"லகான்".. லெப்ட்ல எடப்பாடியார்.. ரைட்ல சசிகலா.. டெல்லி ரூட் எடுக்கும் "தலை".. இப்படி ஒரு சிக்கலா?
எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் செல்வாக்கு பெருகியிருப்பதாக கூறப்படுகிறது
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், சீனியர்கள் என பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் நிலையில், இதன் கிளைமாக்ஸ் என்னாகும்? எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராகி விட்டால் அடுத்து என்னாகும்?
எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த, ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, கட்சி தலைமை என்ற அந்த பதவியை மட்டும் யாருக்குமே விட்டுக்கொடுக்கவில்லை.
முதல்வர் & பொதுச்செயலாளர் = என்ற இந்த இரண்டு பதவியையுமே ஜெயலலிதா விடாமல் வைத்திருந்தார்.. சிறைக்கு செல்ல நேர்ந்தபோதுகூட அந்த பதவியை ஓபிஎஸ்-யிடம் ஒப்படைத்துவிட்டு சென்றாரே தவிர, திரும்பவும் தன்னிடமே அதை இறுதிவரை வைத்திருந்தார்.

காய் நகர்த்தல்
இப்படிப்பட்ட ஆளுமை நிறைந்தவரிடம் இருந்த அந்த முக்கிய பதவியைதான், இப்போது குறி வைத்து நகர்ந்துள்ளது அதிமுக மேலிடம்.. அதிலும் எடப்பாடி பழனிசாமி விடாப்பிடியாக தலைமை பதவியை எதிர்நோக்கி வருகிறார்.. அதற்கேற்றார்போல், பெரும்பாலான ஆதரவும் அவருக்குதான் கிடைத்து வருகிறது.. இதற்கு நடுவில் ஓபிஎஸ் பிடிவாதம் பிடித்து வருகிறார்.. இப்படிப்பட்ட சூழலில், தலைமை பதவி யாருக்குதான் கிடைக்கும்? என்று நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:

யோசனை
கடந்த சட்டசபை தேர்தலின்போது, யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை வெடித்தது.. அப்போது எடப்பாடியிடம், ஓபிஎஸ் ஒரு யோசனையை சொன்னார்.. முதல்வர் வேட்பாளர் பதவியை வேண்டுமானால் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், கட்சிக்கு தலைமை பொறுப்பை நான் பார்த்து கொள்கிறேன் என்றார்.. அதாவது, முதல்வர் பதவி என்பது 5 வருடம்தான்.. ஒருவேளை திமுக வெற்றி பெற்றுவிட்டால் அதுவும் கிடைக்காது.. ஆனால், கட்சி பதவி என்பது வாழ்நாள் முழுவதும் கூடவே இருக்கும் மிகப்பெரிய பதவி என்பதால், ஓபிஎஸ் இவ்வாறு ஆலோசனை தந்தார்.

நாசூக்கு
ஆனால், எடப்பாடி அதை நாசூக்காக தவிர்த்துவிட்டு, ஒற்றை தலைமை என்ற விவகாரத்தையும் அப்படியே அமுக்கிவிட்டு, முதல்வர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டு, ஓபிஎஸ்ஸைகூட கேட்காமல், பிரச்சாரத்தை சேலத்தில் துவங்கிவிட்டார்.. ஓபிஎஸ் சறுக்கிய இடம் இதுதான்.. இந்த இடத்தில் அவர் சரியாகவும், உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்திருந்தால், இந்த அளவுக்கு பிரச்சனை வந்திருக்காது.. எதிர்க்கட்சி தலைவரானதுமே, தென்மண்டலங்களில், மா.செ.க்களை நியமித்து, அந்த பகுதியிலும் தனக்கான ஆதரவை பெற்றுவிட்டார்.

ரகசிய டாக்
அதற்கேற்றபடி, ஓபிஎஸ் பேச வேண்டிய நேரத்தில், எதையும் பேசாமல் அமைதி காத்துவிடுவதும், உறுதிப்பாடு குறைவாக இருக்கும் போக்கும் அப்படியேதான் தொடர்ந்தது.. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ அப்படி இல்லை.. டாண்..டாண்.. என எதிரிகூடாரத்தையும் வார்த்தைகளாலேயே நொறுக்கி கொண்டிருக்கிறார்.. சொந்த கட்சியிலும் சசிகலா விஷயத்தில் கறார் தன்மையை கடைப்பிடித்து வருகிறார். தன்னுடைய ஆதரவாளர்கள் யாரையுமே இதுவரை சசிகலா பக்கம் அணுகவிடாமல் இறுக்கமாக தன்பிடிக்குள் வைத்திருக்கிறார்..

எடப்பாடி பழனிசாமி
இதையெல்லாம் பார்த்துதான், பெரும்பாலான ஆதரவு எடப்பாடிக்கு விழுந்து கொண்டிருக்கிறது.. ஆனால், ஓபிஎஸ்ஸை தவிர்த்துவிட்டு, எடப்பாடியை தலைவராக அறிவிப்பது அவ்வளவு எளிது கிடையாது.. ஓபிஎஸ் இல்லாமல் கட்சியை நடத்தவும் முடியாது.. காரணம், டெல்லியின் சப்போர்ட் மொத்தத்தையும் ஓபிஎஸ் தன்வசம் வைத்துள்ளார்.. அதிமுகவுக்குள் இப்படியே மோதல் போக்கு இருப்பது பாஜகவுக்கு ஒருவகையான சாதகமே என்றாலும், எடப்பாடியா? ஓபிஎஸ்ஸா என்று வரும்போது ஓபிஎஸ்ஸை விட்டுத்தராது.

தூசி தட்டும் வழக்குகள்
ஒருவேளை, எடப்பாடி கட்சியின் தலைவராகிவிட்டால், பாஜகவின் நெருக்கடியும் அதிகமாகலாம்.. அல்லது சசிகலாவை அதிமுகவுடன் மோதவிட்டு, வேடிக்கை பார்க்கலாம்.. அல்லது எடப்பாடிக்கு எதிரான வழக்குகளை பாஜக தூசி தட்டி பாஜக எடுக்கலாம்.. எப்படி பார்த்தாலும் கட்சியை கைப்பற்றினாலும் எடப்பாடிக்கு சிக்கல்? கைப்பற்றாவிட்டாலும் சிக்கல்? அதனால் ஓபிஎஸ்ஸை தவிர்க்க முடியாது..

சீக்ரெட்கள்
அதேசமயம், இவர்கள் இருவரும் அளவுக்கு அதிகமாக பிளவுபட்டு நிற்பதையும் பாஜக விரும்பாது.. காரணம், திமுகவை எதிர்க்க, அதிமுக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம்.. ஏற்கனவே இந்த ஒரு வருடத்தில், அதிமுகவில் இருந்து ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள், திமுக, பாஜக என தாவி வருகின்றனர்.. எனவே, முடிந்தவரை இவர்கள் இணக்கமாக செல்ல வேண்டும் என்றே தெரிகிறது என்றனர்.












Click it and Unblock the Notifications