சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இடிக்குதே".. அன்று ஓபிஎஸ், இன்று மகன்..செம ராஜதந்திரம்.. ஸ்டாலினை ரவீந்திரநாத் தனியாக சந்தித்து ஏன்

அதிமுக எம்பி ரவீந்திரநாத், முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலினை, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தனியாக சந்தித்து பேசியதன் அதிர்வு இன்னும் அடங்கவில்லை.. இது பல்வேறு யூகங்களை அரசியல் தளத்தில் ஏற்படுத்தி வருகிறது.

மாநில வளர்ச்சிக்குழுக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.. இதில் அனைத்து கட்சிகளின் எம்பிக்களும் கலந்துகொண்டனர்...

ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ் ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ்

குறிப்பாக, விசிக தலைவர் திருவமாவளவன், காங்கிரஸ் திருநாவுகரசர் உட்பட அனைவரும் பங்கேற்றனர்... அதிமுக சார்பில், எம்பிக்கள் ரவீந்திரநாத்குமார், நவநீதகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது:

 திருமாவளவன்

திருமாவளவன்

"நீங்கள் அனைவரும் ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சிக்கு ஆலோசனை சொல்வதற்காக வந்திருக்கிறீர்கள்.. இந்த ஆட்சி அமைந்தபோதே நான் குறிப்பிட்டு ஒன்றை சொல்லி இருந்தேன்.. இது என்னுடைய அரசு கிடையாது.. நம்முடைய அரசு என்று சொன்னேன்.. நம்முடைய அரசு என்ற பரந்த உள்ளத்தோடு நீங்கள் எல்லாரும் இங்கே வந்துள்ளது மகிழ்ச்சி.. நம் மாநிலத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற ஆலோசனைகளை சொல்லுங்கள்" என்றார்.

Recommended Video

    CM Stalin-ஐ சந்தித்த AIADMK MP Ravindhranath Kumar
     ரவீந்திரநாத்

    ரவீந்திரநாத்

    இந்த கூட்டம் முடிந்ததுமே, முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலகத்திலுள்ள தன்னுடைய அலுவலகத்துக்கு சென்றுவிட்டார்.. பிறகு சற்று நேரத்தில், தேனி எம்பி ஓ.பி. ரவிந்திரநாத் முதல்வரை அதே அலுவலகத்தில் தனியாக சந்தித்து பேசினார்... உள்ளே நுழைந்ததுமே, பாரதியார் கவிதைகள் புத்தகத்தை முதல்வருக்கு எம்பி ரவீந்திரநாத் பரிசாக அளித்தார்.. தொடர்ந்து, தேனி மக்களவை தொகுதிக்கான மற்ற கோரிக்கைகள் குறித்த மனுவை முதல்வரிடம் அளித்தார்..

     தனியாக சந்தித்தார்

    தனியாக சந்தித்தார்

    ஸ்டாலினை, ஓ.பி. ரவிந்திரநாத் தனியாக சந்தித்து மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை அப்போதே ஏற்படுத்தியது.. தொகுதிகளுக்கான கோரிக்கை குறித்த மனுவை முதல்வரிடம் ஒரு எம்பி வழங்குவது என்பது இயல்பான விஷயமே.. எம்பிக்கள் என்றில்லை, யாராக இருந்தாலும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற ஒரு மாநில முதல்வரை அணுகுவது வழக்கமான ஒன்றுதான்.. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுகூட, எதிர்க்கட்சியான திமுக தரப்பில் எத்தனையோ பேர் இப்படி துறை ரீதியான சந்திப்புகளை நடத்தி உள்ளனர்.

     சலசலப்பு

    சலசலப்பு

    அந்த வகையில் ரவீந்திரநாத், ஸ்டாலினை சந்தித்து பேசியது வழக்கமானதாக எடுத்து கொண்டாலும்கூட, அதையும் மீறி சலசலப்பு எழுந்துள்ளது.. அதற்கு முதல் காரணம், எம்பிக்கள் அனைவருமாக சென்று முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்காமல், தனியாக சென்று ஸ்டாலினை சந்தித்ததுதான்.. அதைவிட முக்கியம், திமுக அரசை ரவீந்திரநாத் பாராட்டினாராம்.. அவர் அளித்த மனுவில், "தமிழக மக்கள் நலனில் மிகுந்த அர்ப்பணிப்போடு செயல்பட்டு வரும் தங்களுக்கும், தங்கள் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சுகாதாரத் துறைக்கும் பாராட்டுகள்" என்று பிரத்யேகமாக கூறியுள்ளாராம் ரவீந்திரநாத்.

     கோரிக்கை மனு

    கோரிக்கை மனு

    அதற்கு பிறகுதான், 'தேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் செயல்படும், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு, தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும். போதிய டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுள்ளதாக தெரிகிறது.. திமுக அரசின் செயல்பாடுகளை ஆரம்பத்தில் ஓபிஎஸ்ஸும் பாராட்டி இருந்ததை மறுக்க முடியாது.. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதலே, தலைமையுடன் இணக்கத்துடனேயே இருந்து வருகிறார் ஓபிஎஸ்..

     கருணாநிதி

    கருணாநிதி

    சட்டசபை நிகழ்வுகள் பலவற்றில், கருணாநிதியை பாராட்டுவது முதல் ஸ்டாலினை பாராட்டுவது வரை, நட்புடனேயே நடந்து கொள்கிறார்.. இது அரசியல் நாகரீகம் என்று பொதுவாக எடுத்து கொண்டாலும், எடப்பாடி அளவுக்கு ஸ்டாலினை ஓபிஎஸ் கடிந்து கொள்ளவில்லை என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.. இப்போது ரவீந்திரநாத்தும் ஸ்டாலினை புகழ்ந்துள்ளதுதான் பலரால் உற்று பார்க்கப்படுகிறது..

     எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    ஏற்கனவே அதிமுகவில் இடியாப்ப சிக்கல் உள்ளது.. எடப்பாடியும், ஓபிஎஸ்ஸை ஓவர்டேக் செய்துதான் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.. சசிகலா என்ன செய்ய போகிறார் என்றே இதுவரை விளங்கவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், ரவீந்திரநாத் முதல்வரை தனியாக சந்தித்து பேசி வாழ்த்து சொன்னதை, அரசியல் நாகரீகம் என்று எடுத்து கொள்வதா? அல்லது ஏதாவது ராஜதந்திர முயற்சி என்று எடுத்து கொள்வதா? தெரியவில்லை.. பார்ப்போம்..!

    English summary
    why did theni mp ravindhranath meet chief minister mk stalin, did he praise dmk government அதிமுக எம்பி ரவீந்திரநாத், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார், முதல்வரையும் எம்பி புகழ்ந்து பேசினாராம்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X