கையை குலுக்கி.. ஒரே சிரிப்பு! மோடியிடம் ஸ்டாலின் காட்டிய நெருக்கம்! அட திருமாவளவன் இப்படி சொல்றாரே
சென்னை: பிரதமருடன் ஸ்டாலின் நெருக்கமாக இருந்தது தொடர்பாக விசிக எம்பி திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் பிரதமர் மோடி மேற்கொண்ட தமிழ்நாடு பயணம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார். கோவையில் இருந்து சென்னைக்கு வரும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

அதன்பின் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஒருங்கிணைந்த புதிய டெர்மினல் 1 ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதேபோல் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.
இதையடுத்து பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் 20 நிமிடம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர் இறையன்பு உடன் இருந்தார். இந்த நிகழ்வு முழுக்க பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் நெருக்கமாக, அன்பாக இருந்தார். அரசியல் வேறுபாடுகளை கடந்த இவர்கள் கை குலுக்கி, சிரித்தபடி இருந்தனர்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் இந்த செயலால் திமுக - பாஜக நெருங்கி வருகிறதோ என்ற கேள்வி சமூக ஊடகங்களில் பலராலும் வைக்கப்பட்டது. ஆனால் அதை முறியடிக்கும் வகையில் நேற்றே பாஜகவையும், ஆளுநரையும் விமர்சனம் செய்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதோடு ஆளுநருக்கு எதிராக தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.
இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் நண்பராக செயல்பட மறுக்கிறார் ஆளுநர் ரவி. ஆளுநர் பொதுவெளியில் அரசு நடவடிக்கைகளை விமர்சிக்கிறார். பிரதமரிடம் தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ரவி. ஆளுநர் திறந்த மனத்துடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல.
வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை, அவரின் செயல்பாடுகளைத் தான் விமர்சிக்கிறோம். சட்டமன்றத்திற்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால் அதனை கை கட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம். அரசியல் சட்டம் ஆளுநருக்கு தெரியவில்லை என்று கூறமாட்டேன். ஆனால் அவருக்கு இருக்க வேண்டிய "அரசியல் சட்ட விசுவாசத்தை", "அரசியல் விசுவாசம்" அப்படியே விழுங்கி விட்டது என்றே அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன், என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் பிரதமருடன் ஸ்டாலின் நெருக்கமாக இருந்தது தொடர்பாக பேட்டி அளித்த விசிக எம்பி திருமாவளவன், ஆளும் கட்சி எப்படி செயல்பட வேண்டுமோ அப்படித்தான் செயல்பட்டு இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சட்ட வரைமுறை படியே பிரதமரை முதல்வர் ஸ்டாலினும் வரவேற்று உள்ளார். அவருடன் ஜனநாயக ரீதியாகவே செயல்பட்டு இருக்கிறார். ஆளுநர், மோடியின் ஜனநாயக விரோத போக்கினை கண்டிப்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. அதை முதல்வர் ஸ்டாலின் பல இடங்களில் உறுதிப்படுத்தி உள்ளார்.
அப்படி இருக்க சட்டத்திற்கு உட்பட்டே அவர்கள் இப்படி பிரதமரை வரவேற்கிறார்கள். இதை தவறு என்று சொல்ல முடியாது. பாஜகவை எதிர்க்கும் லட்சியத்தில் இருந்து திமுக நழுவிவிட்டதாக சொல்ல முடியாது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் வேறு வழியின்றி அதை ஆளுநர் ஒப்புக்கொண்டு உள்ளார், என்று திருமாவளவன் குறிப்பிட்டு உள்ளார்.
-
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications