச்சாரங்களும், பெண் அடிமைத்தனமும் அதிகம் இருந்தது. அதை ஒப்பிடுகையில் தற்போதைய தலைமுறையினரிடம் அந்த கண்ணோட்டங்கள் ஒப்பிட்டு அளவில் குறைந்து உள்ளது. இருப்பினும் அதே பிற்போக்குவாத கருத்துக்களை பேசக்கூடிய இளைஞர்களும் இருக்கவே செய்கின்றனர்.

யாரெல்லாம் பூமர்கள்?
முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, கலாச்சாரம் என்ற பெயரில் பெண் அடிமைத்தனம், இந்த மெசேஜை 100 பேருக்கு பகிர்ந்தால் நல்லது நடக்கும், நாங்கள் ஆண்ட சாதி பெருமை, இனப்பெருமை, உருவ கேலி செய்வது, பிறரது பிறப்பு, ஒரு பெண் இப்படிதான் இருக்க வேண்டும் என்று அடிமைத்தன கருத்தை திணிப்பது, தோற்றத்தை வைத்து அவமதிப்பது என 1950 களுக்கு பிறகு பிறந்தவர்களின் பிற்போக்குத்தனமான எண்ணங்களை உடைய இளைஞர்களையும் பூமர் அங்கிள்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications