Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிம்பு - பிரபுதேவாவை பிரிந்தது ஏன்? ஆவணப்படத்தில் நடிகை நயன்தாரா உடைத்த உண்மை.. ஓ இதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்ச்சைகளை கடந்து நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமணம் தொடர்பான ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளது. இதில் நடிகர் சிலம்பரன் மற்றும் பிரபுதேவா ஆகியோரை பிரிந்தது ஏன்? என்பது பற்றி நடிகை நயன்தாரா விளக்கி உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதல் திருமணம் செய்தனர். இவர்களின் திருமணம் என்பது கடந்த 2022ம் ஆண்டு நடந்தது. தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

nayanthara prabhu deva silambarasan

இதற்கிடையே தான் திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களின் காதல், திருமணம் தொடர்பான ஆவணப்படம் வெளியாகி உள்ளது. 'Nayanthara: Beyond the Fairy Tale' என்ற பெயரில் இந்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் நேற்று வெளியானது.

இந்த ஆவணப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரு தரப்பினர் ஆவணப்படத்தை பாராட்டி வரும் நிலையில், இன்னொரு தரப்பினரோ எல்லாமே தெரிந்தி விஷயம் தான். புதிதாக ஆவணப்படத்தில் எதுவுமே இல்லை என்று தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆவணப்படத்தில் நயன்தாராவை மையப்படுத்தும் கதைக்களம் என்பது அவர் நடிகையாக ஆனது எப்படி? சிலம்பரசன், பிரபுதேவாவை பிரிந்தது ஏன்? விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டது எப்படி? என்பதோடு இருவரும் திருமணம் செய்து கொண்டது வரை விவரிக்கிறது. இந்த ஆவணப்படம் ஏற்கனவே சர்ச்சையான நிலையில் தற்போது நடிகர் சிம்பு, பிரபுதேவா பற்றியும் இதில் நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.

பெயர்களை குறிப்பிடாமல் நயன்தாரா பேசியுள்ளார். சிம்பு பற்றி நயன்தாரா கூறுகையில், ‛‛என்னை பொறுத்தவரை ரிலேஷன்ஷிப் என்று வந்துவிட்டால் நான் 100 சதவீதம் என்னையே ஒப்படைத்துவிடுவேன். அதையே மற்றவர்களிடம் இருந்தும் எதிர்பார்ப்பேன். ஆனால் என் முதல் காதலில் அது நடக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார். அதாவது நடிகர் சிம்பு, நயன்தாராவுடன் 100 சதவீதம் உண்மையாக, உறுதியாக இல்லை என்பது போல் தெரிவித்துள்ளார்.

அதேபோல் பிரபுதேவா பற்றி பேசுகையில், ‛‛என்னை சினிமாவில் நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டார். இதனால் என்ன செய்வது என்பது பற்றி தெரியாமல்இருந்தேன். மேலும் சினிமாவை விட்டு விலகவும் முடிவு செய்தேன்'' என்று கூறியுள்ளார். இப்படியாக சிம்பு, பிரபுதேவா ஆகியோர் பற்றி பெயர் குறிப்பிடாமல் நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். இது தற்போது பேசுப்பொருளாகி உள்ளது.

முன்னதாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு ‛நானும் ரவுடிதான்' என்ற படத்தில் தான் காதல் மலர்ந்தது. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவும், விஜய் சேதுபதியும் நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் படத்தை இயக்க நடிகர் தனுஷ் தயாரித்து இருந்தார். இந்த ‛நானும் ரவுடித்தான்' திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட 3 வினாடி காட்சி இடம்பிடித்து இருந்தது.

முன்னதாக தங்களின் காதல் மலர காரணமாக இருந்த அந்த படத்தை நினைவு கூறும் வகையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோர் அந்த படத்தின் காட்சி, பாடலை பயன்படுத்த முடிவு செய்திருந்தனர். இதற்கு படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை. அதோடு 3 வினாடி காட்சிக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பினர். இதனால் நடிகை நயன்தாரா நேற்று நடிகர் தனுஷ் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை அடுக்கி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது விவாதத்தை கிளப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+