Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மசாஜ் சென்டர்".. மாஜிக்கள் யார்.. சாந்தி காலனியில் நடந்த விபச்சாரம்.. ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்..!!

வேலைக்கு செல்லும் இளம்பெண்களை பாலியல் தொழில் தள்ளிய கும்பல் கைதானது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலைக்கு செல்லும் இளம் அப்பாவி பெண்களை குறி வைத்தே, சென்னையில் விபச்சார தொழிலை அமோகமாக நடத்தி வந்துள்ளது ஒரு கும்பல்.

தமிழகத்தில் குற்ற செயல்கள் எங்கு நடந்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்..
அதேபோல, பாலியல் சம்பவங்கள் நடைபெறக்கூடிய பியூட்டி பார்லர்கள், மசாஜ் சென்டர்கள், பண்ணை வீடுகளிலும் அதிரடி சோதனைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது..

 மசாஜ் சென்டர்

மசாஜ் சென்டர்

சென்னை மாநகரில், சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன.. இந்த சென்டர்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடப்பதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு பலமுறை புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இதையடுத்து, அனுமதியின்றி நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பா குறித்து அறிக்கை அளிக்கும்படி உளவுத்துறைக்கு, கமிஷனர் உத்தரவிட்டிருந்த நிலையில், அனுமதி பெறாமல் நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் குறித்த புள்ளிவிவரங்களுடன் கூடிய அறிக்கையையும் போலீசாரும் அளித்திருந்தனர்.

 ஸ்பா + மசாஜ் சென்டர்

ஸ்பா + மசாஜ் சென்டர்

அந்த அறிக்கையில், அனுமதியின்றி அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தாம். இதையடுத்துதான், 12 தனிப்படையின் கீழ் 150 குழுவை அமைத்து, அண்ணாநகர், விருகம்பாக்கம், கேகே நகர், தி.நகர், அடையார், திருவான்மியூர், கிண்டி உட்பட சென்னை முழுவதும் தனிப்படையினர் 151க்கும் மேற்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் சில தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்த பல இளம் பெண்களையும் போலீசார் மீட்டனர்...

 மாஜிக்கள் யார்

மாஜிக்கள் யார்

இதில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் அப்போது கசிந்தது.. இந்த சோதனையில் சட்டவிரோதமாக மசாஜ் சென்டர் நடத்தியதில் சில "மாஜிக்களும்" அடங்குவார்களாம்.. இவர்களுக்கு இந்த ஸ்பா & மசாஜ் சென்டர்களுடன் நேரடி தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளதாகவும், இவர்களுக்கு சில கருப்பு ஆடுகள் மறைமுகமாக உதவியாக இருந்துள்ளதாகவும் தெரிகிறது... இது தொடர்பான விசாரணைகள் மேலும் விரிவடைந்து வரும் நிலையில்தான், சென்னையில் ஒரு விபச்சார கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்..

 ஆசை ஆசை வார்த்தைகள்

ஆசை ஆசை வார்த்தைகள்

வெளி மாவட்டங்களில் இருந்து, சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்களுக்கு அந்த கும்பல் குறி வைத்துள்ளது.. அதேபோல, சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளை சொல்லி, அவர்களையும் குறி வைத்துள்ளது. கடைசியில் இந்த பெண்களை, கட்டாயப்படுத்தி விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி, கை நிறைய காசு பார்த்து வந்துள்ளனர்.. இந்த கும்பலை பற்றின தகவல்கள்தான், போலீசாருக்கு ரகசியமாக கிடைத்தது. இதனடிப்படையில், அந்த நபர்களை கைது செய்ய காவல்துறை தீவிர முயற்சியில் இறங்கியது..

தில்லையாடி

தில்லையாடி

இதன் தொடர்ச்சியாக சாலிகிராமம் சாந்தி காலனி தில்லையாடி வள்ளியம்மை தெருவில் உள்ள ஒரு வீட்டை ரகசியமாக போலீசார் கண்காணித்தனர். அப்போது, அங்கு ஒரு பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெண் போலீசார் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனைகளை மேற்கொண்டனர். அப்போதுன் 2 பேர் சிக்கினார்கள்.. மதுரையை சேர்ந்த கார்த்திக்கேயன், நெல்லையை சேர்ந்த பெனடிக் நெல்சன் ஆகியோர் கைதாகினர்.. பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த ஒரு பெண்ணும் மீட்கப்பட்டார்.

 குறியோ குறி

குறியோ குறி

அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.. இந்த நடவடிக்கையை எடுத்து கொண்டிருந்தபோதே, திருவேங்கடசாமி தெருவில் உள்ள ஒரு வீட்டிலும் இதேபோன்று விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கும் அதிரடியாக சோதனையில் இறங்கியபோது, அப்பாவி இளம்பெண்களை விபச்சாரத்தில் தள்ளியது 3 பெண்கள் என்பதை கேள்விப்பட்டு போலீசாரே அதிர்ந்து போனார்கள்.. அதே பகுதியை சேர்ந்த சாந்தி, ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த தேவி, நெசப்பாகம் பகுதியை சேர்ந்த சீதாதேவி ஆகியோரை கைது செய்தனர்..

 ஆக்டிங்

ஆக்டிங்

தமிழகம், ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த பெண்களை குறி வைத்து மோசடி நடைபெற்று வந்துள்ளதாக தெரிகிறது.. வேலை கிடைக்காத இளம்பெண்களுக்கு, சிறிது காலம் வேலை தேடுவது போல இந்த கும்பல் நடிக்குமாம்.. பிறகு, வேலை கிடைக்கும் வரை தற்காலிகமாக விபசாரத்தில் ஈடுபட்டு நல்ல வருமானம் ஈட்டலாம் என்று சொல்லியே, கட்டாயப்படுத்தி பெண்களை இவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்திருக்கிறார்கள்.. இன்னும் வேறு எங்கெல்லாம் இதுபோன்ற விபச்சாரங்கள் நடக்கின்றன என்ற அதிரடியில் குதித்துள்ளனர் நம் போலீசார்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+