ஒண்ணா ரெண்டா? டெல்லியில் எதிரொலித்த குமுறல்.. தமிழக பாஜகவுக்கு அரணாக இறங்கிய மேலிடம்.. பின்னணி என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவினர் மாநில அரசால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விசாரித்து அறிக்கை தர குழு அமைத்துள்ளது பாஜக மேலிடம். அடுத்தடுத்த சம்பவங்கள் குறித்து டெல்லிக்கு போன ரிப்போர்ட்டால் டென்ஷனாகியே பாஜக தலைமை இந்த அதிரடி உத்தரவை போட்டுள்ளதாம்.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தலைமையில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அண்ணாமலையின் விமர்சனம் காரணமாக அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் பாஜக மூன்றாவது அணியை கட்டமைக்க முயன்று வருகிறது.

பாஜக தீவிரம்: இந்த தேர்தலில் பாஜகவின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு பாஜக குறியாகச் செயல்பட்டு வருகிறது. அண்ணாமலையின் வருகைக்குப் பிறகு பாஜகவின் களச் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. சமூக வலைதளங்களிலும், அண்ணாமலைக்கு ஆதரவாக ஒரு பெரும் படையே இயங்கி வருகிறது. அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாதயாத்திரை முடிந்துள்ளது.
இந்நிலையில் தான் சென்னை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு முன்பு அமைக்கப்பட்ட பாஜக கொடி கம்பம் தமிழக போலீசார் துணையுடன் அரசால் அகற்றப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் ஜேசிபி மூலம் கொடிக்கம்பம் அகற்றப்பட்ட நிலையில் தகவலறிந்து குவிந்த பாஜக தொண்டர்கள் ரகளை செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜக நிர்வாகி ஒருவரின் மண்டை உடைந்தது. தொடர்ந்து, ஜேசிபி கண்ணாடியை உடைத்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாஜக கொந்தளிப்பு: பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்டு, பாஜகவினர் கைது செய்யப்பட்ட சம்பவம், தமிழக பாஜகவினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. திமுக அரசு பாஜகவை வெறுப்புணர்வுடன் கையாள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் மாநில அரசால் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்து பார்வையிட பாஜக மேலிடம் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக அரசு தமிழக பாஜகவினர் மீது காவல் துறையினை ஏவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவது குறித்து நேரில் சென்று விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் முன்னாள் முதலமைச்சர் சதானந்த கவுடா, எம்.பி சத்ய பால் சிங், ஆந்திரா பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, பாஜக எம்.பி மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பின்னணி என்ன?: பாஜக தலைமையின் இந்த அதிரடி முடிவுக்கு நேற்று நடந்த கொடிக்கம்பம் விவகாரம் மட்டும் காரணம் இல்லையாம். வரிசையாக அடுத்தடுத்து நடைபெற்று வரும் பாஜக நிர்வாகிகள் கைது சம்பவங்கள், அதிலும் குறிப்பாக, வார இறுதி நாட்களில் கைது செய்து, கோர்ட் விடுமுறையால் ஜாமீன் கிடைக்க விடாமல் செய்வது போன்றவை குறித்து டெல்லிக்கு ரிப்போர்ட் பறந்ததன் காரணமாகவே, திமுக அரசை கண்ட்ரோல் செய்ய வேண்டும் என தேசிய தலைமை முடிவெடுத்துள்ளதாம்.
அதாவது, இந்த கொடிக்கம்பம் விவகாரத்தில் மண்டை உடைந்தது, கைது நடவடிக்கை மட்டுமல்ல, சமூக வலைதளங்களில் திமுகவை கடுமையாக விமர்சிக்கும் பலர் அடுத்தடுத்து கைது செய்யப்படுவது, அதுவும் நள்ளிரவு நேரங்களில் கைது செய்யப்படுவது, ஜாமீன் மறுக்கப்படுவது ஆகியவை, பாஜகவுக்கு திமுக அரசால் கொடுக்கப்படும் அச்சுறுத்தல் என்றே தமிழ்நாடு பாஜக விமர்சித்து வருகிறது.

பாஜகவினர் அடுத்தடுத்து கைது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஜான் ரவியை மதுரை மாநகர் போலீசார் தூத்துக்குடியில் இன்று கைது செய்தனர். ஜான் ரவியின் தந்தை சில நாட்களுக்கு முன்னர் இறந்த நிலையில், அவருக்கு 16ஆம் நாள் காரியம் செய்வதற்காக தூத்துக்குடியில் தனது வீட்டில் இருக்கும்போது மதுரை மாநகர போலீசார் வந்து ஜான் ரவியை கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி குறித்து இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணியின் மாநில செயற்குழு உறுப்பினரும், இளைஞரணியின் சமூக ஊடக பொறுப்பாளருமான பிரவீன் ராஜ் என்ற சங்கி பிரின்ஸ் நள்ளிரவு நேரத்தில் 2 மணிக்கு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மேலிடம் டென்ஷன்: சில மாதங்களுக்கு முன்பு, பாஜக தொழில் பிரிவு மாநில துணை தலைவர் செல்வக்குமார், சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதுபோன்ற தொடர்ச்சியான சம்பவங்களின் காரணமாகவே, தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு பாஜகவினரை குறிவைத்துள்ளதாக டெல்லிக்கு புகார் சென்றுள்ளது.
தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் இதுபோன்ற சம்பவங்களின் காரணமாகவே, டெல்லி தலைமை, முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா உள்ளிட்டோர் அடங்கிய 4 பேர் டீமை அமைத்து தமிழ்நாட்டுக்கு அனுப்புகிறதாம். பாஜகவினரை தட்டித் தூக்கும் திமுக அரசுக்கு, பாஜக தலைமை விடுக்கும் மறைமுக எச்சரிக்கை தான் இந்த குழு என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.
-
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?










Click it and Unblock the Notifications