சீண்டி பார்க்குறாங்க.. திமுகவை உரசிய விஜயின் தவெக.. குறுக்கே புகுந்த உதயநிதி.. இப்படி சொல்லிட்டாரே
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் செய்த செயல் ஒன்று திமுக இளைஞரணியினரை கடுப்பாக்கி உள்ளதாம்.. இதன் காரணமாக நடிகர் விஜய்க்கு எதிராக கம்பு சுழற்ற நினைத்தனர் திமுக இளைஞரணியினர்.. ஆனால் இவர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
இதோ அதோ என இழுத்துக் கொண்டிருந்த துணை முதல்வர் பதவி நியமனம் கடந்த 28-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அந்த நியமனத்துடன் அமைச்சரவையும் 29-ந்தேதி மாற்றியமைத்தார் முதல்வர் ஸ்டாலின். அமைச்சரவை மாற்றத்தை விட, உதயநிதிக்கு துணை முதல்வர் ப்ரமோஷன் சம்பவத்தைத்தான் திமுக கொண்டாடித் தீர்த்தது.

துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியான பதவி கிடையாது. இதனால் துணை முதல்வர் என்கிற அந்தஸ்தை உதயநிதி பெறுகிற போது அது குறித்து அறிவிப்பு வந்தால் மட்டும் போதுமானது. அதாவது அரசு அறிவிப்பு மட்டுமே போதுமானது. ஆளுநர் பதவி ஏற்பு செய்துவைக்க தேவையில்லை.
அதிகாரி யார்?: உதயநிதி துணை முதல்வாராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அவருக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்த செயலாளர் பதவியை பிடிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர்கள் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் லாபி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
விஜய் கதை: துணை முதல்வரான உதயநிதியை திமுகவினரும் திமுக இளைஞரணியினரும் வாழ்த்தி விளம்பரப்படுத்தினர். இந்த கொண்டாட்டம் நடந்து கொண்டிந்த அதே சமயத்தில், த.வெ.கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசியபோது சொல்லிய ஒரு குட்டிக்கதையை மீண்டும் சோசியல் மீடியாக்களில் பரப்பினார்கள் த.வெ.க.வினர்.
அதாவது, ஒரு அப்பா இருந்தாரு, அவருடைய பையனுக்கு அப்பா சட்டையை போட்டுக்கொள்ள ஆசை. அந்த சட்டை தொள தொளன்னு இருக்கும்னு தெரிந்தும் போட்டுக்கொள்ள ஆசை என்கிற ஒரு குட்டிக் கதையை சொன்னார். அந்த கதையில் வரும் அப்பா, ஸ்டாலின் ; மகன், உதயநிதி. இதை மனதில் கொண்டு தான் அந்த கதையை சில நாட்களுக்கு முன்பு சொன்னார் விஜய்.
குறிப்பாக, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குங்கள் என்கிற வலியுறுத்தல்கள் அதிகரித்து வந்த சூழலில் இந்த கதையை சொன்னார். அப்பவே இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்பட்டு அந்த ஆனந்தத்தை திமுகவினர் கொண்டாடிய நாளில் மறு பிரசுரம் போல விஜய்யின் அந்த குட்டிக்கதையை வைரலாக்கி மகிழ்ந்தனர் த.வெ.க.வினர்.
விஜய்யின் அனுமதியில்லாமல் இது நடந்திருக்காது ; நம்மை சீண்டி பார்க்கிறார்கள் ; உரசி பார்க்கிறார்கள் ; இதனை சும்மா பார்த்துக்கொண்டிருக்க முடியாது ; பதிலடி தந்தாக வேண்டும் ; அனுமதி கொடுங்கள் என்று திமுக இளைஞரணியும், திமுக ஐ.டி.விங்கும் உதயநிதியின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கின்றன. ஆனால், டென்சன் ஆகாத உதயநிதி, எந்த பதிலடியும் தர வேண்டாம் ; நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவர்களை தடுத்திருக்கிறார் உதயநிதி.
அதன் பிறகுதான், விமர்சனங்களை வரவேற்கிறேன் ; எதிர்கொள்வேன் ; பதில் சொல்வேன் என்கிற ரீதியில் அவரிடமிருந்து ஒரு அறிக்கை வெளியானது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications