Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கறுப்பு ஆடு".. துண்டு போட்ட புள்ளிகள்.. திணறி போன எடப்பாடி.. சொல்லி அடிக்கும் ஓபிஎஸ்.. என்னாச்சு

எடப்பாடி பழனிசாமி, சட்டசிக்கல்கள் உள்ள நிலையில், அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி எக்கச்சக்க குழப்பத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஓபிஎஸ்ஸின் பொருளாளர் பதவியும் கேள்விக்குறியாகி உள்ளது.

Recommended Video

    OPS-க்கு பதில் கடிதம் எழுதிய EPS... திமிறி எழும் 5 சந்தேகங்கள் *Politics

    ஆதரவாளர்கள் மொத்தமாக தனக்கு சப்போர்ட்டுக்கு உள்ள நிலையில், ஓபிஎஸ்ஸை பல்வேறு வகைகளில் நிராகரித்தது எடப்பாடி டீம்.

    எப்படி பார்த்தாலும், ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டு விட்டார் என்றே கருதப்பட்ட நிலையில், திடீரென அதிமுக விவகாரம், வேறு விதமாக சென்று கொண்டிருக்கிறது.

    வானகரம்

    வானகரம்

    கட்சிக்குள் மட்டுமே வாதங்களாக நடந்து வந்த விஷயம், இப்போது சட்டரீதியாக விஸ்வரூபமெடுத்துள்ளது.... அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம், 11ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன. இந்த கூட்டத்தை வேறு இடத்தில் நடத்த முடிவு செய்து, அதற்காக பல இடங்களையும் பார்த்தனர்.. ஆனால், கடைசியில், வானகரம் திருமண மண்டபத்திலேயே நடத்த, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்தனர்.. ஆனால், இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோர்ட்டுக்கு சென்றனர்..

     எடப்பாடிக்கு குழப்பம்

    எடப்பாடிக்கு குழப்பம்

    எப்போது சட்ட ரீதியான நடவடிக்கையை ஓபிஎஸ் கையில் எடுத்தாரோ, அப்போதே எடப்பாடிக்கு பெரும் சிக்கலையே அது ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.. ஆனால், பொதுக்குழு ஏற்பாடுகளை, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், பூஜை போட்டு துவக்கியும் வைத்துவிட்டார்.. திருமண மண்டபம் உள்ளே பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தாமல், மண்டபத்திற்கு வெளியே, அதாவது வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், பெரிய அளவில் பந்தல் போட்டு, கூட்டத்தை நடத்தவும் யோசனை செய்துள்ளனர்.

    பந்தல்கள்

    பந்தல்கள்

    பந்தல் அமைக்கும் பணியும் ஆரம்பமாகிவிட்டது.. இதையெல்லாம் பார்த்தால், பொதுக்குழு நிஜமாகவே, திட்டமிட்டபடியே நடந்துவிடும் என்று தெரிகிறது.. ஒருவேளை அப்படி பொதுக்குழு நடந்தால், ஓபிஎஸ்ஸிடம் உள்ள கட்சிப் பதவிகள் பறிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. அதேசமயம், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி, தற்காலிக பொதுச்செயலராக பழனிசாமியை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

     சீனியர்கள்

    சீனியர்கள்

    அப்படி, பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டால், அதற்கு சில சீனியர்கள் இப்போதே துண்டை விரித்து காத்துள்ளனர்.. காரணம், பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்து, பவர் அதிகம் நிறைந்தது, பொருளாளர் பதவியே ஆகும்.. அறக்கட்டளைகள் மற்றும் கட்சி வரவு செலவுகளை கவனிக்க வேண்டிய துறையும் இதுவாகும்.. அதனாலேயே இந்த பதவிக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது..

     சீனியர்கள்

    சீனியர்கள்

    தனக்கு ஆதரவாக பெருமளவில் திரண்டு நிற்கும் அனைத்து சீனியர்களுமே தனக்கு ஆதரவாளர்கள் என்பதால், யாருக்கு அந்த பதவியை தருவது, ஒருவருக்கு தந்தால், மற்றவர்களை எப்படி சமாளிப்பது என்று அடுத்தக்கட்ட குழப்பத்துக்கும் நெருக்கடிக்கும் தடுமாறி வருகிறாராம் எடப்பாடி.. இதனிடையே இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. சமீபகாலமாகவே, ஓபிஎஸ்ஸின் ரகசிய நடவடிக்கைகள், அதாவது அவர் எங்கே செல்கிறார்? என்ன செய்கிறார்? யாரை சந்திக்கிறார்? என்ற தகவல்கள் எல்லாம் முன்கூட்டியே எடப்பாடி தரப்புக்கு போகிறதாம்.

     கருப்பு ஆடு

    கருப்பு ஆடு

    ஆனால், யார் இந்த காரியத்தை செய்து கொண்டிருப்பது என்று தெரியவில்லை என்பதால், ஓபிஎஸ் கூடாரமே கடுப்பாகி உள்ளது.. கூடவே இருந்து குழிபறிக்கும், அந்த கருப்பு ஆடு யார் என்று கண்டுபிடிக்கும்படி, ஓபிஎஸ் தரப்பு உத்தரவிட்டுள்ளதாம்.. ஒருபக்கம் பொதுக்குழு நடக்குமா? என்பதற்கான டென்ஷன், மறுபுறம் கோர்ட் நடவடிக்கை எப்படி இருக்க போகிறது என்ற டென்ஷன், மறுபுறம் ஆதரவாளர்களை சரிகட்டி தக்க வைத்து கொள்வது என்ற டென்ஷன், என அதிமுகவின் இரு தரப்பு தலைவர்களும் சிக்கி கொண்டுள்ளனர்..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+