• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வீக்னஸ்" சபலிஸ்ட்கள்.. லோகேஸ்வரி ஸ்கூட்டியில் போனால், பின்னாடியே நாலு பேராம்.. கலங்கும் காஞ்சிபுரம்

Google Oneindia Tamil News

சென்னை: காஞ்சிபுரம் தாதா லோகேஸ்வரி யார் என்பது குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது.. இது மிகுந்த பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சதீஷ்.. 30 வயதாகிறது..

திமுக வார்டு செயலாளராக இருந்த சதீஷ் இயல்பாகவே, சமூக அக்கறை உள்ள இளைஞர்.. தவறு எங்கு நடந்தாலும் தட்டிக்கேட்கும் துணிச்சலுடையவர்..

 இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் பெரும் மாற்றம் ஏற்படும் - மதுரை கூட்டத்தில் சு.சுவாமி ஆரூடம்! இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் பெரும் மாற்றம் ஏற்படும் - மதுரை கூட்டத்தில் சு.சுவாமி ஆரூடம்!

 சாராயம்

சாராயம்

சில சமூக விரோத செயல்கள் குறித்து போலீசாருக்கும் அவ்வப்போது சதீஷ் தகவல் கொடுத்து வந்ததாக தெரிகிறது... அப்படித்தான் கள்ளச்சாராயம் விற்கும் லோகேஸ்வரி பற்றியும் தகவல் தந்துள்ளார்.. லோகேஸ்வரி விற்கும் கள்ளச்சாராயத்தினால், அந்த பகுதி இளைஞர்கள் பலர் மதுவுக்கு அடிமையாகி வந்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன சதீஷ், அந்த இளைஞர்களை போதையில் இருந்து மீட்டெடுக்க, போலீசுக்கு புகார் கொடுத்துள்ளார்..

அட்வைஸ்

அட்வைஸ்

அதனால் போலீசும், கொஞ்ச நாளைக்கு வியாபாரத்தை நிறுத்தி வைக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள்.. இதனால், லோகேஸ்வரிக்கு தினமும் வரக்கூடிய ஆயிரக்கணக்கான மாமூல் பணம் தடைபட்டுள்ளது. இதுதான் கொலைவரை சென்றுள்ளது. சதீஷை நயவஞ்சமாக பேசி தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து மிகப்பெரிய அரிவாளை எடுத்து, சதீஷின் தலையை துண்டாக வெட்டிவிட்டு, அந்த தலையை வீட்டின் வாசலில் கேட்டிற்கு வெளியே கொண்டு வந்து போட்டுவிட்டு, வீட்டை பூட்டி தலைமறைவானார் லோகேஸ்வரி..

விபச்சாரம்

விபச்சாரம்

இதற்கு பிறகு 5 பேர் கொண்ட கும்பல் போலீசில் சரணடைந்துள்ளது... விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. 45 வயதாகும் லோகேஸ்வரி, விபச்சார தொழிலைதான் பிரதானமாக செய்து வந்துள்ளார்.. இதற்காக பல இளம்பெண்களை விபச்சாரத்தில் தள்ளி நாசமாக்கி உள்ளார்.. சபலத்தில் சிக்கும் எத்தனையோ இளைஞர்களிடம் பணம் பறித்துள்ளார்.. கள்ளச்சாராய தொழிலில் நிறைய பணம் வந்துள்ளது.. டாஸ்மாக் கடை குறிப்பிட்ட நேரம் கடையடைப்பு, டாஸ்மாக் விடுமுறை நாட்களில், 3 மடங்கு விலையை உயர்த்தி மது விற்பனை செய்வாராம். எனவே, மதுவிலக்கு போலீசுக்கு மாமூல் தடையின்றி சென்றதால் அவர்களும் லோகேஸ்வரியை கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது..

பாடிகாட்டுகள்

பாடிகாட்டுகள்

காஞ்சிபுரம் தாதா என்றாலே முன்பெல்லாம் ஸ்ரீதர் பெயர்தான் நினைவுக்கு வரும்.. என்கவுன்ட்டருக்கு பயந்து, 2017-ல் இந்த ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டார்.. ஸ்ரீதர் விட்ட இடத்தை பிடிக்க தினேஷ் & தணிகா என்ற 2 பேர் முயன்றுகொண்டிருக்கும்போது, டக்கென யாருமே எதிர்பாராத வகையில், குறுக்குவழியில் தாதாவானாராம் லோகேஸ்வரி.. கட்சி பிரமுகர் தயவால் வெளியே நடமாடி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.. எப்போதுமே ஸ்கூட்டியில் சென்றுதான் போலீஸாருக்கு மாமூல் கொடுப்பார் என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.. இவர் ஸ்கூட்டியில் சென்றால், இவருடன் 4 பாடிகார்டுகளும் பைக்கில் பின்னாடியே போவார்களாம். கொலை, பாலியல் தொழில், கள்ளச் சந்தையில் மது விற்பனை இப்படி ஏகப்பட்ட கேஸ்கள் லோகேஸ்வரி மீது உள்ளன.

வீக்னஸ்

வீக்னஸ்

யாராவது லோகேஸ்வரி மீது புகார் தந்தாலும், உடனே லோகேஸ்வரிக்கு தகவல் போய்விடுமாம்.. தன்னுடைய கணவரையே கொலை செய்தவர் இந்த லோகேஸ்வரி.. இந்த விஷயம் தெரிந்து, இவரிடம் பேசவே ஊர்மக்கள் பயந்துள்ளனர்.. ஆரம்பத்தில் ஒருசிலர் லோகேஸ்வரியை தட்டிக்கேட்டுள்ளனர்.. ஆனால், தன்னுடைய விஷயங்களில் தலையிடுபவர்களை முதலில் அழைத்து பேசுவாராம் லோகேஸ்வரி.. அவர்களிடம் பேச்சுக் கொடுக்கும்போதே, அவர்களது வீக்னஸ் பாயிண்ட் எது? என்று தெரிந்து கொள்வாராம்..

 வீக் பாயிண்ட்

வீக் பாயிண்ட்

அதற்கு பிறகு மது அல்லது பெண்களை கொண்டு அவர்களை ஆஃப் செய்து விடுவாராம்... இதில் சில பிரபலங்களும் அடக்கமாம்.. ஒருவேளை எதற்குமே ஒத்து வரவில்லை என்றால், ஸ்ட்டிரைட்டா கொலைதான்.. அப்படித்தான் சதீஷ் சிக்கி உள்ளார். எப்படி எப்படியோ ஆசை காட்டியும் சதீஷ் எதற்குமே மயங்கவில்லை.. "என் இளைஞர்களை விட்டுவிடு" என்றுதான் சொல்லி கொண்டேயிருந்தாராம்.. லோகேஸ்வரியை குறித்து புகார் கொடுத்தபோதே நடவடிக்கை எடுத்திருந்தால் சதீஷை காப்பாற்றி இருக்கலாமே என்று கதறுகிறார்கள் குடும்பத்தினர்.. பாவம் சதீஷ்..!

English summary
Who is Kancheepuram Lokeshwari and How she became a famous rowdy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X