"ஆடையின்றி" தோன்றும் பெண்கள்..பாலியல் தொழிலுக்கு வலைவிரிக்கும் 3 வெப்சைட்ஸ்.. கிரைம் பிரான்ச் அதிரடி
சென்னை: ஆபாச இணையதளங்களுக்கு விரைவில் மூடுவிழா நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் குற்ற செயல்கள் எங்கு நடந்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.. அதேபோல, பாலியல் சம்பவங்கள் நடைபெறக்கூடிய பியூட்டி பார்லர்கள், மசாஜ் சென்டர்கள், பண்ணை வீடுகளிலும் அவ்வப்போது அதிரடி சோதனைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது..

சென்னை மாநகரில், சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன.. இந்த சென்டர்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடப்பதாக, கடந்த வருடம் முன்பு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
கமிஷனர் உத்தரவு: அனுமதியின்றி நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பா குறித்து அறிக்கை அளிக்கும்படி கடந்த வருடம், உளவுத்துறைக்கு, கமிஷனர் உத்தரவிட்டிருந்த நிலையில், அனுமதி பெறாமல் நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் குறித்த புள்ளிவிவரங்களுடன் கூடிய அறிக்கையையும் போலீசாரும் அளித்திருந்தனர்.
அந்த அறிக்கையில், அனுமதியின்றி அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். இதையடுத்துதான், தனிப்படையினர் 151க்கும் மேற்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் சோதனை நடத்தி, அங்கிருந்த பல இளம் பெண்களையும் போலீசார் மீட்டனர்... அப்போது, அதில், ஒரு அதிர்ச்சி தகவல் கசிந்தது..
இந்த சோதனையில் சட்டவிரோதமாக மசாஜ் சென்டர் நடத்தியதில் சில "மாஜிக்களும்" அடங்குவார்களாம்.. இவர்களுக்கு இந்த ஸ்பா & மசாஜ் சென்டர்களுடன் நேரடி தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளதாகவும், இவர்களுக்கு சில கருப்பு ஆடுகள் மறைமுகமாக உதவியாக இருந்துள்ளதாகவும் தெரியவந்தது.. இது தொடர்பான விசாரணைகள் மேலும் விரிவடைந்து வரும் நிலையில்தான், போலீசாரும் விபச்சார கும்பலை விடாமல் குறி வைத்து கைது செய்து வருகிறார்கள்..
லாட்ஜூகள்: வெளி மாவட்டங்களில் இருந்து, வேலை தேடி கொண்டிருக்கும் பெண்களுக்கே பெரும்பாலும் இதுபோன்ற கும்பல்கள் குறி வைத்து வருகிறது.. மசாஜ் சென்டர்கள், தங்கும் விடுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் நல்ல சம்பளத்தில் வேலை இருப்பதாக, ஆசை வார்த்தைகளை சொல்லியே அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி, கை நிறைய காசு பார்த்தும் வருகிறது. அதன்படியே, அடுக்குமாடி குடியிருப்புகள், மற்றும் லாட்ஜுகளில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் தரகர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய வேட்டையில் 94 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 55 விபசார தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதனால் புரோக்கர்களின் நடமாட்டம் குறைய ஆரம்பித்துவிட்டது என்றாலும், வெப்சைட்கள் மூலமாக மூலமாகவே புரோக்கர்கள் பாலியல் தொழிலுக்கு வலை விரித்து கொண்டிருக்கிறார்கள்.
3 வெப்சைட்கள்: லொகாண்டோ, ஜஸ்ட் டயல், விவா போன்ற பாலியல் வெப்சைட்கள் மூலமாக வாடிக்கையாளர்களை வளைத்து போடும் புரோக்கர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறதாம்.. இதனை கருத்தில் கொண்டு இந்த இணைய தளங்களை முடக்க விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கையில் தற்போது அதிரடியாக இறங்கி உள்ளனர்..
இது போன்ற பாலியல் இணைய தளங்களை முற்றிலுமாக முடக்கும் வகையில் சைபர்கிரைம் போலீசார் மூலமாக விபசார தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசின் எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் கூகுள் நிறுவனத்துக்கு முக்கிய வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.
முடக்கப்படுமா: அந்தவகையில், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021ன் படி இந்த இணைய தளங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து முடக்குவதற்காக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவை துறையின் செயலாளருக்கும் போலீசார் பரிந்துரை செய்து வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன் மூலம் பாலியல் வெப்சைட்களுக்கு விரைவில் முட்டுக்கட்டை வருமா? என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகவே எகிறி வருகிறது.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications