வேறு வழியே இல்லங்க.. இவரை கொண்டு வந்தால் சிக்கல்.. தோனி எடுத்த முடிவு.. அப்போ அடுத்த சிஎஸ்கே மேட்ச்?
சென்னை: சிஎஸ்கே இந்த 2023 ஐபிஎல் சீசனில் ஆட உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் அதே அணியுடன்தான் ஆடும், மாற்றம் இருக்காது என்று அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2023 ஐபிஎல் சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நடக்கும் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் பெங்களூர் அணி தோல்வி அடைந்தால், பெங்களூர் அணி இந்த தொடரில் இருந்து வெளியேறும்.
இதன் மூலம் சிஎஸ்கே அணி ப்ளே ஆப் செல்லும். இல்லையென்றால் சிஎஸ்கே அணி டெல்லிக்கு எதிராக நடக்கும் அடுத்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
சிஎஸ்கே அணி ப்ளே ஆப் செல்ல போராடிக்கொண்டு இருக்கும் நிலையில்தான் அணியில் இருக்கும் முக்கியமான வீரரான பென் ஸ்டோக்ஸ் நாட்டிற்கு திரும்பி செல்ல முடிவு செய்துள்ளார்.

திரும்பி செல்வார்:டெல்லி அணிக்கு எதிராக நடக்கும் போட்டிக்கு பின்பாக அவர் நாட்டிற்கு திரும்பி செல்வார். சிஎஸ்கே அணி ப்ளே ஆப் ஆடினாலும் கூட இவர் சிஎஸ்கே அணியில் இடம்பெற மாட்டார்.
சிஎஸ்கே அணியில் கேப்டன் மெட்டீரியலாக இருப்பவர் பென் ஸ்டோக்ஸ். ஆனால் அவர் இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. அவர் காயம் காரணமாக களமிறங்கவில்லை. வாய்ப்பு கிடைத்த போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை.
தொடக்கத்தில் சில போட்டிகளில் ஆடியவர் மோசமாக சொதப்பினார். இவருக்கு 16 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. தோனி - ஸ்டோக்ஸ் காம்போ பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக இவரால் ஆட முடியவில்லை. இதுவே சிஎஸ்கே அணிக்கு எதிராக திரும்பியது .
மாற்றம் இல்லை:இதனால் சிஎஸ்கே ஆடும் அடுத்த போட்டியில் பிளேயிங் 11ல் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. அதாவது பென் ஸ்டோக்ஸ் ஒரு மேட்ச் மட்டுமே இருப்பார்.
அவரை ஒரு போட்டிக்காக எடுத்தால் அது சரியாக இருக்காது. அதனால் அவரை அணியில் எடுக்காமல்.. அதே அணியை வைத்து சிஎஸ்கே ஆடும்.
சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேட்ச் & விக்கெட்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் ஆட வாய்ப்புகள் உள்ளன.
போட்டி டெல்லியில் நடப்பதால் மொயின் அலி தொடர வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
சிஎஸ்கே அணியில் மிட்சல் சான்டனர் மொயின் அலிக்கு பதிலாக ஆட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் சாண்ட்னர் 4 ஓவரில் 28 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். லக்னோவிற்கு எதிரான போட்டியில் வெறும் 21 ரன்களை கொடுத்து ரன் செல்வதை கட்டுப்படுத்தி 1 விக்கெட் எடுத்தார்.
இவர் 2018ல் இருந்து ஐபிஎல்லில் ஆடி வருகிறார். ஆனால் இவர் வெறும் 15 போட்டிகளில் மட்டுமே ஆடும் லெவனில் ஆடி உள்ளார்.

சிஎஸ்கேவில் எடுக்கப்பட்டதில் இருந்தே இவருக்கு அணியில் பெரிதாக வாய்ப்புகள் எல்லாம் கிடைப்பது இல்லை. எப்போதாவது பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும். அணியில் இவர் இருப்பதே சந்தேகம்தான். பிராவோ இருந்தவரை இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பதே அரிதாக இருந்தது. நியூசிலாந்து அணியில் இவர் மிக முக்கியமான வீரர்.
அதோடு அங்கே சமயங்களில் கேப்டனாக கூட இருந்துள்ளார். ஆனாலும் கூட ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே இவருக்கு பெரிதாக சான்ஸ் கொடுத்ததே இல்லை. ஆனால் அதை பற்றி எல்லாம் இவர் கவலைப்பட்டதே இல்லை. இவர் அதை பற்றி எங்கும் புகார் கொடுத்தது இல்லை. எனக்கு வாய்ப்பு தரவில்லை, என்னை புறக்கணிக்கிறார்கள் என்றெல்லாம் பேட்டி கொடுத்தது இல்லை.
அதே சமயம் அணியில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவர் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் இவர் சிறப்பாக ஆடி உள்ளார். பேட்டிங்கிலும் அவ்வப்போது நம்பிக்கை கொடுத்துள்ளார். பிராவோ இல்லாத நிலையில், சாண்ட்னருக்கு தற்போது தொடர் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொயின் அலி அந்த வாய்ப்பை பெறுகிறார்.
இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணியில் மிட்சல் சான்டனர் மொயின் அலிக்கு பதிலாக ஆட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications