திரும்ப திரும்ப கேட்குறீங்க! கடுப்பான அமைச்சர்! சட்டென கண்ணை காட்டிய முதல்வர்! அடுத்து நடந்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று சட்டசபையில் அமைச்சர் ஆர். காந்தி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துக்கொண்டு இருந்த போது நடந்த சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று காலை சட்டசபையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் பல்வேறு துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு இன்று அவையில் அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

அதிமுக எம்எல்ஏ

அதிமுக எம்எல்ஏ

இன்று அவையில் கேள்வி எழுப்பிய அதிமுக எம்எல்ஏ அக்ரி எஸ்எஸ் கிருஷ்ணமூர்த்தி, பராமரிப்பு இன்றியும் பலன் தருபவை பனை மரங்கள். பனை மரங்களை நட்ட பின் கவனிக்க வேண்டியது இல்லை. இது தமிழ்நாட்டின் மாநில மரம். சங்க காலத்தில் இருந்து பனை மரங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றோடு இணைந்துள்ளது. இதற்கு சங்க இலக்கியங்களே சான்று. தமிழ்நாட்டில் 5 கோடி பனை மரங்கள் உள்ளன.

பனை கேள்வி

பனை கேள்வி

3 லட்சம் குடும்பங்கள், பனை மரங்களை வைத்து பணிகளை செய்கின்றன. கூடை பின்னுதல், கயிறு திரித்தல் உள்ளிட்ட பணிகளை செய்கின்றன. பனை அந்த அளவிற்கு பலனை தர கூடிய ஒன்று., பனை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் பனை தொழில் சார்ந்த தொழில் கூடங்களை அமைக்க வேண்டும். இதற்கு அரசிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா என்று தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் பதில்

அமைச்சர் பதில்

இதற்கு பதில் அளித்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தமிழ்நாட்டில் பனை தொழிலை மேம்படுத்த அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. முக்கியமாக ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்தல், இதற்கான பயிற்சி அளித்தல், பனை ஓலை தயாரிக்கும் பயிற்சி அளித்தல் போன்ற பணிகளை அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் 10 லட்சம் பேர் பனை சார்ந்த தொழிலை செய்து வருகிறார்கள்.

பனை துறை

பனை துறை

இவர்களில் பலர் பதிவு செய்யவில்லை. அவர்கள் பதிவு செய்ய முன் வர வேண்டும். அதேபோல் கூட்டுறவு வங்கி மூலமும், அரசின் நிதி உதவி மூலமும் இவர்கள் தொழிற்கூடங்களை அமைக்க முடியும் என்று குறிப்பிட்டார். இதையடுத்து மீண்டும் பேசிய அதிமுக எம்எல்ஏ அக்ரி எஸ்எஸ் கிருஷ்ணமூர்த்தி, பனை துறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூலம் தொடங்கப்பட்டது. பனைமரம் ஏறும் எந்திரங்கள் வாங்க, தொழிற்கூடங்கள் அமைக்க 75 சதவிகித நிதிக்கு உதவி தரும் என்று அரசு கூறியுள்ளது.

விவசாயிகள் நலன்

விவசாயிகள் நலன்

இந்த வாய்ப்பை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பனை விவசாயிகள் பெறும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அக்ரி எஸ்எஸ் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்தார்.இதையடுத்து மீண்டும் பேசிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்று 10 மாதம் ஆகிறது. எல்லா துறைகளையும் அவர் கவனித்து வருகிறார். நீங்கள் வைத்த கோரிக்கைகளுக்கு எல்லாம் முதல்வர் ஸ்டாலின் எப்போதோ பதில் சொல்லிவிட்டார்.

மீண்டும் மீண்டும் கேள்வி

மீண்டும் மீண்டும் கேள்வி

திருப்பி திருப்பி நீங்கள் அதே விஷயங்களை கேட்கிறீர்கள். நீங்கள் ஒரே விஷயத்தை பேசி.. அதில் ஆங்காங்கே அம்மா, அம்மா என்று சேர்த்துக்கொள்கிறீர்கள். நாங்கள் எல்லாம் அனைத்தையும் கிளியராக சொல்லிவிட்டோம். பனைத்துறையில் என்ன செய்வோம் என்று விளக்கிவிட்டோம். ஆனால் மீண்டும் அதையே கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். எங்கள் முதல்வரின் துறையை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். முன்னாள் முதல்வரின் கையில் என்ன துறை இருந்தது தெரியுமா?

முதல்வர் சைகை

முதல்வர் சைகை

எங்கள் முதல்வரின் கையில் மாற்று திறனாளிகள் துறை உள்ளது. அவரின் சிந்தனையை பாருங்கள். உலகமே அதனால்தான் அவரை பாராட்டுகிறது என்று அமைச்சர் காந்தி கூறினார். அமைச்சர் இப்படி முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசியதும் அங்கிருந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேடையை தட்டி அதை வரவேற்றனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் சட்டென திரும்பி அமைச்சர் துரைமுருகனை பார்த்து திடீரென கண் அசைத்தார். அதோடு அவரிடம் அமைதியாக எதோ சொன்னார்.

 பேச்சை நிறுத்திய அமைச்சர்

பேச்சை நிறுத்திய அமைச்சர்

இதையடுத்து துரைமுருகன் சட்டென திரும்பி அமைச்சர் காந்தியின் பேச்சை முடித்துக்கொள்ளுமாறு கிசுகிசுத்தார். இதையடுத்து அமைச்சர் காந்தி.. சரி ரைட் என்று கூறி தனது உரையை சட்டென முடித்தார். பொதுவாக சட்டசபையில் தன்னை பற்றி புகழ் உரைகளை பாட கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் முன்பே குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில்தான் இன்று கேள்வி நேரம் முடியும் சமயத்தில் அமைச்சர் காந்தி முதல்வரை பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டு இருந்தார். இதையடுத்தே அவரின் உரையை முடித்துக்கொள்ளும்படி முதல்வர் அமைதியாக குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+