திடீர்ன்னு ஏன்? பார்த்தசாரதி கோயிலில்.. அன்னதானம் வழங்கிய உதயநிதியின் அறக்கட்டளை! அவர்தான் காரணம்?
சென்னை: 'உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை' சார்பில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு பின் முக்கியமான காரணம் உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமுஎகச சார்பில் சென்னை காமராஜர் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பில் 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது என்று கடுமையாக கூறினார்.
அதோடு, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.
( பாஜக + பாமக.. தமிழ்நாடு அரசியலே மாறப்போகுது.. அதிமுகவிற்கு பேரிடியாக மாறிய செய்தி.. போச்சே)
சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் என்று பேசினார்.
சனாதனம் பற்றிய பேச்சு: சனாதனம் குறித்த அவரின் பேச்சு தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவரின் பேச்சுக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாஜகவினர் பலரும் அவரின் பேச்சால் அரண்டு போய் உள்ளனர். அவருக்கு ஆதரவாகவும் குரல்கள் வர தொடங்கி உள்ளன,

இந்த நிலையில்தான், 'உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை' சார்பில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு பின் முக்கியமான காரணம் உள்ளதாக கூறப்படுகிறது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்குப் பக்தர்கள் பெருமளவில் வருகைதருவது வழக்கம். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமைகளில் பக்தர்கள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். அதுவும் மற்ற வைணவத் தலங்களைவிடச் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் பக்தர்கள் அதிகமாக வருவார்கள்.
நீண்ட நேரம் வரிசையில் நின்று பெருமாளைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு 'உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை' சார்பில் ஆண்டுதோறும் பிரசாதம் வழங்குவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமையான நேற்று தரிசனம் செய்த பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை சாதம், தயிர் சாதம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
காலை நடை திறந்ததில் தொடங்கி நள்ளிரவு நடை சாத்தும் வரை நாள் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. உதயநிதிக்கு சொல்லப்பட்ட யோசனையின் பேரிலேயே, தனது பெயரில் இருக்கும் அறக்கட்டளை சார்பில் இந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். முக்கியமான நபர் ஒருவர் கொடுத்த ஐடியாவின் பெயரில்தான் இந்த அன்னதானம் வழங்கப்பட்டு உள்ளதாம்.
( கண் அசைத்த ஸ்டாலின்.. கம்பீரமாக நின்ற செந்தில் பாலாஜி.. மொத்தமாக எல்லாம் மாறுது.. அப்படி போடு!)
மோடி ஸ்டாலின்: சமீபத்தில் கூட பிரதமர் மோடி தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் பேசுகையில், தமிழ்நாட்டில் கோவில்கள் நிர்வகிக்கப்படும் விதம் பற்றி விமர்சனங்களை முன்வைத்தார். தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலடி தந்த முதல்வர் ஸ்டாலின், கோயில்களை தமிழ்நாடு அரசு அபகரித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்தார். பிரதமர் யாருக்காக பேசுகிறார்? யாருடைய குரலை எதிரொலிக்கிறார்? கடந்த 2 ஆண்டுகளில் 1,000 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம்; இது தவறா? வரலாற்று சிறப்புமிக்க 112 கோயில்களை சீர்செய்ய 7100 கோடி ஒதுக்கீடு செய்தது தவறா?; 2 ஆண்டுகளில் 3,500 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன ம.பி., அந்தமான், தெலங்கானா என எங்கு போனாலும் தமிழ்நாட்டை பற்றித்தான் பேசுகிறார்; பிரதமரால் மறக்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று பதிலடி கொடுத்தார்.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!











Click it and Unblock the Notifications