அஜித்தின் நண்பர், இயக்குநர், கல்வி கொடையாளர், "மனிதநேயர்" வெற்றி துரைசாமி இமாச்சல் சென்றது ஏன்?
சென்னை: இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சட்லஜ் ஆற்றில் விழுந்து வெற்றி துரைசாமி உயிரிழந்த நிலையில் அவர் எதற்காக அந்த மாநிலத்திற்கு சென்றார் என்பதை பார்ப்போம்.
அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் மேயர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் சைதை துரைசாமி. தனது மனிதநேய அறக்கட்டளை மூலம் போட்டித் தேர்வுகளுக்கு பங்கேற்பவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இவரது ஒரே மகன் வெற்றி துரைசாமி. இவர் தனது தந்தையின் அறக்கட்டளையை கவனித்து வந்தார். அதே வேளையில் வனவிலங்கு புகைப்பட கலைஞராகவும் அவர் அறியப்படுகிறார்.
எல்லாவற்றுக்கும் மேல் அவருக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தது. இதனால் அவர் இயக்குநர் அவதாரம் எடுத்தார், வித்யுத், ரம்யா நம்பீஸனை வைத்து "என்றாவது ஒரு நாள்" என்ற படத்தை இயக்கினார். இது 2021 ஆம் ஆண்டு வெளியானது. வெற்றிக்கு சுற்றுலா செல்வதும் சாகசங்கள் செய்வதும் மிகவும் பிடிக்குமாம்.
இதனால் இவர் அஜித்துக்கும் நண்பர். இருவருக்குமே ஒரே டேஸ்ட்! அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு வெற்றி வெளியிட்டிருந்தார். அஜித், வெற்றியின் திருமணத்திற்குக் கூட மனைவி ஷாலினியுடன் சென்று வாழ்த்தினார். இந்த நிலையில் இமாச்சல் பிரதேசத்தில் நடந்த விபத்தில் சட்லஜ் ஆற்றில் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கவிழ்ந்தது.
இதையடுத்து வெற்றியுடன் சென்ற உதவியாளர் கோபிந்தா பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் வெற்றி மட்டும் மாயமானார். இதனால் மீட்பு படையினரும் போலீஸாரும் அவரை தேடி வந்தனர். 8 நாட்களாகியும் அவரது உடல் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் அவருடைய ஐபோன், உடமைகள் எல்லாம் கிடைத்துவிட்டன.

அது போல் பாறை இடுக்கில் மனித மூளையும் கண்டெடுக்கப்பட்டு அது வெற்றியினுடையதா என அறிய டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அத்துடன் சைதை துரைசாமியின் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு இமாச்சலுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் நேற்று பகல் நேரத்தில் வெற்றியின் உடலை பாறையின் அடியில் இருந்து ஸ்கூபா டைவிங் வீரர்கள் மீட்டனர்.
இதையடுத்து அவர்களுக்கு ஏற்கெனவே சைதை துரைசாமி அறிவித்த ரூ 1 கோடி சன்மானமாக அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் வெற்றியின் உடல் இன்று மாலை சென்னை வருகிறது. அவரது வீட்டில் வைக்கப்பட்டு மாலை 6 மணிக்கு இறுதி சடங்குகள் நடத்தப்படுகின்றன. ஏற்கெனவே 8 நாட்களான நிலையில் வெற்றியின் உடல் சில மணி நேரங்களில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வெற்றி எதற்காக இமாச்சல் பிரதேசத்திற்கு சென்றிருந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு இரு வேறு பதில்கள் வருகின்றன. ஒன்று அவர் சுற்றுலா பிரியர் என்பதால் இமாச்சலுக்கு தனது நண்பருடன் சுற்றுலா வந்திருந்தார் என்கிறார்கள்.
இன்னொன்று வெற்றி த்ரில்லர் படம் ஒன்றை இயக்க போகிறார். இதற்காக லொகேஷன் பார்க்க இமாச்சல் வந்ததாகவும் கூறுகிறார்கள். இதில் எது உண்மை என தெரியவில்லை. சைதை துரைசாமியின் மகன் வெற்றி எப்படியும் உயிருடன் வருவார் என அவருடைய குடும்பத்தினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டதால் வெற்றியின் குடும்பத்தினர் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். சைதை துரைசாமியின் மகன் இறப்புக்கு அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள், மனிதநேய அறக்கட்டளையில் படித்துவிட்டு அதிகாரிகளாக உள்ளவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications