கே.டி.ராகவன் வீடியோ விவகாரம் பாஜக தேடிகொண்டதா? திமுகவின் "கை" உள்ளதா?.. அண்ணாமலைக்கு சிக்கலா?
கேடி ராகவன் வீடியோக்கள் திமுக கைக்கு சென்றதாக கூறப்படுகிறது
சென்னை: கேடி ராகவன் வீடியோ விவகாரத்தை அடுத்து, தமிழக பாஜகவில் 2 விதமான செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.. உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் என்றாலும், வரப்போகும் தேர்தல்களில் தமிழக பாஜகவின் இமேஜை டேமேஜ் செய்யும் அளவுக்கு விவகாரங்கள் உருவெடுத்து கொண்டிருப்பதாகவே கூறப்படுகிறது.
தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கேடி ராகவன் தொடர்பான வீடியோவை மதன் வெளியிட்டிருந்தார்.. இதையடுத்து, ராகவன் தனது கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார்... அந்த வீடியோவை மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடனேயே வெளியிட்டதாகவும் மதன் கூறியிருந்தார்.
ஆனால், வீடியோவை ஒப்படைத்தால் நடவடிக்கை எடுப்பதாக சொல்லியும், மதன், மறுத்தவுடன் வீடியோவை வெளியிட்டு விட்டதாக அறிக்கை மூலம் அண்ணாமலை விளக்கம் அளித்திருந்தார்... தொடர்ந்து, வீடியோ வெளியிட்ட மதன், வெண்பா ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

வித்தியாசம்
இந்நிலையில், "நான் அறிக்கையில் சொன்னதற்கும், அவர் வெளியிட்ட வீடியோவுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது" என்று அண்ணாமலை விளக்கம் தந்திருந்தார்.. மதன் முறைப்படி அந்த வீடியோ டேப்பை என்னிடம் கொடுத்திருந்தால் கட்சி சார்பாக நடவடிக்கை எடுத்திருப்போம்" என்று விளக்கம் தந்திருக்கிறார்.. இதன்மூலம் ஒரே ஒரு உண்மை மட்டும் வெளிப்பட்டுள்ளது.. மதன் வெளியிட்ட அண்ணாமலை தொடர்பான வீடியோ உண்மை என்று அண்ணாமலையே ஒப்புக் கொண்டுள்ளதாகவே இந்த பேட்டி பார்க்கப்படுகிறது.

சிக்கல்
இது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த வீடியோ வெளியீடானது 2 விதமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.. முதலாவதாக, அண்ணாமலைக்கே இது சிக்கலை ஏற்படுத்தும் அளவுக்கு சென்றுள்ளதாம்.. அதற்கு காரணம், பத்திரிகையாளர் என்று கூறிக் கொள்ளும் மதனிடம், ஒரு கட்சியின் மாநில தலைவர் ஏன் அவ்வளவு நெருக்கமாக பேச வேண்டும்? கட்சி விவகாரங்களை அவரிடம் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன? வீடியோ சம்பந்தமாக மட்டும் பேசாமல், கட்சியில் உள்ள பெண் தலைவர்களின் பெயரையும் ஏன் மதனிடம் பேச வேண்டும்? என்ற பலவிதமான கேள்விகள் அண்ணாமலை மீது முன்வைக்கப்படுகிறது.

ஆபாசம்
ஒரு ஆபாச வீடியோவை, திருட்டுத்தனமாக பதிவு செய்து வந்து கொடுத்த மதனால், தான் பேசுவதையும் எப்படி ரிக்கார்டு செய்யாமல் இருப்பார் என்று ஒரு ஐபிஎஸ் படித்தவருக்கு எப்படி தோணாமல் போனது என்பது ஆச்சரியமாக மட்டுமல்ல, அதிர்ச்சியாகவும் உள்ளது.. ஐபிஎஸ் அதிகாரியை, அதுவும் ஒரு கட்சியின் மாநில தலைவர் பேசிய ஆடியோவை ஒரு சாதாரண நபர் ரிலீஸ் செய்யும் அளவுக்கு, அண்ணாமலை அசால்ட்டாக நடந்து கொண்டதும் வியப்பையே தருகிறது.. யாரை வேண்டுமானாலும் கட்சிக்குள் சேர்த்து கொண்டால் இதுதான் நிலைமை ஏற்படும் என்பதை மதன் நிரூபித்துள்ளர்..

பாஜக
திடீரென ட்ரால் செய்து ஒருவர் பிரபலமாவாராம், அவர் வசதிக்காக பாஜகவில் இணைவாராம், அவரை பாஜகவிலும் சேர்த்துக்கொள்வார்களாம், அவர் வெகு சாதாரணமாக பாஜக தலைவர் ரூமுக்குள்ளேய சென்று ரகசியம் பேசும் அளவுக்கு இடம் கொடுக்கப்படுவாராம்.. தமிழக பாஜக எந்த அளவுக்கு முதிர்ச்சி இல்லாமல் இருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்..

காரணம்
எல்.முருகன் தலைவராக இருக்கும்போது, நிறைய குற்ற வழக்கு பின்னணியில் உள்ள கிரிமினல்களையே கட்சிக்குள் சேர்த்து கொண்டார்.. இதை பற்றி கேட்டதற்கு, "நாங்கள் அவர்களை திருத்த முயல்கிறோம்" என்று காரணமும் சொன்னார்.. பத்திரிகையாளர் என்று கூறிக் கொண்டவரை கட்சிக்குள் சேர்த்ததற்கே,இந்த நிலைமை வந்துவிட்டது.. இன்னும் அந்த கிரிமினல்களின் நிஜ முகங்கள் வெளியே தெரிந்தால் தமிழக பாஜக நிலைமை என்னாகும்? என்று தெரியவில்லை.

வீடியோ
இந்த விஷயத்தில், ஒட்டுமொத்த பேரும் அமைதி காக்கிறார்கள்.. வீடியோ பற்றி யாருமே வாய் திறக்கவில்லை.. தேசிய மகளிர் தலைவியான வானதி முதல் சின்மயி வரையும், மூத்த தலைவர்கள் பொன்.ராதா முதல் எச்.ராஜா வரையும் சத்தமின்றி இருக்கிறார்கள்.. இதுவே திராவிட கட்சியில் யாராவது இப்படி வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்திருந்தால் இந்த அமைதியை இவர்கள் காத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.. அந்த வகையில் குஷ்புவின் துணிச்சலை எவ்வளவோ பாராட்டலாம்..!

பாஜக
பாஜகவுக்குள் வேறு சில தலைவர்கள் அண்ணாமலைக்கு ஆகாதவர்கள் என்கிறார்கள்.. எனவே, கே.டி.ராகவனுக்கு எதிரானவர்கள் இந்த வீடியோ பயன்படுத்தியிருக்கலாம்.. அப்படி இருந்தாலும், சின்ன பிரச்சினைகளுக்குகூட வழக்கறிஞர் அணியை வைத்து புகார் கொடுக்கும் இவர்கள், இந்த விவகாரத்தில் மட்டும் மவுனமாக இருப்பது ஏன்? வீடியோ, ஆடியோவுக்கு பிறகு மதன் ரவிச்சந்திரன் ஏன் மவுனமானார்? இதையெல்லாம் பாஜக தலைமையே தேடிக்கொண்டது என்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.

வீடியோ
இதில் இன்னொரு விஷயமும் அடங்கி உள்ளது.. ராகவன் வீடியோ மட்டுமல்லாமல், மேலும் பலரது வீடியோக்கள் உள்ளனவாம்.. அத்தனையும் திமுக மேலிடத்துக்கு சென்றுள்ளதாம்.. அதை தேவைப்படும் நேரத்தில் திமுகவும் பயன்படுத்தி, பாஜகவுக்கு செக் வைக்கும் காரியத்தில் இறங்கலாம் என்கிறார்கள்..

பாஜக
இப்போது பாஜக தரப்பின் மூவ்களை தொடர்ந்து கண்காணித்துவந்தது தமிழக உளவுத்துறை... மேலும், அண்ணாமலைக்கும் மதனுக்கும் இடையே விரிசல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியும் இந்த விவகாரத்தை கூர்ந்து கவனிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.. பாஜக நிர்வாகிகள் குறித்த வீடியோக்கள் திமுக தலைமையின் கைக்கு சென்றுவிட்ட நிலையில், பாஜக மேலிடம் இதை எப்படி எதிர்கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பும் எழுகிறது.

ராகவன்
ஏற்கனவே, ராகவன் தவிர மேலும் சில பாஜக தலைவர்களுக்கு வீடியோ விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக மதன் கூறியிருப்பதால், அந்தக் கட்சியின் நிர்வாகிகள் குழப்பத்தில் இருந்துவருகிறார்கள்.. போதாக்குறைக்கு திமுகவும் இதில் என்ட்ரி ஆகும் அளவுக்கு விவகாரம் சென்றுள்ளது.. இதற்கெல்லாம் காரணமாக இருந்தது அண்ணாமலைதான் என்பதால் அவர் மீது லேசான அதிருப்தியும் எழுந்துள்ளது.

புகார்கள்
சுருக்கமாக சொல்லப்போனால், சாதாரண கட்சி நபரிடம் கட்சியின் தலைமை வரை உள்ள பிரச்சினைகளை பேசி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார் என்றும், இன்னும் பக்குவப்படாத தலைவராக உள்ளதால் அவரை நீக்க வேண்டும் என கட்சித்தலைமைக்கு புகார்கள் பறந்துள்ளது என்றும் தகவல்கள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன..!
-
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
என்கிட்டயே அழுது சீன் போடுறீயா? நான் என்ன கல்லா.. டிஆர் பாலுவை முற்றுகையிட்ட எஸ்ஆர் ராஜா ஆதரவாளர்கள் -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி












Click it and Unblock the Notifications