மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் திணறி வருகிறது. இதற்கிடையே தான் தமிழ்நாடு தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழுவினர் தலைவராக செயல்பட்டு வந்த மாணிக்கம் தாகூர் இன்று திடீரென்று அந்த பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதோடு காங்கிரஸ் கட்சியின் குழப்பத்தின் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

2026 சட்டசபை தேர்தலில் வேட்புமனு தாக்கல் வரும் திங்கள்கிழமையோடு (ஏப்ரல்6) முடிவடைய உள்ளது. தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

why-did-manickam-tagore-who-stepped-down-from-the-post-of-chairman-of-the-tamil-nadu-election-manage

ஆனால் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சிகளும் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் உள்ளன.

பாஜகவில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் தற்போதைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் இடையே பவர் பாலிடிக்ஸ் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸில் என்ன நடக்கிறது? என்று தெரியாமல் வேட்பாளர் பட்டியல் இன்னும் இறுதியாகமல் உள்ளது.

வேட்பாளர் பட்டியலில் இழுபறி

திமுக கூட்டணியில் கடந்த முறை காங்கிரஸ் 25 தொகுதிகளில் இந்த முறை காங்கிரஸ் திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இதோ அதோ என்று வெளியாவதில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.

பதவி விலகிய காங்கிரஸ்

இந்நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக பொறுப்பேற்று இருந்த மாணிக்கம் தாகூர் அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மாணிக்கம் தாகூர் எழுதியுள்ள கடிதத்தில் தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

எதிர்ப்பை தொடர்ந்து அதிருப்தி

தமிழகத்தில் தேர்தல் பேச்சு வார்த்தை தொடங்கிய உடனே ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை மாணிக்கம் தாகூர் முன் வைத்தார். ஆனால் இதை செல்வ பெருந்தகை உள்ளிட்ட தமிழக காங்கிரசின் தற்போதைய தலைவர்கள் ஏற்கவில்லை. அப்போது இருந்தே காங்கிரஸ் கட்சிக்குள் சடுகுடு ஆரம்பித்துவிட்டது.

இப்போது அது உச்சத்தை எட்டி உள்ளது. செல்வப் பெருந்தகையின் எந்த முடிவுக்கும் மாணிக்கம் தாகூர், கரூர் எம்பி ஜோதிமணி, சிவகங்கை எம் பி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக மாணிக்கம் தாகூர் அறிவித்திருப்பது காங்கிரஸ் கட்சிகள் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸால் திமுகவுக்கு சிக்கல்

வேட்பு மனு தாக்கல் முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாதது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும் திமுகவின் முக்கிய தலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை சொல்லி வாக்கு சேகரிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

கண்டுக்கொள்ளாத ராகுல்

தமிழக காங்கிரஸ் கட்சியில் இவ்வளவு குழப்பம் நிலவி வரும் நிலையில் அதைப் பற்றி ராகுல் காந்தி கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இதனால் என்ன தான் ஆச்சு காங்கிரசுக்கு? என சாமானிய வாக்காளர்கள் சந்தேகத்துடன் கேட்கத் தொடங்கி விட்டனர். இது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை கணிசமாக பாதிக்கும் என்பதோடு திமுகவிற்கும் திமுக கூட்டணிக்கும் சறுக்கலாகவும் சவாலாகவும் அமையும் என்பதுதான் உண்மை.

- Freelancer

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+