மருத்துவர், தலைமை நிர்வாக அதிகாரி.. ஆற்காடு வீராசாமியின் மகன்.. யார் இந்த கலாநிதி வீராசாமி?
சென்னை: திமுகவின் கோட்டைகளில் ஒன்றான வடசென்னை லோக்சபா தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று இருக்கிறார். இந்த நிலையில் அவர் யார் என்ற பயோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
1957 முதல் வடசென்னை தொகுதி மொத்தம் 16 லோக்சபா தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் பத்து முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. அதோடு காங்கிரஸ் மூன்று முறையும், அதிமுக ஒரு முறையும், சுயேட்சை வேட்பாளர் ஒரு முறையும் வெற்றுள்ளனர். கடந்த 1996 இல் இருந்து மொத்தம் ஏழு முறை லோக்சபா தேர்தல் நடந்த நிலையில் 2004 மட்டும் அதிமுக வேட்பாளரிடம் திமுக வேட்பாளர் தோற்றார்.

அதற்கு பிறகு 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட கலாநிதி வீராசாமி வென்று தொகுதியை மீட்டார். இந்த நிலையில் அவர் இரண்டாவது முறையாகவும் அதே தொகுதியில் போட்டியிட்டு இப்போது வெற்றி பெற்று இருக்கிறார். கலாநிதி வீராசாமி வேற யாரும் இல்லை முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் தான். ஆற்காடு வீராசாமி திமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.
இந்த நிலையில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து இருக்கிறார். அதோடு தன்னுடைய எம்.எஸ். படிப்பை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்திருக்கிறார். பிளாஸ்டிக் சர்ஜரி பற்றிய சிறப்பு படிப்பை லண்டனில் படித்து முடித்து இருக்கிறார்.
அதே நேரத்தில் வீகேர் மருத்துவமனையில் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், பிளாஸ்டிக் சர்ஜனாகவும் பணியாற்றிய கலாநிதி வீராசாமி அப்பல்லோ மருத்துவமனையிலும் பிளாஸ்டிக் சர்ஜனாக பணியாற்றியுள்ளார். திமுக மருத்துவ அணியில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் இரண்டாவது முறையாக வடசென்னை லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார்.












Click it and Unblock the Notifications