வானதி அப்படி கேட்டதும்.. சட்டென ஸ்டாலின் அனுப்பிய ரியாக்சன்! அப்போ அதிமுக? சல்லி சல்லியாக நொறுங்குதே
சென்னை: முதல்வர் ஸ்டாலினை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சந்தித்தது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பில் என்ன நடந்தது.. அவர்கள் பேசியது என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் கருணாநிதி நூற்றாண்டு தினத்தையொட்டி நடந்த நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜகவினர் கலந்து கொண்டது, இதில் திமுக பாஜகவினர் நெருக்கமாக இருந்தது உள்ளிட்ட பல விஷயங்கள் கவனம் பெற்றுள்ளது. இந்த நெருக்கத்திற்கு பின் சில முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

கருணாநிதி நூற்றாண்டு தினத்தையொட்டி நடந்த நாணயம் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில் பாஜக தலைவர் அண்ணா மலை உட்பட பாஜக நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய அளவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
கருணாநிதியை மிகச் சிறந்த நிர்வாகி என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், அவர் மாநில அரசியல்வாதி இல்லை.. தேசிய தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார். பாஜக தலைவர் அண்ணாமலை முன் வரிசையில் அமர வைக்கப்பட்டார். பாஜக - திமுக நிர்வாகிகள் நெருக்கமாக காணப்பட்டனர். பாஜக இப்படி திமுகவுடன் நெருக்கமாக இருக்க வேறு சில காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுகவின் தயவை பாஜக நாடுகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அரசியல் வட்டார தகவல்: தமிழ்நாட்டில் கருணாநிதி நூற்றாண்டு தினத்தையொட்டி நடந்த நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜகவினர் கலந்து கொண்டதால் திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையும் என்று சிலர் கருத்துக்களை வைக்கின்றனர். ஆனால் அரசியல் தகவலின்படி, திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையாது, 2026லும் அது தொடரும். பாஜக -திமுக கொஞ்சம் சமாதானமான உறவையே பேணுகிறது என்று கூறுகின்றனர்.
சந்திப்பில் என்ன நடந்தது: இப்படிப்பட்ட நிலையில்தான்.. முதல்வர் ஸ்டாலினை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சந்தித்தது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பில் என்ன நடந்தது.. அவர்கள் பேசியது என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி வானதி சீனிவாசன் முதல்வரை சந்திக்க முன்பே நேரம் கேட்டு இருந்தார். முன்பு நேரம் கொடுக்க முடியாத நிலையில் நேற்று ஸ்டாலின் நேரம் கொடுத்துள்ளார். தன்னை சந்திக்க வந்த வானதியை வரவேற்ற ஸ்டாலின் அவரை நலம் விசாரித்தார்.
இதையடுத்து அவரிடம்.. ஸ்டாலின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். வானதி சீனிவாசன் இதையடுத்து.. கோவை விமான நிலையத்திற்கு நிலம் ஒதுக்குவது பற்றி கோரிக்கை வைத்தார். இதற்கு கண்டிப்பாக நிலம் ஒதுக்கீடு பற்றி அறிவிப்பு வரும் என்று ஸ்டாலின் கூறினார். அதன்படியே நேற்று மாலையே கோவை விமான நிலையத்திற்கான நிலம் 99 ஆண்டுகளுக்கு விமான துறைக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.
வானதி சீனிவாசன் நேற்று அளித்த பேட்டியில்.. திமுக - பாஜக கூட்டணி எல்லாம் வைக்கவில்லை. நாங்கள் ஆக்கபூர்வமாக நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம். அவ்வளவுதான், என்று கூறியுள்ளார்.
அப்போ அதிமுக: இந்த நிலையில் அதிமுக இதுபோன்ற விவகாரங்களை கையில் எடுக்காதது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்பெல்லாம் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் கூட மாறி மாறி எதிர்க்கட்சி தலைவர்கள் முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை வைப்பது வழக்கம்.
ஜெயலலிதா ஆட்சியில் கூட ஸ்டாலின் சென்று அவரை சந்தித்து கோரிக்கைகளை வைத்து உள்ளார். ஆனால் அதிமுக தற்போது இதுபோன்ற சந்திப்புகளை மேற்கொள்வது இல்லை. முதல்வர் ஸ்டாலினிடம் இதற்கான கோரிக்கைகளை வைப்பது இல்லை. இதை குறிப்பிடும் விதமாகவே வானதி சீனிவாசனும்.,. நாங்கள்தான எதிர்க்கட்சி.. நாங்களே ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications