சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னை வேணா கலாய்ங்க.. ஆனா "இது" தப்பு! எல்லை மீறிய மீம்ஸ்! கலங்கும் ஆனந்த் ஸ்ரீனிவாசன்! என்ன நடந்தது

Google Oneindia Tamil News

சென்னை: சோஷியல் மீடியாக்களில் தற்போது வைரல் மீம் மெட்டீரியலாக இருப்பவர் என்றால் அது ஆனந்த் ஸ்ரீனிவாசன்தான். இவர் சேமிப்பு ரீதியாக சொல்லும் ஆலோசனைகளை வைத்து இணையம் முழுக்க பலரும் மீம் போட்டு வருகின்றனர்.

பொருளாதார நிபுணர் மற்றும் ஆலோசகர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் ஊடகங்களில் தொடர்ந்து பொருளாதார ரீதியாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். முக்கியமாக சேமிப்பு தொடர்பான ஆலோசனைகளை இவர் வழங்கி வருகிறார்.

தமிழ்நாட்டில்.. முக்கியமாக 90ஸ் கிட்ஸ் மத்தியில் சேமிப்பு பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. கையில் 10 ஆயிரம் இருந்தால் கூட அதற்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு போன் வாங்கி.. 40 ஆயிரம் ரூபாய்க்கு இஎம்ஐ கட்டும் வழக்கம் இந்த தலைமுறையினர் இடையே அதிகம் ஆகி உள்ளது.

புதிய இன்ஸ்ட்டா காலத்தில்.. மக்கள் பலர் சேமிப்பை விட ஆடம்பரமாக செலவு செய்வதே சிறப்பானது என்று நினைக்க தொடங்கி உள்ளனர்.

பீகார்:7 கட்சிகளின் 164 எம்எல்ஏக்கள் ஆதரவு-ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிதிஷ்குமார் அறிவிப்புபீகார்:7 கட்சிகளின் 164 எம்எல்ஏக்கள் ஆதரவு-ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிதிஷ்குமார் அறிவிப்பு

சேமிப்பு

சேமிப்பு

இஎம்ஐ கட்டியே இந்த காலத்து இளைஞர்கள் பலரின் வாழ்க்கை கழிந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் இளைஞர்கள் ஏன் சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் அறிவுரை வழங்கி வருகிறார். முக்கியமாக 90ஸ் கிட்ஸ் ஏன் இஎம்ஐ வைத்திருக்க கூடாது. ஏன் சேமிக்க வேண்டும். எவ்வளவு வருமானம் இருக்கும் போது சேமித்தால் சரியாக இருக்கும் என்றும் அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

 ஆனந்த் ஸ்ரீனிவாசன்

ஆனந்த் ஸ்ரீனிவாசன்

இவரின் பேட்டிகள் சேமிப்பை வலியுறுத்துவதாக பலர் பாராட்டினாலும்.. சிலர் இவரின் பேச்சுக்களை எதிர்க்கவும் செய்கிறார்கள். முக்கியமாக இவர் பேட்டி எடுக்கும் இளைஞர்களை கொஞ்சம் கோபமாக அணுகுவதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக "நீ 90ஸ் கிட்ஸ்.. 40 ஆயிரம் சம்பளம் இல்லைனா ஏன் திருமணம் பண்ணிக்கிற.. உனக்கு எதுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு போன்" என்று கோபமாக இவர் கொடுக்கும் பேட்டிகள் கூட விமர்சனங்களை பெற்றுள்ளன. 90ஸ் கிட்ஸ்களை கொஞ்சம் பயமுறுத்தும் வகையிலும் இவரின் பேட்டிகள் உள்ளதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.

புகார்கள்

புகார்கள்

நீ இதை செய்யாமல் இருந்தால் இப்போது இவ்வளவு ஆயிரம் சேர்த்து இருக்கலாமே என்று இவர் சொல்லும் ஐடியாக்கள் சில குறைந்த ஊதியத்திற்கு வேலை பார்க்கும் இளைஞர்களை பயமுறுத்தும் விதமாகவும் அமைந்து உள்ளது என்று 90ஸ் கிட்ஸ் புகார் வைக்கிறார்கள். ஆனால் 80ஸ் கிட்ஸ்களோ ஆனந்த் சொல்வது தவறு இல்லை. நாங்கள் சேமிக்க மறந்துவிட்டோம். எங்களுக்கு ஆனந்த் போல அறிவுரை சொல்ல அப்போது ஆள் இல்லை. நீங்களாவது சேமியுங்கள் என்று ஆனந்த் ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாகவும் சிலர் பேசுகின்றனர்.

மீம்ஸ்

மீம்ஸ்

கடந்த இரண்டு நாட்களாக இணையம் முழுக்க ஆனந்த் ஸ்ரீனிவாசன் மீம்கள்தான் நிரம்பி வழிகின்றன. எங்கு சென்றாலும் ஆனந்த் ஸ்ரீனிவாசன்தான் இருக்கிறார். இளைஞர்களுக்கு இவர் அறிவுரை சொல்வது போலவும், ஐடியில் வேலை பார்ப்பவர்களுக்கு அறிவுரை சொல்வது போலவும் வகை வகையாக மீம்கள் போடப்படுகின்றன. இதில் பல ரசிக்கும்படி இருந்தாலும் சில எல்லை மீறி சென்றுள்ளன. முக்கியமாக பால் குடிக்கும் குழந்தை பாலை சேமிக்க வேண்டும் என்பது போன்ற மீம்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.

சர்ச்சை

சர்ச்சை

அதேபோல் இவரை உருவ கேலி செய்தும் பல மீம்கள் போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் தன்னை பற்றி வந்த மீம்கள் குறித்து பிபிசி தமிழ் ஊடகத்திற்கு ஆனந்த் ஸ்ரீனிவாசன் பதில் அளித்துள்ளார். அதில், என் அறிவுரையை கேட்டவர்கள் பணத்தை சேமித்து வைத்துள்ளனர். என்னுடைய அறிவுரை சிலருக்கு பிடிக்கிறது. சிலருக்கு பிடிக்கவில்லை. ஆனால் எனக்கும், என் மனைவிக்கும் என்ன பிரச்சனை என்றால் சிலர் எல்லை மீறுகிறார்கள்.

வக்கிரம்

வக்கிரம்

ஒரு வயது குழந்தை பாலை சேமிக்க வேண்டும். குழந்தைக்கு பால் ஊற்ற வேண்டும் என்று எல்லை மீறி வக்கிர புத்தியோடு மீம் போடுகிறார்கள். நீங்கள் என்னை கலாய்க்கலாம். நான் குண்டாக இருப்பதை சிலர் கலாய்ப்பதாக கூறப்படுகிறது. அது சரி. நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லாம். நான் பருமன்தான். ஆனால் 1 வயது குழந்தை செத்து போய்விடும் என்று மீம் போடுவது எல்லாம் வக்கிர புத்தி என்று பிபிசி தமிழ் ஊடகத்திற்கு ஆனந்த் ஸ்ரீனிவாசன் பதில் அளித்துள்ளார்.

English summary
Why Anand Srinivasan is trending with memes? Why does not he happy with that? சோஷியல் மீடியாக்களில் தற்போது வைரல் மீம் மெட்டீரியலாக இருப்பவர் என்றால் அது ஆனந்த் ஸ்ரீனிவாசன்தான். இவர் சேமிப்பு ரீதியாக சொல்லும் ஆலோசனைகளை வைத்து இணையம் முழுக்க பலரும் மீம் போட்டு வருகின்றனர்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X