"தமிழ்" படித்தால் மட்டும்தான் அரசு வேலையா.. நாங்கள் என்ன செய்வது.. மு.க.ஸ்டாலினுக்கு பறந்த லெட்டர்
செவித்திறன் குறையுடையோர் பெற்றோர் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளது
சென்னை: செவித்திறன் குறையுடையவர்களுக்கு தமிழ் தவிர்த்து பிற தேர்வை தமிழ், ஆங்கில வழியில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று செவித்திறன் குறையுடையோர் பெற்றோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.. இது தொடர்பாக அந்த சங்கம், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளது.
தமிழ் கற்றவர்களுக்கு மட்டுமே அரசுப் பணி கிடைக்கும் என்று தற்போதைய திமுக அரசு அறிவித்துள்ளது.. கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் , தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்வதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

செவித்திறன்
தமிழக இளைஞர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு உறுதி செய்யும் இந்த திட்டமானது பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்றாலும், செவித்திறன் குறையுடையவர்களுக்கு இதில் தளர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ் தவிர்த்து பிற தேர்வை தமிழ், ஆங்கில வழியில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று செவித்திறன் குறையுடையோர் பெற்றோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.. இது தொடர்பாக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

அரசுப்பணி
"சட்டப்பேரவையில் சமீபத்தில் அமைச்சர் அறிவித்த திட்டம் மூலம்,தமிழ் கற்றவர்களுக்கு மட்டுமே அரசுப்பணி கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செவித்திறன் குறையுடையோர் தங்கள் எதிர்காலத்தை எண்ணி மனக்கலக்கம் அடைந்துள்ளனர். செவித்திறன் குறையுடையோர் இந்த உலகை எப்போதும் ஓசையற்ற நிலையில்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

உடல்மொழி
அடுத்தவர் என்ன கூறுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை அறிய நிறைய போராடுகின்றனர். உதட்டின் அசைவு மூலமும், உடல் மொழி மூலமும் போராடித் தான் புரிந்து கொள்ள முயற்சி செய்கின்றனர். இவற்றைக் கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு, செவித்திறன் குறையுடையவர்களுக்கு ஒரு மொழி கற்றல் முறையை அமல்படுத்தி ஒன்றாவது வகுப்பு முதல் முதுநிலை கல்வி வரை 2-வது மொழிக்கு விலக்களித்துள்ளது.

செவித்திறன்
இவ்வழியில் தமிழகத்தில் தமிழ்வழி, ஆங்கில வழி படித்த செவித்திறன் குறையுடைய மாணவர்கள் சரிசமமாக உள்ளனர். செவித்திறன் குறையுடையவர்களுக்கும் மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் நல்லகல்வி அளித்து, பணியில் சேருவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டியது பெற்றோர் மற்றும் அரசின் கடமையாகும். உயர்கல்வி கற்க கலை, பொருளாதாரம் மற்றும் கணினி சம்பந்தப்பட்ட அறிவியல் மட்டுமே அவர்களுக்கு தரப்பட்ட பிரிவுகளாக உள்ளது.

ஆங்கில வழி கல்வி
வேலையிலும் குறைவான வாய்ப்புகளே உள்ளன. இந்த இக்கட்டான சூழலில், செவித்திறன் குறையுடைய பிள்ளைகளின் வாய்ப்பை மேலும் மாநில மொழிக்கல்வி மூலம் குறைத்துக் கொள்ளக்கூடாது என்பதாலும், ஒரு மொழிமட்டுமே கற்க முடியும் என்பதாலும் ஆங்கில வழிக் கல்வியை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியான அரசாணை அவர்களை மனஅழுத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே, செவித்திறன் குறையுடையவர்களுக்கு தமிழ் தவிர்த்துபிற தேர்வை முந்தைய வழக்கப்படி தமிழ், ஆங்கில வழியில் எழுத அனுமதிக்க வேண்டும்" என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications