சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

‘பவர்’ பாலிடிக்ஸ்.. அதிமுகவில் உண்மையில் யாருக்குதான் ’தாமரை’ செல்வாக்கு! குழப்பத்தில் மாஜிக்கள்!

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் யாருக்கு பாஜக மேலிடத்தில் ஆதரவு இருக்கிறது என்பது தெரியாததால் இதுவரை நடுநிலை வகித்து வந்த சில மாஜி அமைச்சர்கள் வேறு கட்சிகளுக்கு தாவலாமா என ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

ஜூன் மாதத்தில் இருந்தே அதிமுகவில் நிலவும் சூழலானது இந்திய எல்லைப் பகுதியில் நீடிப்பது போல பரபரப்பாகவே இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் அடுத்து என்ன நடக்கும் என அதிமுக மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

கடந்த ஜூலை 10ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓ பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்கள் எப்படியாவது முற்றாக அதிமுகவிலிருந்து ஓரம் கட்டி விட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமிக்காக தயாராகும் பிரத்யேக பாடல்கள்.. அதிமுக நிகழ்ச்சிகளில் இனி புதிய மாற்றங்கள்! எடப்பாடி பழனிசாமிக்காக தயாராகும் பிரத்யேக பாடல்கள்.. அதிமுக நிகழ்ச்சிகளில் இனி புதிய மாற்றங்கள்!

 அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு

அந்த பொதுக்குழுவிலேயே அதிமுக ஒருங்கிணைப்பாளரும் பொருளாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர் வைத்து வந்த பொறுப்புகளில் இருந்து மட்டுமல்ல அடிப்படை உறுப்பினர் என்ற பதவியில் இருந்தும் கூட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களால் நீக்கப்பட்டார். இந்த நிலையில் தான் பழைய பன்னீர்செல்வமாய் என்பது போல இதுவரை அமைதியாக இருந்து வந்த ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவரை அதிமுகவிலிருந்து நீக்கியதாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

மேலும் அதிமுகவிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட தொகுதி செயலாளர்கள் ஊராட்சி செயலாளர் ஒன்றிய செயலாளர் பதவிகளை மீண்டும் உருவாக்கி அந்த பதவிகளில் ஏற்கனவே இருந்தோர் மீண்டும் அதே பதவிகளில் செயல்படுவார்கள் என்றும் அறிவித்தார் மாவட்ட செயலாளர்கள் பதவியில் பலரை நீக்கியதோடு தனது ஆதரவாளர்கள் பலரையும் மாவட்டச் செயலாளர்கள் தலைமை கழக உறுப்பினர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பல பதவிகளில் அமர்த்தினார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

கட்சிக்குள் இந்த அதிரடி காட்டிய அதே வேளையில் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றம் என அடுத்தடுத்து பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் ஓ பன்னீர்செல்வம். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று தெரிவித்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடந்து வருகிறது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டு நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ள இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரும் ஓ பன்னீர்செல்வம் தரப்பினரும் அதிமுகவின் தலைமையை கைப்பற்ற மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

டெல்லி மேலிடம்

டெல்லி மேலிடம்

அதிமுகவை கைப்பற்றுவதில் பாஜகவின் உதவியை இவர்கள் இருவரும் தங்களுக்கு நெருக்கமான டெல்லி தரப்பு நிர்வாகிகள் மூலம் நாடி இருக்கின்றனர். கட்சி யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் ஆனால் பாஜகவின் ஆதரவும் தங்களுக்கு தேவை என்பதை இருவரும் உணர்ந்து இருப்பதன் காரணமாகவே பிரதமர் மோடியை சந்தித்து பேச விரும்பினர். வரும்போது விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சென்னையை விட்டு செல்லும்போது ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்தார் பிரதமர் மோடி.

பிரதமர் ஆதரவு

பிரதமர் ஆதரவு

இதனால் பிரதமரின் ஆதரவு யாருக்கு என்ற குழப்பமே இருவருக்கும் பதிலாக கிடைத்தது. இப்படி டெல்லிக்கு ஆதரவாக யார் இருக்கிறார்கள் டெல்லி மேலிடத்தின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான குழப்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வத்தை அவ்வளவாக விமர்சித்து பேசாத சில முக்கிய நிர்வாகிகள் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அமைதி காத்து வருகின்றனர். பேசாமல் பாஜக அல்லது வேறு கட்சிகளை சேர்ந்து தங்கள் அரசியல் எதிர்காலத்தை காப்பாற்றிக் கொள்ளலாமா என்று அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

English summary
Edappadi Palanichamy O. Panneerselvam, who is supported by the BJP top brass regarding the issue of single leadership in AIADMK? ; அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் யாருக்கு பாஜக மேலிடத்தில் ஆதரவு
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X