அண்ணாமலை சீனியர்களை மதிப்பதில்லை.. மீண்டும் பாஜகவில் புகைச்சல்.. பொன்னார் ஆதரவாளர் தாவிய பின்னணி!
பாஜகவில் பொன்னார் ஆதரவாளராக இருந்த சிவபாலன், அண்ணாமலை சீனியர்களை மதிப்பதில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : பாஜகவில் பல ஆண்டுகளாக கடுமையாக வேலை செய்தவர்களுக்கு மரியாதை இல்லை எனவும் திமுக அரசின் செயல்பாடு மீது ஈர்ப்பு ஏற்பட்டு திமுகவில் இணைந்ததாகவும் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த சிவபாலன் கூறியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பொறுப்புக்கு வந்தது முதலே அவர் சீனியர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், இப்போது கட்சியினர் அதைச் சொல்லி விலகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை மீதான அதிருப்தியில் பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில செயலாளர் சிவபாலன், அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார்.
குமரி மாவட்ட பாஜகவில் தீவிரமாக இயங்கி வந்த சிவபாலன் பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த நிலையில், அவர் அண்ணாமலை மீது புகார் கூறியிருப்பது பாஜக வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோஷ்டி மோதல்
அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றது முதலே, சீனியர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது. தனக்கு ஆதரவான இளைஞர்களையே கட்சியின் அனைத்து மட்டத்திலும் பொறுப்புக்கு கொண்டு வர அண்ணாமலை முயற்சிப்பதாகவும், அதனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராக இருக்கும் கேசவ விநாயகத்திற்கும், அண்ணாமலைக்கும் இடையே பனிப்போர் இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இதனால், அண்மையில் கட்சிக்குள் சில மோதல்களும் ஏற்பட்டன.

அதிருப்தி
கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தொடர்ந்து தேசிய தலைமை, தமிழ்நாடு மாநில நிர்வாகிகளிடம் பேசியது. அதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சுமூக நிலை இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் முதல் மீண்டும் பாஜகவில் நிர்வாகிகள் பலரும் அண்ணாமலை மீது குற்றம்சாட்டி மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் கன்னியாகுமரி மாவட்ட பாஜகவில் முக்கியப் புள்ளிகளில் ஒருவராக வலம் வந்த பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் சிவபாலன், திமுக அமைச்சர் மனோ தங்கராஜை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

பாஜக டூ திமுக
சிவபாலன், பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளராகச் செயல்பட்டவர். பொன்.ராதாகிருஷ்ணன் - அண்ணாமலை இடையிலேயே முரண்கள் இருந்து வந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில், பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான சிவபாலன், பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குமரி மாவட்ட பாஜக - திமுக இடையே நீண்டகாலமாக தொடர் மோதல்கள் நிகழ்ந்து வரும் சூழலில் பாஜகவில் இருந்து திமுகவுக்கு வந்துள்ளார் சிவபாலன்.

மாற்றாந்தாய் மனப்பான்மை
திமுகவில் இணைந்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவபாலன், "திமுக சமூகநீதி, மதச்சார்பின்மை என அனைவருக்குமான பாதையில் பயணிக்கிறது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக. அக்கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுகிறது. ஜி.எஸ்.டி வருவாயில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கிவிட்டு தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஒதுக்குகின்றனர்.

அண்ணாமலை
அண்ணாமலை மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதை விட்டுவிட்டு மக்களிடையே பிரச்சனைகள் ஏற்படும் வகையில் பேசி வருகிறார். பாஜக தொடர்ந்து சாதி, மதம், மாநிலம் ரீதியாக பிரச்சனைகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிடுவதை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாது. அண்ணாமலை விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்.

சீனியர்களுக்கு மரியாதை இல்லை
தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது வெறுப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜக அரசியல் செய்கிறது. நான் பாஜகவில் 20 ஆண்டுகளாக வேலை செய்து இருக்கிறேன். பாஜக இளைஞரணியின் மாநிலச் செயலாளராகவும் இருந்தேன். அண்ணாமலை பழைய நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை தருவதில்லை. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் மெச்சும்படி உள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜின் செயல்பாடுகளும் பிடித்து இருந்ததால் திமுகவில் இணைந்தேன்" என்றார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications