அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் யார்? உதயநிதிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
சென்னை: 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் யார் என்று கேட்டால், யாருக்கும் தெரியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் யார் என்று அனைவருக்கும் தெரியும் என்று கூறிய மு.க.ஸ்டாலின், வெளிநாட்டு வீரர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து போட்டிகளில் பங்கேற்கும் வகையில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த அவலம், 2019ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது. மாணவிகள், இளம் பெண்களுடன் நட்புடன் பழகி பின்னர் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து துன்புறுத்தி, அவர்களை ஒரு பாலியல் வன்கொடுமை செய்த அவலம் அரங்கேறியது.

பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு
இதுதொடர்பாக வீடியோ வெளியாகி, அந்த பெண்களின் கதறல் நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில் நேற்று விசாரணை முழுவதும் முடிவடைந்து, கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றவாளிகள் 9 பேரும் வாழ்நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.
மு.க.ஸ்டாலின் vs இபிஎஸ்
இந்த தீர்ப்பு அனைத்து கட்சி நிர்வாகிகளாலும் வரவேற்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்து வருகிறது. நேற்று இருவரும் எக்ஸ் வலைதளத்தில் மோதிக் கொண்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் பேட்டி
அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்த பின் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையிலேயே கூறி இருந்தேன். குற்றவாளிகள் எவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்தாலும் சரி.. எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் சரி..
கோடநாடு வழக்கு
நிச்சயம் தண்டனை பெற்று கொடுப்போம் என்று கூறினேன். அது தற்போது நடந்துள்ளது. சட்டசபை கூட்டத்தொடரிலும் கூட பொள்ளாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று தெரிவித்தேன். இதேபோல் விரைவில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கும் நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் யார்?
தொடர்ந்து விளையாட்டுத்துறை தொடர்பான கேள்விக்கு, நீலகிரி மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுக்க விளையாட்டுத்துறை பணிகள் நடந்து வருகிறது. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சராக யார் இருந்தார் என்று கேட்டால் கூட தெரியாது.. இப்போது விளையாட்டுத்துறை அமைச்சர் யார் என்று கேட்டால், அது அனைவருக்கும் தெரியும்.
திமுக ஆட்சி
திமுக ஆட்சிக்கு வந்தபின் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டு வீரர்கள் தமிழ்நாடு வந்து போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு கட்டமைப்புகளை மேம்படுத்தி இருக்கிறோம். விளையாட்டு வீரர்கள் அதிக விருதுகளை, பெருமைகளையும் தமிழ்நாட்டுக்கு சேர்த்து வருகிறார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும் என்று தெரிவித்தார்.
-
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம்












Click it and Unblock the Notifications