கட்சிக்காரன் வராம யாரு வருவா? இதெல்லாம் ஒரு புகாரா? திமுக எம்.எல்.ஏவை கடுமையாக கடிந்த அமைச்சர் நேரு!
சென்னை: அரசு நிகழ்ச்சிக்கு கட்சிக்காரன் வருவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என திமுக சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான கம்பம் ராமகிருஷ்ணனை அமைச்சர் நேரு கடிந்திருக்கிறார்.
தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் கம்பம் ராமகிருஷ்ணன். இவருக்கும் அம்மாவட்டத்தின் முன்னாள் பொறுப்பாளரான ஜெயக்குமாருக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் முதலமைச்சரின் காலை சிற்றூண்டி திட்ட துவக்க விழாவில் ஜெயக்குமார் கலந்துகொண்டதை மையமாக வைத்து தலைமைக்கு புகார் அனுப்பியிருந்திருக்கிறார் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.

கடந்த வாரம் அண்ணா அறிவாலயத்தில் தங்க தமிழ்செல்வனோடு கம்பம் ராமகிருஷ்ணன் வார்த்தை யுத்தம் நடத்தியதை நாம் கூறியிருந்தோம் அல்லவா, அப்போது தான் இந்த விவகாரமும் நடந்திருக்கிறது. காலை சிற்றூண்டி துவக்க விழாவில் ஜெயக்குமார் கலந்துகொண்டதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என வினவி கம்பம் ராமகிருஷ்ணனை அமைச்சர் நேரு ஆஃப் செய்திருக்கிறார்.
தன்னுடைய புகார் காரணமாக எதிர்தரப்பை அழைத்து தலைமை கண்டிக்கும் என எண்ணிய கம்பம் ராமகிருஷ்ணனுக்கு இது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. கடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தலின் போது, கம்பம் ராமகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட விருப்பமனு கொடுத்தவர் ஜெயக்குமார்.
அமைச்சர் நேருவும், அன்பகம் கலையும் அழைத்து பேசியதாலேயே அவர் போட்டியிலிருந்து ஒதுங்கினார். ஏற்கனவே தங்க தமிழ்செல்வனோடு பஞ்சாயத்து நடத்திக் கொண்டிருக்கும் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு ஜெயக்குமார் விவகாரமும் பின்னடைவை தான் தந்துள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி தான் தேனி மாவட்ட திமுகவுக்கு மேலிட பொறுப்பாளராக உள்ளார் என்பதால் அவர் வசமும் இந்த பஞ்சாயத்து சென்றிருக்கிறது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்!












Click it and Unblock the Notifications