IT Jobs: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் நாளை இண்டர்வியூ.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை (ஜூன் 6) நடைபெற உள்ளது.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது Process Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இது Freshers-க்கான பணியாகும். இதனால் முன்அனுபவம் தேவையில்லை. குறைந்தபட்சம் கலை மற்றும் அறிவியல் துறையில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருந்தாலே போதும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
மாறாக பிஇ, பிடெக், எம்சிஏ படிப்புகளை படித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இ-மெயில் மற்றும் சாட் சப்போர்ட் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இதற்கான இண்டர்வியூ ஜூன் 6ம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான HCL Technologies AMB 6, 8 South Phase, MTH Road, Ambattur Industrial Estate, Ambattur, Chennai, Tamil Nadu 600058 என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications