சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிக்கிய "பெரிய புள்ளி".. ராதாகிருஷ்ணனா?.. வலையை மாற்றி வீசிய பாஜக.. டக்கென திரும்பும் திமுக, அதிமுக

தூத்துக்குடி கேஆர்எம் ராதாகிருஷ்ணன் தமிழக பாஜகவில் இணைந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவில் இணைந்து அனைவருக்கும் அதிர்ச்சி தந்த, அதிமுகவின் தூத்துக்குடி பிரபலத்துக்கு என்ன போஸ்டிங் தரப்படும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பாக எகிறி உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, திமுக மூத்த தலைவர் திருச்சி சிவாவின் மகன் சூர்யாவை, பாஜக தன் பக்கம் வளைத்து போட்டது.. இந்த இணைப்பு விழாவையும் சிறப்பாக கொண்டாடியது.

எந்த பொறுப்பிலும் இல்லாத சிவாவை, கட்சியில் சேர்த்து கொண்டதை ஒரு சாதனையாக பாஜக சொல்கிறதே என்று திமுக தரப்பில் கிண்டல்கள் வெளிவந்தன..

இரும்பு தகடுகளுடன் லாரி கடத்தல்.. பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது! சென்னையில் அதிர்ச்சி சம்பவம் இரும்பு தகடுகளுடன் லாரி கடத்தல்.. பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

 திருச்சி சிவா

திருச்சி சிவா

ஆனால், இதற்கு பிறகு, திமுகவில் இருந்து மேலும் சிலர் பாஜக பக்கம் தாவுவார்கள் என்ற தகவல் பாஜக தரப்பில் இருந்தே வெளியானது.. விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளநிலையில், அதற்கான ஆபரேஷனையும் பாஜக இப்போதே கையில் எடுத்துவிட்டதாகவும் சொன்னார்கள்.. இதற்கு நடுவில், செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் பேசியிருந்த பேச்சு அதிர்வலையை தமிழகத்தில் ஏற்படுத்தியது.

 40 எம்எல்ஏக்கள்

40 எம்எல்ஏக்கள்

"மகாராஷ்டிராவில் நடைபெறுவது போல தமிழகத்தில் நடைபெறும்.. தமிழக முதல்வர் எப்போது ராஜினாமா செய்வார் என்று தெரியவில்லை. ஏற்கனவே எம்எல்ஏக்கள் ஒரு சிலரிடம் பேரம் பேசுவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது... அதுவும் உளவுத்துறை மூலமாக வருகிறது.. செந்தில் பாலாஜி 40 எம்எல்ஏக்களின் ஆதரவை வைத்துள்ளார் என தகவல்கள் வருகின்றன" என்று கொளுத்திப்போட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திமுகவில் நிறைய தமிழ்நாட்டில் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாவார்.. யார் அது என்று கேட்டால் அதை ஊடகங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்" என்றும் கிளப்பி விட்டார்..

 ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

இதனால், திமுகவில் அந்த எம்எல்ஏக்கள் யாராக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எகிறியது.. ஆனால், அப்படி யாருமே பாஜக பக்கம் இதுவரை தாவவில்லை.. மாறாக, அதிமுகவில் இருந்து ஒரு முக்கிய புள்ளியை தட்டி தூக்கி உள்ளது.. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன் தான் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.. கடந்த தேர்தலில் போட்டியிட்டு 63,11,000 வாக்குகள் பெற்றும் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார்..

 தூத்துக்குடி

தூத்துக்குடி

இதற்கு பிறகு, கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்தார்... ஆனால், தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்... இதனால் கடுமையான அப்செட்டில் இருந்தார் ராதாகிருஷ்ணன்.. அத்துடன் வேறு கட்சிக்கு தாவுவதாகவும் சலசலக்கப்பட்டு வந்தது.. எப்படியும் அதிமுக பிரிந்துள்ள நிலையில், ஏதாவது ஒரு அணியுடன் இணைவார் அல்லது திமுக கட்சிக்கு தாவுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது,

 முருகன்

முருகன்

ஆனால், திடீரென பாஜகவில் இணைந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சிதான். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.. அத்துடன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவின் மூத்த முன்னோடிகளிடமும் வாழ்த்தும் பெற்றுள்ளார். கட்சியில் சேர்ந்துள்ள ராதாகிருஷ்ணனுக்கு பாஜக முக்கிய பொறுப்பு வழங்கும் என்று சொல்கிறார்கள்..

 சூர்யாவுக்கு போஸ்டிங்

சூர்யாவுக்கு போஸ்டிங்

காரணம், யார் கட்சியில் சேர்ந்தாலும் அவர்களுக்கு முக்கிய பொறுப்பு தந்து அழகு பார்க்கும் பாஜக.. அப்படித்தான், திருச்சி சூர்யாவுக்கும் பெரிய போஸ்டிங் தந்தது... பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் என்ற பதவியை தந்தது.. முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை மொத்தமாக அள்ள, தமிழக பாஜக இப்படி ஒரு பதவியை சூர்யாவுக்கு ஒதுக்கி தந்துள்ளதாக தெரிகிறது.. அந்தவகையில்தான் ராதாகிருஷ்ணனுக்கும் என்ன போஸ்டிங் தரப்படும் என்ற ஆர்வம் அவரது ஆதரவாளர்களிடம் எழுந்துள்ளது.

அனிதா

அனிதா

திருச்செந்தூர் தொகுதியை பொறுத்தவரை, அங்கு அனிதா ராதாகிருஷ்ணன்தான் ஸ்டிராங்காக உள்ளார்.. 20 வருடமாக யாருக்குமே இந்த இடத்தை அவர் விட்டுத்தந்ததில்லை.. அவரை இந்த முறையாவது வெல்ல வேண்டும் என்பதே பாஜகவின் பிளானாக உள்ளதாம்.. ஆனால், இதே மாவட்டத்தில்தான், சசிகலா புஷ்பாவும் உள்ளதால், அவரையும் மிஞ்சி எந்த அளவுக்கு அரசியல் செய்வார்? அனிதா ராதாகிருஷ்ணனை வெல்வாரா? பாஜக கனவு பலிக்குமா? எல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.. பார்ப்போம்.

English summary
Who is thoothukudi Radhakrishnan and What posting is TN BJP going to give him தூத்துக்குடி கேஆர்எம் ராதாகிருஷ்ணன் தமிழக பாஜகவில் இணைந்துள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X