“காலா” படத்தில் காலில் விழாத ரஜினி..21 வயது குறைந்த யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? பவர் அப்டி
சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரைப்படத்தில் வரும் வில்லனின் காலில் விழாமல் சுயமரியாதை பேசும் நடிகர் ரஜினிகாந்த் தன்னை விட வயது குறைவான யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது ஏன் தெரியுமா? விரிவாக பார்ப்போம்.
ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாக இமய மலையில் தியானம் செய்வதாக கூறி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த். இமயமலை குகைக்குள் தியானத்தில் ரஜினிகாந்த் மூழ்கி இருக்க இங்கு ஜெயிலர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மறுபக்கம் இமயமலையில் இருக்கும் ரஜினியின் புகைப்படங்களும் வெளியானபடி இருந்தன.

ரஜினிகாந்த் எப்போது வருவார்.. பல ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிப்படத்தை கொடுத்து இருக்கும் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால், இமயமலை பயணத்தை முடித்துகொண்ட ரஜினி தமிழ்நாடு திரும்பவில்லை. அவர் ஜார்க்கண்ட் நோக்கி சென்றார்.
அம்மாநில தலைநகர் ராஞ்சிக்கு சென்று அங்கு ஆளுநராக இருக்கும் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். ஆளுநரின் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த் இந்த சந்திப்பை தொடர்ந்து ஜார்க்கண்டில் உள்ள புனித தளங்களில் சாமி தரிசனம் செய்தார்.
மறுபக்கம் ரஜினியின் வருகைக்காக காத்திருந்த படக்குழு, அவர் தமிழ்நாடு ராஞ்சிக்கு சென்றதை தொடர்ந்து அவர் இல்லாமலேயே ஜெயிலர் வெற்றிவிழா செய்தியாளர் சந்திப்பையும் நடத்தி முடித்துவிட்டது. அதன் பின்னராவது தமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்துக்கு சென்றார் ரஜினிகாந்த். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் படம் பார்க்கப்போவதாக தெரிவித்தார். ஆனால், அதற்கு யோகி ஆதித்யநாத் விரும்பவில்லை. அவருக்கு பதிலாக உபி துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா ரஜினிகாந்துடன் திரைப்படம் பார்த்தார்.
ஆனால், அவரும் முழு படத்தையும் பார்க்காமல் பாதியிலேயே அங்கிருந்து புறப்பட்டு சென்றது ரஜினிக்கு இன்சல்டாக அமைந்தது. இந்த நிலையில் லக்னோவில் உள்ள யோகி ஆதித்யநாத் வீட்டுக்கு தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் சென்றார் ரஜினிகாந்த். தன்னை வரவேற்க வீட்டு வாசலுக்கு வந்த யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார்.
இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி உள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் வில்லனான வரும் நானா படேகர் அமைச்சராக நடித்து இருப்பார். அவர் தனது காலில் விழுமாறு ரஜினியிடம் சொல்வார். ஆனால், ரஜினிகாந்த் சுயமரியாதை கருதி காலில் விழ மறுப்பார்.
மாஸாக இருக்கும் அந்த சினிமா காட்சியை, தற்போது யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த காட்சியுடன் பலர் ஒப்பிட்டு வருகிறார்கள். 72 வயதான ரஜினிகாந்த் 52 வயதான, தன்னை விட 21 வயது குறைவான யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தற்கான காரணத்தை அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
முதலமைச்சராகவும், அரசியல்வாதியாகவும் யோகி ஆதித்யநாத் அறியப்பட்டாலும், அதற்கு முன்பாக அவரை இந்து மத துறவியாகவே பார்க்கப்பட்டு வந்தார். சிறுவயதிலேயே கோரக்நாத் மடத்தில் ஐக்கியமான அவர், பிற்காலத்தில் பிற்காலத்தில் தலைமை மடாதிபதியாக உயர்ந்தார். எனவே வயது வித்தியாசம் இன்றி அவரது காலில் மக்கள் விழுவார்கள் என்றும், அதன் அடிப்படையிலேயே ரஜினிகாந்த் விழுந்து இருக்கிறார் எனவும் பலர் கருத்திட்டு வருகிறார்கள்.
இப்போவாச்சும் இந்த மரமட்டைகளுக்கு புரியுமானு தெர்ல...
— Anandh Sellappa (@sparkanandh) August 19, 2023
பா.ரஞ்சித்தும் மாரியும் சமூகத்துக்கு என்ன சொல்ல வராங்கனு...
கைக்கொடுத்து பழகனும், கால்ல விழ வைக்க கூடாது #Kaala
சமமா உக்காந்து பேசனும் #Maamannan @mari_selvaraj @beemji pic.twitter.com/8o0G4QeHTF












Click it and Unblock the Notifications