Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையின் மேயர் "இவர்" தானாமே.. ஓகே சொல்லும் முதல்வர் ஸ்டாலின்.. இதுதான் காரணமா?

சென்னையின் முதல் திமுக மேயர் யார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த முறை 2 மாவட்டங்களில் மேயர் யார் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது.. ஒன்று காஞ்சிபுரம், இன்னொன்று சென்னை..!

நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் படி, காஞ்சிபுரம் மாவட்டம் திமுகவின் கோட்டையாக விளங்கி கொண்டிருக்கிறது.. இதே தெம்புடன் டேக் ஆப் ஆகி சென்றால், நடக்க போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மாஸ் வெற்றி பெறும் என்று நம்பப்பட்டு வந்தது.

அதற்கேற்றபடி, திமுகவில் பலம் வாய்ந்த வேட்பாளர்களையே தேடி தேடி, பார்த்து வேட்பாளர்களாக திமுக நிறுத்தியிருக்கிறது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

காரணம், மாநகராட்சி அந்தஸ்தை காஞ்சிபுரம் பெற்றுள்ள நிலையில், இந்த தேர்தலை சந்திக்கிறது.. இங்குள்ள மொத்தமுள்ள 51 வார்டுகளில் பெரும்பான்மை பெறும் கட்சியை சேர்ந்தவர்கள்தான் மேயர் ஆக முடியும்.. அந்த வகையில் முதல் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு எபந்து கொண்டே இருக்கிறது.. மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், ஏகப்பட்ட திமுக புள்ளிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை நிறுத்தி, அவர்கள் வெற்றி பெற பாடாய் பட்டு கொண்டிருக்கிறார்கள்.. அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயர் யார் என்ற ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாநகராட்சி

மாநகராட்சி

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, கடந்த 6 மாத காலமாகவே வேறு ஒரு பேச்சு இருந்தது.. உதயநிதிக்கு மேயர் பதவி தரப்போகிறார்கள் என்றும் அதனால்தான், அவர் ஒப்புக் கொண்ட படங்களை முடித்து தந்துவிட்டு, மேயர் தேர்தலுக்குள் திரும்பி வந்துவிடுவார் என்றார்கள்.. இதற்கு காரணம், முக ஸ்டாலினுக்கு பிறகு சென்னை மேயர்கள் அந்த அளவுக்கு, சென்னையை பாதுகாக்கவில்லை... ஸ்டாலின் மேயராக இருந்தபோது, சிங்கார சென்னையை அமல்படுத்தி, சென்னை மேயர் பதவிக்கே புது இலக்கணம் தந்தார்.

 கனவு திட்டம்

கனவு திட்டம்


இப்போதும் சென்னை 2.0 திட்டம் அமலில் உள்ளது.. அதில் சென்னையை அழகுபடுத்துவது, மேம்படுத்துவது உள்ளிட்ட நிறைய கனவுகளை ஸ்டாலின் வைத்துள்ளார்.. அத்தனையையும் நிறைவேற்ற உதயநிதி பொருத்தமாக இருப்பார் என்றுதான் கணக்கு போடப்பட்டது.. ஆனால், திடீரென சென்னை மாநகராட்சி மேயர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கி அறிவித்தது திமுக..

 திமுக மேயர்

திமுக மேயர்

தலைநகரில் மேயர் பதவியானது முதல்முறையாக தாழ்த்தப்பட்ட பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது, திமுகவுக்கே மிகப்பெரிய எதிர்பார்ப்புதான்.. சென்னையை பொறுத்தவரை திமுகவின் மண் தான்.. இந்த முறையும் இந்த தேர்தலிலும் சென்னையை நழுவ விட்டுவிடக்கூடாது என்பதில் ஆரம்பத்தில் இருந்தே கவனமாக இருந்தது.. அதனால்தான், கூட்டணி கட்சிகளுக்கு மிக குறைந்த அளவிலேயே தொகுதிகள் ஒதுக்கி தரப்பட்டுள்ளன.

 2 அமைச்சர்கள்

2 அமைச்சர்கள்

முன்னதாக சென்னையின் முக்கிய அமைச்சர்களான மா.சுப்பிரமணியன் மற்றும் பி.கே.சேகர் பாபு ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை தனித்தனியாக சந்தித்து தங்களது ஆதரவாளர்கள் பட்டியலை அளித்ததாக சொல்லப்பட்டது. இருவருமே முதல்வருக்கும், அவரது குடும்பத்திற்கும் நெருக்கமான நபர்களாக பல ஆண்டுகளாக இருந்து வருகின்றனர். எனவே இந்த பட்டியலில் ஸ்டாலின் யாரை டிக் அடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 யாருக்கு டிக்?

யாருக்கு டிக்?

தற்போது திமுக தரப்பில் 2 பெண்கள் பெயர் அடிபடுகிறது.. ஆலந்தூர் மண்டலத்தில் 159வது வார்டில் போட்டியிடும் அமுதபிரியா செல்வராஜ், மணலி மண்டலத்தில் 17வது வார்டில் போட்டியிடும் கவிதா நாராயணன் ஆகிய 2 பேரில் ஒருவருக்கு மேயர் பதவி கிடைக்கலாம் என்கிறார்கள்.. இதில், அமுதபிரியா செல்வராஜ் என்பவர் அமைச்சர் மா.சுப்பிரமணியனின் ஆதரவாளராம்.. கவிதா நாராயணன் அமைச்சர் பிகே சேகர்பாபுவுக்கு நெருக்கமானவராம்.. இதில் யார் முதல்வரின் மேயர் சாய்ஸ் என்று தெரியவில்லை.. அந்த வகையில் முதல் பெண் மேயரை பார்க்க சென்னைவாசிகள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.

 கவிதா - ஸ்ரீதணி

கவிதா - ஸ்ரீதணி

இதில், புழல் நாராயணன் மனைவி தான் கவிதா ஆவார்.. திமுகவில் நீண்டகாலமாக தொடர்பில் இருந்து வரும் பிரமுகர் புழல் நாராயணன்.. பேராசிரியர் அன்பழகனை வைத்து, திமுக.வில் அதிகமான பொதுக்கூட்டங்களை நடத்தியவர் இந்த புழல் நாராயணன்தான்.. சென்னையை அடுத்த புழல் ஒன்றிய முன்னாள் செயலாளர் இவர்.. 2006 தொடங்கி 2015 வரையிலான காலகட்டத்தில் புழல் ஒன்றிய செயலாளராக இருந்தவரும்கூட..

 பரபரப்பு

பரபரப்பு

இவரது மனைவி கவிதாவும் திமுகவுடன் நெருங்கி இருப்பவர்.. எந்நேரமும் அறிவாலயத்திலோயே அதிக நேரத்தை செலவிட்டு வந்துள்ளார் கவிதா. அதேபோல, 70- வது வார்டு கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீதணி என்பவருக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.. இதில் கொளத்தூர் தொகுதி என்பது ஸ்டாலினுக்கு நெருக்கமான தொகுதியாகும்.. இந்த தொகுதியை சேர்ந்த ஸ்ரீதரணிக்கும் வாய்ப்பபு

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+