புஸ்ஸி ஆனந்தையா கட்சியை விட்டு நீக்கணும்னு சொல்றீங்க? அவரு என்ன மனுஷன் தெரியுமா? நெட்டிசன்கள் ஆதரவு
சென்னை: இந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் என்ன மனுஷசன்னு தெரியாம அவரை போய் கட்சியை விட்டு நீக்கணும்னு சொல்றாங்களே! இந்த வீடியோவை பாருங்கள், உங்களுக்கே புரியும். அப்படி என்னதான் அவர் செய்துட்டாரு?
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் நடந்ததும் அந்த இடத்தை விட்டு தவெக விஜய், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, உள்ளிட்டோர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

விஜய், நீலாங்கரை வீட்டிற்குச் சென்றார். ஆனால் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்ததும் கைதுக்கு அஞ்சி முன்ஜாமீன் கோரியதை அடுத்து அவர்களது மனு ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் சாதாரண வழக்கிற்கு கூட நின்று போராடாமல் இப்படி ஒளிந்திருக்கிறார்களே என விமர்சனங்கள் எழுந்தன. அப்போதே புஸ்ஸி ஆனந்தை நம்பி விஜய் இந்த கட்சியை தொடங்கியுள்ளாரே என்றெல்லாம் பேசப்பட்டது. அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். மேலும் நிர்வாகிகள் யாரும் விஜய்யை சந்திக்க விடாமல் புஸ்ஸி ஆனந்த் தடுக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
மேலும் காசு உள்ளவர்களாக பார்த்து பதவி தருகிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் வெளியே வந்ததும் அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றன.
அதில் ஒரு போஸ்ட் வைரலாகி வருகிறது. கட்சி தொடங்கி 2 வருடங்கள் ஆகப்போகும் நிலையில் கட்சியின் மிக முக்கிய கட்டமைப்புக்கு தேவையான, மாநில இளைஞர் அணி எங்கே? தொண்டர் படை எங்கே? மகளிர் அணி எங்கே? மீனவர் அணி எங்கே? விவசாயிகள் அணி எங்கே? தொழிலாளர்கள் அணி எங்கே? அதுபோக திருநங்கைகள் அணி மாற்றுத்திறனாளிகள் அணி இளம் பெண்கள் அணி குழந்தைகள் அணி பணியாளர் அணி வர்த்தகர்கள் அணி நெசவாளர்கள் அணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி தொழில்முனைவோர் அணி இந்தியாவில் வசிக்காத அணி கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய அணி தன்னார்வலர்கள் அணி அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்.
இப்படி கட்சியின் மிக முக்கிய கட்டமைப்புக்களை கூட செய்யமுடியாத கையாளாகாத பொ.செ பதவியில் அமர்த்தி உங்களை நம்பி இருக்கும் கோடான கோடி தோழர்களை வஞ்சிப்பது ஏன்?? புஸ்ஸி ஆனந்தின் வளர்ச்சிக்காக மட்டுமே கட்டமைக்கப்படுகிறதா இக்கட்சி? தமிழ்நாட்டு மக்களுக்கான ஆக்கப்பூர்வ அரசியலை நோக்கியே உங்கள் பயணத்தில் சில முக்கிய முடிவுகளை விரைந்து எடுங்கள் அண்ணா உங்களோடு உங்களுக்காக எந்த எதிர்பார்ப்புமின்றி பயணிக்கிறோம் உங்களை மட்டுமே நம்பியுள்ளோம் என அநத் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது போல் விஜய்யை நெருங்கவிடாமல் எல்லாரையும் தடுக்கிறார் என்ற காரணமும் சொல்லப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்து கட்சிக்கு அவமரியாதையை ஏற்படுத்திவிட்டார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் ஜாமீன் பெற்று வெளியே வந்த மதியழகனும் பவுன்ராஜும் தனது குடும்பத்தினருடன் தவெக கட்சி அலுவலகத்திற்கு விஜய்யை காண வந்திருந்தனர். அப்போது அங்கு புஸ்ஸி ஆனந்தின் காலில் இருவரது குடும்பத்தினரும் விழுந்து ஆசி பெற்ற வீடியோ வைரலாகி வருகிறது.
இதை வைத்து புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. ஆனால் இந்த விவகாரம் தற்போது எப்படி திரும்பியுள்ளது என்றால், என்னா மனுசன்யா இந்த புஸ்ஸி ஆனந்து! மக்கள் அவர் மேல எவ்வளவு மரியாதை வெச்சிருக்காங்க! இவரையாடா கட்சியை விட்டு நீக்கணும்னு சொல்றீங்க? என சமூகவலைதளங்களில் புஸ்ஸிக்கு சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தவெக மாநாட்டில், விஜய் பேசிவிட்டு போனதும் அங்கு மேடையில் இருந்த நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த்தை தூக்கி வைத்து கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
Aadhav Arjuna: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தமிழ் வழியில் கல்வி பயின்றவரா? உண்மை என்ன! -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
தனி விமானத்தில் மும்பை புறப்பட்டார் விஜய்.. தேர்தல் பணிகளுக்கு இடையே திடீர் பயணம் -
பால்வாடி இயக்கம்.. லீடர்னு சுற்றியவன்.. வில்லிவாக்கத்தில் சம்பவம் இருக்கு! உறுதியாக சொன்ன சேகர் பாபு -
விஜய் பிரண்ட் சஞ்சீவ்வை சுற்றும் பிரச்சனை.. உண்மை தெரியாமல் பேசாதீங்க! ஓபனாக உடைத்து பேசிய ப்ரீத்தி சஞ்சீவ் -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு -
வேலூர் பெண் போஸ்ட் மாஸ்டருக்கு ஆபாச செய்கை காட்டிய தவெக புள்ளி.. இந்த நபரா? அதிர்ச்சி பின்னணி என்ன -
ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள்












Click it and Unblock the Notifications