"மல்லிப்பூ வெச்சி வெச்சி".. அடடே இவங்களா, இப்படியா.. எல்லார் முன்னாடியும்.. யார்னு பார்த்தீங்களா.. செம
நடனமாடிய பெண் அரசு அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது
சென்னை: ஒரு அரசு பெண் அதிகாரியின் நடனத்தை கண்டு, இணையவாசிகள் மூக்கின் மேல் விரலை வைத்து கொண்டிருக்கிறார்கள்.. என்னவாம்?
பொதுவாக, அரசு அதிகாரி என்றாலே, மடிப்பு கலையாத விறைப்பான ஆடை, அதிகார தோரணை, மிடுக்கான நடை, கண்டிப்பான பார்வை, இப்படியெல்லாம்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கட்டமைப்பு இங்கே உருவாக்கி வைத்துவிட்டனர்..
சினிமாவிலும் அப்படியேதான் அரசு அதிகாரிகள் சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள்.. விறைப்பான தோரணை என்றால் அவர் கண்டிப்புக்கு பெயர் போன ஸ்டிரிக்ட்டான ஆபீசர் என்ற பிம்பமும் படிந்துவிட்டது..

தோரணை
ஒருவரது நேர்மையையும், செயல்பாட்டையும் தீர்மானிப்பது அவர்களது டிரஸ்ஸோ, தோரணையோ கிடையாது.. இனிய குணமும், கனிந்த மனிதநேயமும், எப்பேர்ப்பட்ட கடினமான சூழலிலும் தளராத நேர்மையும்தான் எந்த ஒரு மனிதரையுமே தீர்மானிக்கும்... அந்தவகையில், ஒரு அரசு பெண், குறுகிய காலத்திலேயே பெரம்பலூர், அரியலூர் மாவட்ட மக்களையே வியப்பில் ஆழ்த்தி உள்ளார் தன்னுடைய இனிய செயல்பாடுகளினால்..!!

ஹேய் மல்லிப்பூ
கடந்த வருடம், பெரம்பலூர் மக்கள் சேவையின் பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.. இதில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.. அதாவது, பாரம்பரிய கலைகளான சிலம்பம், கரகாட்டம், மயிலாட்டம் போன்ற நடனங்கள், அழிவின் விளிம்பில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே, இந்த கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது... இந்த விழாவில் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் கீதாராணி கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.... நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, அப்போது யாருமே எதிர்பாராத வண்ணம், திடீரென சினிமா பாடல்களுக்கு நடனமாட ஆரம்பித்து விட்டார் கீதாராணி.

மாங்குயிலே பூங்குயிலே
கையில் சிலம்பத்தை வைத்து சுழற்றிக் கொண்டே, "சாந்து பொட்டு, சந்தன பொட்டு" என்று சுழன்று சுழன்று ஆடினார்.. அந்த டான்ஸ் முடிந்ததுமே, தலையில் கரகம் வைத்துக் கொண்டு, "மாங்குயிலே பூங்குயிலே" ஆடி கிறங்கடித்தார்.. பிறகு மேடையில் நடனமாடி கொண்டிருந்த ஒரு இளைஞருடன் "பஞ்சுமிட்டாய் சேலை கட்டி" என்று பம்பரமாய் சுற்றி அசரடித்தார்.. கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடியபடியே, கலைகளை இப்படியும் ஊக்குவிக்கலாம் என்பதை கண்கூடாக நிரூபித்தார் இந்த பெண் அதிகாரி கீதாராணி.

மல்லிப்பூ
தற்போது இவர் அரியலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.. சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில், வெந்து தணிந்தது காடு படத்தில் இடம் பெற்றிருந்த "ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே"... என்ற பாடலுக்கு உற்சாகமாக டான்ஸ் ஆடி, பொதுமக்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.. புடவையை மடித்து செருகி, டான்ஸ் ஆட துவங்கும்போதே, பொதுமக்களின் விசில் சத்தம் காதை கிழித்தது.... கீதாராணியின் மல்லிப்பூ டான்ஸ்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது...

டைரக்டர்
இந்த வீடியோவிற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.. ஏற்கனவே பெரம்பலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனராக பணிபுரிந்த நிலையில், அரியலூர் மாவட்டத்துக்கு பொறுப்பேற்று ஒரு வருடம்தான் ஆகிறது. அதற்குள் மாவட்ட மக்களின் மனதில் இடம்பிடித்து விட்டார்.. வழக்கமாக, இங்கு மாவட்ட குறைதீர்ப்பு கூட்டம் நடந்தால், முன்பெல்லாம் புகார் மனுக்கள் ஏராளமாய் குவியுமாம்..

யதார்த்தம்
ஆனால், டாக்டர் கீதாராணி அதிகாரியாக பொறுப்பேற்றபிறகு, மனுக்கள் குவிவது குறைந்துள்ளதாகவும், மக்களின் அடிப்படை பிரச்சனைகளும் மெல்ல மெல்ல தீர்க்கப்பட்டு வருவதாகவும் கூறுகிறார்கள். எனினும் எத்தகைய அதிகாரிகளாக இருந்தாலும்சரி, கண்டிப்பும், கெடுபிடியும் இல்லாமல், ஈகோவும் இல்லாமல், யதார்த்தமாகவும், இயல்பாகவும், எளிமையாகவும், அக்கறையாகவும் நெருங்கி பழகும்போது, அடித்தட்டு மக்களுக்குள் இனம்புரியாத நம்பிக்கை உணர்வு வந்து போவதை தடுக்க முடியாது.. மறுக்கவும் முடியாது..!!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications