கோவை வந்த மோடியை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன்? புது காரணம் சொன்ன நயினார் நாகேந்திரன்
சென்னை: கோயமுத்தூர் வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன் என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 29ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். இந்த நிகழ்வில், தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அவரை வரவேற்றனர். எனினும், தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவரும் முக்கிய நிர்வாகியுமான அண்ணாமலை வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காதது கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன் என்ற கேள்விக்கு பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணாமலைக்கு இம்முறை போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவே அவரது பங்கேற்பின்மைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அளித்த பேட்டியில், "நான் வந்த உடனேயே அண்ணாமலை எப்போது வருகிறார்? என்று கேட்டேன். அவரது பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டு தான் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை என்று தகவல் கூறினார்கள். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "தனித்தனி ஆதரவாளர்கள் என்று எதுவும் கிடையாது. அண்ணாமலையின் அன்புக் கூட்டத்தில் நாங்களும் இருக்கிறோம். அவர் எனக்கு அன்புக்குரிய தம்பி. தேர்தலில் இன்னும் வேட்பாளர்கள் கூட அறிவிக்கப்படவில்லை. அதற்குள்ளாகவே வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பேசுவது அவசியமே இல்லை.
பாஜக போன்ற ஒரு கட்டுக்கோப்பான கட்சியில் எந்த நேரத்தில், யாருக்கு, என்ன பொறுப்பு வழங்க வேண்டும் என்பது கட்சி தலைமைக்கு நன்கு தெரியும். ஒரு சிலருக்கு கட்சிப் பொறுப்புகள், ஒரு சிலருக்கு எம்எல்ஏ அல்லது எம்பி தொகுதிகள் வழங்கப்படலாம். இவையனைத்தும் அப்படித்தான் வழங்கப்படும்.
கட்சியில் சாதாரண தொண்டர்கள் கூட பொறுப்புகளை எதிர்ப்பது இயல்பு என்றும், யார் வெற்றி வாய்ப்பை கொண்டு வருவார்கள் என்பது போன்ற பல அம்சங்கள் தேர்தல் அரசியலில் கட்சிக் தலைமைக்குத் தெரியும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
முன்னாள் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியபோது அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது. அதன் பிறகு, அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற பின்னரே கூட்டணி மீண்டும் உருவானது. அதிமுக தலைவர்களுடன் முரண்பட்ட போக்கைக் கொண்டிருந்த அண்ணாமலைக்கு தற்போது வரை முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாமல் உள்ளது.
இதுவும் அண்ணாமலையின் அதிருப்திக்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது அவரிடம் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "கோவைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்த போது அண்ணாமலை வெளியூரில் இருந்ததால் அவரால் வரவேற்க நேரில் வரமுடியவில்லை" என விளக்கினார்.
கோவைக்கு வந்த பிரதமரை வரவேற்காதது குறித்து கடந்த சில தினங்களாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இதுவரை அண்ணாமலை ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்.. பல ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு -
ரஜினிகாந்த் மருமகனுக்கு பெரிய பொறுப்பு.. அப்படியே தூக்கி கொடுக்கும் அண்ணாமலை! விசாகன் வருவாரா? -
கோயம்புத்தூர் மக்களுக்கு குட்நியூல்.. அமைச்சர் விக்னேஷ் அதிரடி நடவடிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications