சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இரவு முழுக்க புலம்பல்! ஓபிஎஸ்ஸை தூக்கிவிட்டு.. "அவரை" உள்ளே கொண்டு வரும் எடப்பாடி? லீக்கான சீக்ரெட்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் விரைவில் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இன்று அதிமுக தலைமைக்கழக கூட்டத்தில் அவரின் பதவி பறிக்கப்படவில்லை என்றாலும் அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவி பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Recommended Video

    OPS-உடன் ரகசிய சந்திப்பா? TTV Dhinakaran விளக்கம் | *Politics

    சென்னையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. எடப்பாடி பதவி வகிக்கும் கழக தலைமை நிர்வாக செயலாளர் பெயரில் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி நாளை அதிமுக அலுவலகத்தில் நடைபெறவுள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஓபிஎஸ் தரப்பு பதில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    ஓபிஎஸ் கையில் 'அஸ்திரம்’.. முறியடிக்க எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்.. இன்று 2 பேரை இறக்கியதே அதற்குத்தானா?ஓபிஎஸ் கையில் 'அஸ்திரம்’.. முறியடிக்க எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்.. இன்று 2 பேரை இறக்கியதே அதற்குத்தானா?

    அவைத் தலைவர்

    அவைத் தலைவர்

    இந்த கூட்டத்திற்கு பின் வேறு சில காரணங்களும் இருக்கின்றன. கடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அவர்தான் அவைத்த தலைவராக இருந்த நிலையில் நிரந்தர தலைவராக அவர் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து பேசிய தமிழ் மகன் உசேன்.. அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடக்கும். இந்த பொதுகுழுவில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் என்று அறிவித்தார்.

    முன்மொழிந்த ஜெயக்குமார் - மாற்றம்

    முன்மொழிந்த ஜெயக்குமார் - மாற்றம்

    இந்த பொதுக்குழுவில் தமிழ் மகன் உசேன் நியமனத்தை முன் மொழிந்தது ஜெயக்குமார்தான். அன்றைய ஒருநாள் பொதுக்குழுவில் அவைத் தலைவராக தற்காலிக தமிழ் மகன் உசேனை நியமனம் செய்யவே ஜெயக்குமார் முன்மொழிந்தார். ஆனால் அதை வழி மொழிந்த கேபி முனுசாமி.. நிரந்தர அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் என்று அறிவித்தார். இதை கேட்டு ஜெயக்குமார் அதிர்ந்து போனார். அப்படியே ஓரமாக அமர்ந்து கொண்டார்.

     ஏமாற்றம் - புலம்பல்

    ஏமாற்றம் - புலம்பல்

    அதன்பின் பெரிதாக ஜெயக்குமார் எதுவும் பேசாமல் அமைதியாக ஒதுங்கி இருந்தார். முன்னதாக ஜெயக்குமாருக்கு ராஜ்ய சபா எம்பி தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அப்போதே இவருக்கு அவைத்தலைவர் பதவி கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தமிழ் மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவராக அறிவிக்கப்பட்டார். இதனால் ஜெயக்குமார் தரப்பு கடுமையாக புலம்பியதாக கூறப்படுகிறது. அன்று இரவே ஜெயக்குமார் இதனால் கடுமையான அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.

    ஓபிஎஸ் நீக்கம் - மூன்று வாய்ப்பு

    ஓபிஎஸ் நீக்கம் - மூன்று வாய்ப்பு

    இந்த நிலையில்தான் இன்று ஓபிஎஸ்ஸுக்கு எதிராக அதிமுக தலைமை கழகத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது . இன்று நடக்கும் கூட்டத்தில் பின்வரும் 3 முடிவுகளில் ஒரு முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஓபிஎஸ்ஸின் பொருளாளர் பதவி பறிக்கப்படலாம். ஓபிஎஸ் மொத்தமாக கட்சியில் இருந்து நீக்கப்படலாம். அவரின் ஆதரவாளர்கள் நீக்கப்படலாம். எடப்பாடி பழனிச்சாமி தற்காலிக பொதுச்செயலாளராக அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதையும் அதிமுக அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. இதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது.. எடுக்கப்பட்ட முடிவுகள் பரம ரகசியம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    பொருளாளர் பதவி

    பொருளாளர் பதவி

    இந்த நிலையில் ஓபிஎஸ்ஸின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டால் அந்த பதவி ஜெயக்குமாருக்கு கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. அல்லது கேபி முனுசாமிக்கு கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. ஜெயக்குமார் அவைத் தலைவர் பதவி, எம்பி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கிறார். இதனால் அவரை சமாதானம் செய்யும் விதமாக இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்படலாம் என்கிறார்கள். இன்று இதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை என்பதால் அடுத்த பொதுக்குழுவில் கண்டிப்பாக இந்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். இது தொடர்பாக ஜூலை 11ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது .

    English summary
    Who will replace O Panneerselvam's position in AIAMDK if he is sacked from the party? இன்று நடக்கும் அதிமுக தலைமை குழு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வத்தின் பதவி பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X