தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?... 3 பேரின் பெயர்கள் இறுதியானது
சென்னை: தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்? என்பதில், 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அவர்களில் ஜாபர்சேட் அல்லது ஜே. கே திரிபாதி டிஜிபி-யாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக உள்ள டிகே ராஜேந்திரனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிய போகிறது. இதனால் அடுத்த டிஜிபியை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது. புதிய டிஜிபியை நியமிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

தமிழக அரசு இதுதொடர்பாக 18 பேர் கொண்ட பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. ஒரு மாநிலத்தின் டிஜிபியாக நியமிக்க சில விதிமுறைகள் உள்ளன. அதில் முக்கியமானது, குறைந்தபட்சம் 6 மாத காலம் பணிக்காலம் இருக்க வேண்டும்.
அப்படிப் பார்த்தால் தற்போது பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ரமேஷ் குடவாலா, ஜாங்கிட், பங்கரா, காந்திராஜன் உள்ளிட்ட 6 பேர் அடிபடுகின்றனர். காரணம், இவர்களுக்கு ஓரிரு மாதங்களே பணிக்காலம் உள்ளது. இவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் ஜாபர் சேட், ஜே.கே.திரிபாதி உள்ளிட்ட 6 பேர் தகுதி உடையவர்களாக உள்ளனர். ஆனால், 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரை தமிழக பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் திரிபாதி அல்லது ஜாபர்சேட் டிஜிபியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதில் ஜாபர் சேட் பாஜக மூலம் இந்த பதவியை எட்டிப்பிடிக்க முயற்சிப்பதாக கூறப்பட்டது. அதற்கு பிரதியுபகாரமாக, திமுகவின் சமாச்சாரங்களை புட்டு புட்டு வைக்க ஜாபர் சேட் தயாராக இருப்பதாகவும் செய்திகள் பரவியது. டிஜிபி பேனலுக்கு இவர் தகுதியானவர் என்றாலும், திரிபாதி, விஜயகுமாரின் பெயர்கள் பலமாகவே அடிபடுகிறது.
டிஜிபி பேனலுக்கு இவர் தகுதியானவர் என்றாலும், திரிபாதி, விஜயகுமாரின் பெயர்கள் பலமாகவே அடிபடுகிறது. இதுதொடர்பான முடிவை நாளை மத்திய தேர்வாணையம் எடுக்கவுள்ளது. எனவே தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் என்பது நாளை தெரிய வரும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications