Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சௌகார் ஜானகி சொன்னதுமே.. கடுகடுத்த "அந்த" நடிகை.. 3 பிரபல நடிகைகளின் சீக்ரெட்.. இப்படி ஒரு மேட்டரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா உலகில் போட்டி - பொறாமைகள் அதிகம்.. ஈகோ - மனக்கசப்புகளும் அதிகம்.. இதற்கு நடிகைகளும் விலக்கல்ல.. இதற்கு 2 உதாரணங்களும் உள்ளன.

1962ம் ஆண்டு, சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, செளகார் ஜானகி, சரோஜாதேவி, மாஸ்டர் கமல், தங்கவேலு என பலரும் நடித்த "பார்த்தால் பசி தீரும்".. நட்புக்கும், தேசப்பற்றுக்கும் முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்ட படம்.
இந்த படத்தில், சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, சரோஜாதேவி, சவுகார் ஜானகி என்று அனைவருமே ஒன்றாக நடித்திருந்தார்கள்.. அப்போது தயாரிப்பாளர்களுக்கு திடீரென ஒரு பிரச்சனை ஏற்பட்டதாம்..

திடீர் பிரச்சனை: எல்லாமே முன்னணி நட்சத்திரங்கள் என்பதால், டைட்டிலும், விளம்பரங்களிலும் யார் பெயரை முதலில் போடுவது? யார் பெயரை முந்தி போட்டாலும், நடிகர்களுக்குள் பிரச்சனை வந்துவிடுமே? என்ற சிக்கல் வந்திருக்கிறது.

who is the first in the title among the three actresses and sweet memories of actress Savitri

பிறகு, இந்த சிக்கலுக்கு விநோதமான ஒரு தீர்வும் காணப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி நடிகையர் திலகம் சாவித்திரியே ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்:
"நான்தான் சரோஜாதேவியை விடவும் சீனியர்.. ஆனால், அவர் அடுத்த இடத்தில் தன்னுடைய பெயரை போட்டுக் கொள்ள ஏதாவது மறுப்பு சொல்லி இருப்பார் போல தெரிகிறது.. அதனால், பெயர்களை எப்படி வரிசைப்படுத்துவது என்பது பற்றிய குழப்பம் தயாரிப்பாளர்களுக்குள் அதிகமாகிவிட்டது. என்னுடைய பெயரை தொடர்ந்து சரோஜாதேவியின் பெயர், அதுக்குப்பிறகு சவுகார் ஜானகி.. இப்படி இருந்திருந்தால் சரியாக அமைந்திருக்கும்.. ஆனால், சிக்கல் அவ்வளவு சுலபமாக தீரவில்லை.

முன்னணி நடிகை: "எங்கள் வீட்டு மகாலட்சுமி"யில் கண்ணாம்பாவின் பெயரையே முதலில் காண்பித்தார்கள். அப்போதும் நான்தான் முன்னணி நடிகை.. ஆனாலும் என் பெயரை அடுத்தபடியாக போட்டுக் கொள்ள ஒப்புக்கொண்டேன். ஆனால், இந்த பார்த்தால் பசி தீரும் படத்தில், தயாரிப்பாளர்கள் சேர்த்து, ஒரு சுமூக முடிவு எடுத்தார்கள்.

யார் பெயரையும் டைட்டிலில் போடாமல், "உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்" என்று போட்டு, எல்லாருடைய போட்டோவையும் ஒன்றாக காட்டிவிட்டார்கள். ஆகவே, அனைவருக்கும் சமமான மதிப்பு அளிக்கப்பட்டது. ஆனால் சென்னையில் மட்டுமே அப்படி காட்டினார்களாம். வெளியூர்களில் சரோஜாதேவியின் பெயர் டாப்பில் இருந்ததாக கேள்வி.

நடிப்பு முக்கியம்: எந்தப்படத்திலும் நடிப்புதான் முக்கியமே தவிர, பெயர் போட்டு கொள்வது, நீ முந்தி, நான் முந்தி என்று சண்டை போடுவதெல்லாம் எனக்கு பிடிக்காது என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார் சாவித்திரி.

who is the first in the title among the three actresses and sweet memories of actress Savitri

இப்படித்தான், ஜெமினி நிறுவனம் தயாரித்த "ஒளிவிளக்கு" படத்திலும் ஒரு சிக்கல் கிளம்பியது.. மக்கள் திலகம் எம்ஜிஆர், ஜெயலலிதா, செளகார்ஜானகி நடித்திருந்தார்கள். எம்ஜிஆருக்கு ஜெயலலிதா ஜோடி என்றபோதும், செளகார் ஜானகிக்கு மிக மிக முக்கியமான கேரக்டர்.. கூடுதல் முக்கியத்துவம் தந்து கதை வடிவமைக்கப்பட்டிருக்கும்.. அதுவுமில்லாமல், செளகார் ஜானகி, ஜெயலலிதாவைவிட சீனியரும்கூட.

பெரிய பிரச்சனை: எனவே ஜெமினி நிறுவனம், டைட்டிலில் எம்ஜிஆருக்கு அடுத்து, செளகார் ஜானகியின் பெயரை டைட்டிலில் போட முடிவு செய்திருந்ததாம்.. ஆனால், எம்ஜிஆர், அடுத்து ஜெயலலிதா, அதையடுத்து செளகார் ஜானகி என்று டைட்டிலில் பெயர்கள் இடம்பெற்றனவாம். இதுகுறித்து ஒரு பேட்டியில் சௌகார் ஜானகி சமீபத்தில் சொல்லியிருந்தார்..

"படத்துல ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த நல்ல கேரக்டர். எம்ஜிஆருக்கு ஜெயலலிதாதான் ஜோடின்னாலும் கூட, கதையின் படி எனக்கு முக்கியமான கதாபாத்திரம். ஆனா, ஜெயலலிதாவும், அவங்க அம்மாவும் பெரிய பிரச்சினை பண்ணிட்டாங்க. டைட்டில்ல, எம்ஜிஆர், அப்புறம் செளகார் ஜானகின்னு பேர் வரக்கூடாது. எம்ஜிஆர், அப்புறம் ஜெயலலிதா, அதுக்கு அடுத்ததாக, மூணாவதாகத்தான் செளகார் ஜானகி பேர் வரணும்னு எஸ்.எஸ்.வாசன்கிட்ட சண்டை போட்ருக்காங்க. இதெல்லாம் எனக்குத் தெரியாது.

who is the first in the title among the three actresses and sweet memories of actress Savitri

பிடிவாதம்: ஆனா டைட்டில் பாத்துட்டு எனக்கு பயங்கர ஷாக். வாசன் சார்கிட்ட போய் கேட்டேன். பிடிவாதமா இருந்து கைப்பட எழுதியும் வாங்கிட்டாங்க. தப்பா எடுக்காதீங்க செளகார். டைட்டில்ல அவங்க பேர் உங்க பேருக்கு முன்னால வந்திருக்கலாம். ஆனா படம் பாத்துட்டு உங்க கேரக்டர்தான் பேசப்படும்னு சொன்னார். அவர் சொன்னது போலவே நடந்துச்சு. இறைவா உன் மாளிகையில் பாட்டு செம ஹிட்டு" என்று கூறியிருந்தார்.

ஆனால், இதே சவுகார் ஜானகி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பலமுறை சிலாகித்து பேசியிருந்ததையும் நாம் மறுக்க முடியாது.. பிற்காலத்தில் அவருடனான நட்பு குறித்தும், போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைத்து பலமணி நேரம் பேசியது குறித்தும் நெகிழ்ந்து பல பேட்டிகளை தந்திருக்கிறார்.

அசாத்தியம்: "அரசியலில் ஜெயலலிதா ஏற்படுத்திக்கொண்ட அசகாய வளர்ச்சி, அவருடைய பல மொழிகள் பேசும் திறமை, உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு அவர் வாழ்ந்து காட்டும் தனித்தன்மை, அவர் நாட்டுக்கு மட்டுமல்ல.. பெண்ணினத்துக்கே பெருமை. அவருடைய திறமைக்கு ஒருநாள் இந்திய பிரதமராகவே வரும் தகுதி பெற்றவர்" என்று ஜெயலலிதாவை பூரித்து சொன்னவர் சௌகார் ஜானகி..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+