ஸ்டாலின் தந்த அப்பாயிண்ட்மெண்ட்! மீட்டிங் நடக்கும் முன் ஆதவ் அர்ஜுனாவை நீக்கிய திருமா! என்ன நடந்தது
சென்னை: முதல்வர் ஸ்டாலின் உடன் விசிக தலைவர் திருமாவளவன் இன்று சந்திப்பு நடத்த உள்ளார். இன்று தலைமைச்செயலகத்தில் திடீர் சந்திப்பு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு நடப்பதற்கு முன்பே கட்சியில் இருந்து துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை திருமாவளவன் 6 மாதத்திற்கு இடைநீக்கம் உள்ளார்.
சமீபத்தில் ஆதவ் அர்ஜுனா பேச்சு தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில், திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜூனா கருத்துக் கூறுகிறார் என்பது உண்மை; அவரிடம் விளக்கம் கேட்போம்; கட்சியின் முன்னணி நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவெடுப்போம்.

விஜய் பேசியதில் எல்லாம் உடன்பட முடியாது. விஜய் அம்பேத்கர் நூலை வெளியிட்டிருப்பது வரவேற்பதற்குறியது. ஆனால் அதற்காக அவர் பேசிய விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
திமுக அழுத்தம் கொடுத்ததாக விஜய் கூறியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு காரணம் திமுக அல்ல. விஜய் தெரியாமல் சொல்கிறார். அவர் சொல்வதில் உண்மை இல்லை.
நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு விஜய் காரணம் அல்ல. அழுத்தம் கொடுத்தால் இணங்க கூடிய அளவுக்கு விசிக பலவீனமாக இல்லை. நாங்கள் பலமாக இருக்கிறோம். கூட்டணி பலமாக உள்ளது. ஆதவ் அர்ஜுனா பேச்சு தொடர்பாக கருத்து கேட்போம். அவர் விளக்கத்தை பொறுத்து கட்சியின் முன்னணி நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவெடுப்போம், என்று விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் சந்திக்க உள்ளார்.
ஆலோசனை: இதில் ஆதவ் அர்ஜுனாவை பற்றி பேசுவார்கள் என்று கூறப்பட்டது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் அப்பாயிண்ட்மெண்ட் தந்திருந்தார். ஆனால் சந்திப்பு நடக்கும் முன்பே ஆதவ் அர்ஜூனாவை திருமா கட்சியில் இருந்து 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்து உள்ளார். ஆதவை நீக்கிவிட்டு அதன்பின் ஸ்டாலினை சந்திப்பதே சரியாக இருக்கும்.. அதற்கு முன் சந்தித்து பின்னர் நீக்கினால் ஸ்டாலின் சொல்லி நீக்கியது போல ஆகிவிடும் என்பதால் திருமா உடனடியாக இந்த முடிவை எடுத்தாள் கூறப்படுகிறது. கட்சியின் மற்ற துணை பொதுச்செயலாளர்கள் ஆலோசனை செய்ததன் அடிப்படையில் இந்த முடிவை திருமா எடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக திருமா வெளியிட்ட அறிக்கையில்,
1. கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.
2. இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
5. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜூனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
6. அதன்படி, ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்., என்று கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications