சென்னை தலைமை செயலக கட்டிடம்.. செயின்ட் ஜார்ஜ் கோட்டை யாருக்கு சொந்தம்? ஆர்டிஐயில் வெளிவந்த தகவல்
சென்னை: சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள கட்டிடம் மத்திய அரசுக்கு சொந்தமானது என்றும் வாடகை அடிப்படையில் இந்த கட்டிடம் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியான நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக அரசு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலகம் அமைந்துள்ளது. தமிழக சட்டசபை கூட்டம், அரசின் முக்கியத்துறைகள் அனைத்தும் இந்த தலைமைச் செயலகத்தில் தான் அமைந்துள்ளது. அமைச்சர்களின் அலுவலகங்கள் ஆகியவையும் இந்த கட்டிடத்தில் உள்ளது.

தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை வகுப்பது, செயல்படுத்துவது என பெரும்பாலான பணிகள் தலைமைச் செயலகத்தில் இருந்து தான் நடைபெறும். பல சினிமாக்களிலும் பிரம்மாண்டமாக காட்டப்படும் தலைமைச் செயலக கட்டிடத்தை சென்னைக்கு வந்தால் மறக்காமல் சென்று பிரம்மிப்புடன் மக்கள் பார்த்து செல்வதை பார்க்க முடியும். பாரம்பரிய வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ள இந்த தலைமைச் செயலக கட்டிடம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. ..
கடந்த 1644 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இந்த கோட்டை கட்டப்பட்டது. 350 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பெருமைகளுடன் கம்பீரமாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டை காட்சி அளிக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. தலைமைச் செயலகம் அமைந்துள்ள பகுதி இந்திய ராணுவத்திற்கு சொந்தமானது என்றும் ஏதேனும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் அல்லது புதிய கட்டிடங்கள் எதுவும் கட்ட வேண்டும் என்றாலும் கூட ராணுவத்தில் முறையாக அனுமதி பெற்ற பிறகு அதைச் செய்ய முடியும்.
வாடகை அடிப்படையில் தமிழக அரசு பயன்படுத்தி வருகிறது என்று ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதனை தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் தமிழக அரசுக்கு சொந்தமானதா? அல்லது இந்திய ராணுவத்திற்கு சொந்தமானவையா? என்று சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி உள்ளார். .
இதற்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு இடையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி தலைமைச் செயலக கட்டிடம் தமிழக அரசுக்கு சொந்தமானதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒப்பந்தங்களின் விபரம் உள்ளிட்ட குறித்து வேறு எந்த தகவலும் கூறப்படவில்லை.
-
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications