Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முஸ்தபா! முஸ்தபா! திருமண விழாவில்.. நொடி கூட பிரியாமல்.. நெருக்கமாக இருந்த ஓபிஎஸ் - டிடிவி தினகரன்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: அதிமுக ஓபிஎஸ் கோஷ்டி மூத்த தலைவர் வைத்திலிங்கம் இல்ல திருமணவிழாவில் ஓ பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் நெருக்கமாக இருந்தது பெரிய அளவில் கவனிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் தோல்வி அடைந்த நிலையில், தேர்தல் ஆணையமும் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராகவே முடிவு எடுத்து உள்ளது. இதன் மூலம் அதிகாரபூர்வமாக அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிலையில்தான் சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் ஆகியோர் இடையே சந்திப்பு நடந்தது. டிடிவி தினகரன் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்களுடன் டிடிவி தினகரன் சந்திப்பு நடத்தினார்.

Why are O Panneerselvam TTV Dinakaran sitting so close in Vaithiyalingam family marriage?

இதில் வீட்டு வாசலுக்கே போய் ஓபிஎஸ் ஆகியோரை டிடிவி தினகரன் வரவேற்றார். இந்த சந்திப்பில் சேர்ந்து செயல்படுவது, அதிமுகவை மீட்பது, எடப்பாடி பழனிசாமியை அதிகாரத்தில் இருந்து நீக்குவது உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன.

இந்த சந்திப்பிற்கு பின் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில். நான் ஓ பன்னீர்செல்வத்தை நம்பி இருட்டில்கூட நான் கையைப் பிடித்துக் கொண்டு செல்வேன். அந்த அளவிற்கு எனக்கு நம்பிக்கை உள்ளது. அவருக்கும் சரி.. எனக்கும் சரி.. எந்த சுயநலமும் இல்லை.

அதிமுகவை வலிமைப்படுத்த வேண்டும். கட்சியை பல நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் அரக்கர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். திமுகவை வீழ்த்த அதிமுகவில் இருப்பவர்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

அதிமுகவை மீட்பதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது. எடப்பாடியை நம்ப முடியாது. அவர் சுயநலம் மிக்கவர் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் இன்று அதிமுக ஓபிஎஸ் கோஷ்டி மூத்த தலைவர் வைத்திலிங்கம் இல்ல திருமணவிழாவில் ஓ பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருமண விழா: இந்த திருமண விழா தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் திவாகரன் கலந்து கொண்டனர். இதில் ஓபிஎஸ் - டிடிவி தினகரன் மிகவும் நெருக்கமாக இருந்தனர். ஓ பன்னீர்செல்வம் வந்த பின்புதான் டிடிவி வந்தார். அதுவரை அங்கே இருந்த நிர்வாகிகளிடம் ஓ பன்னீர்செல்வம் பேசிக்கொண்டு இருந்தார்.

டிடிவி வந்த பின் அவருடன் சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அதன்பின் பெரும்பாலும் எங்கும் செல்லாமல் ஒருவருடன் ஒருவர் நெருங்கிய நபர்கள் போல மிக நெருக்கமாக பேசிக்கொண்டு இருந்தனர். நெருக்கமாக இருந்தது பெரிய அளவில் கவனிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்தது பெரிய அளவில் கவனிக்கப்பட்டு உள்ளது.

அரசியல் ரீதியாக, உடல்நிலை ரீதியாக இவர்கள் ஆலோசனை செய்து இருக்கலாமே என்று கூறப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் சசிகலா நேரில் வர முடியவில்லை. இந்த நிலையில் அவர் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

Why are O Panneerselvam TTV Dinakaran sitting so close in Vaithiyalingam family marriage?

சந்திப்பு: கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஒரத்தநாட்டில் சசிகலா - ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம் இடையே சந்திப்பு நடந்தது. வைத்தியலிங்கம் ஒரு நிகழ்ச்சிக்காக செல்லும் போதும்.. சசிகலா திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற போதும் ஒரத்தநாட்டில் சந்தித்துக்கொண்டன. இவர்கள் சந்திப்பு 15 நிமிடம் நீடித்தது.

இரண்டு பேருமே அன்பாக பேசிக்கொண்டனர். அதோடு அதிமுக விவகாரங்கள் குறித்தும் பேசிக்கொண்டனர். சந்திப்பு நடந்த அன்று.. அதாவது 9-9-2022 அன்று வைத்தியலிங்கம் பிறந்தநாள். இதை பற்றி சசிகலாவிடம் வைத்தியலிங்கம் கூறினார். உடனே சசிகலா காரில் இருந்த ஸ்வீட் பாக்ஸை எடுத்து வைத்தியலிங்கத்திடம் கொடுத்தார்.

இதன்பின் அவர்கள் இருவரும் எதிர் எதிர் திசையில் சென்றனர். சசிகலாவை சந்தித்ததன் மூலம் எடப்பாடிக்கு எதிராக வைத்தியலிங்கம் முக்கியமான பிள்ளையார் சுழியை போட்டுள்ளார் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்தன.. இந்த நிலையில்தான் தற்போது வைத்தியலிங்கம் வீட்டு இல்ல திருமண விழாவில் அடுத்த அரசியல் நகர்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+