Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினுக்கு, கூகுளுக்கும் தெரிந்தது.. தமிழ் சினிமாவுக்கு தெரியாம போய்டுச்சே.. சிவாஜிக்கு வந்த துயர்

சிவாஜி கணேசனை மறந்துபோன தமிழ் திரையுலகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழாவில், தமிழ் திரையுலகம் மரியாதை செலுத்தாதது வேதனையாக ஒலிக்க தொடங்கி உள்ளது.

Recommended Video

    Sivaji Ganesan 93rd Birth Anniversary | MK Stalin | Sivaji Ganesan Memorial

    தொய்வுடன் தொங்கி கொண்டிருந்த தமிழ்த் திரையுலகமானது, சிவாஜியின் வருகைக்கு பிறகே கர்ஜித்து எழுந்து மிரட்டலுடன் ஓடத் தொடங்கியது... சிவாஜிக்கு முன்பு - சிவாஜிக்கு பின்பு - என திரையுலக கோட்டை கிழித்தும், பிரித்தும், வகுத்தும் காட்டியவர்..!!

    நடிப்பை ஒரு தொழிலாக இல்லாமல் தவமாக - ஏன் உயிர் மூச்சாக - ஏற்றுக் கொண்டு மதித்து போற்றியவர் சிவாஜி கணேசன்., ஆனால், இதையெல்லாம் திரையுலகம் இன்று மறந்து போன கொடுமை நடந்துள்ளது.

    பரவசங்கள்

    பரவசங்கள்

    பக்கத்தில் இருப்பதாலேயே சில அற்புதங்கள் நம் அறிவுக்கு எட்டாமல் போய்விடும்.. பக்கத்தில் இருப்பதாலேயே சில பரவசங்கள் நம் பார்வைக்கு வராமலேயே போய்விடும்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் அப்படித்தான்.. இந்தியாவிற்குள்ளேயே போதுமான வெளிச்சமின்றி அஸ்தமனம் ஆகிவிட்டார். இதுவே ஹாலிவுட்டில் மட்டும் சிவாஜி பிறந்திருந்தால், இந்த உலகமே அவரை ஆராதித்திருக்கும்... தமிழன் என்று பிறந்துவிட்டதுதான் அவர் செய்த ஒரே தவறு.. திறமையாக நடிக்கத் தெரிந்த சிவாஜிக்கு, நிஜ வாழ்வில் நடிக்க தெரியாததுதான் அடுத்த தவறாக போய்விட்டது.

    நடிப்பாற்றல்

    நடிப்பாற்றல்

    நடிப்பாற்றலின் பல்கலைக்கழகத்திற்கு இந்தியாவின் சிறந்த நடிகர் விருதை வழங்காமல் இந்திய அரசு புறக்கணித்தது. ஆனால் பிரான்ஸ் நாடு செவாலியே விருது தந்தது.. அமெரிக்கா தன் மாநகரத்தின் கௌரவ மேயர் ஆக்கியது.. சிங்கப்பூர் நாடு தனது பாராளுமன்றத்தில் அவரது நடிப்பைப் புகழ்ந்து தீர்மானமே போட்டது... ஆசியா ஆப்ரிக்கா இரண்டு கண்டங்களிலும் சிறந்த நடிகர் இவரே என்று எகிப்து அவரை கொண்டாடியது. ஆனால் இந்தியா சிவாஜியை ஏறெடுத்தும் பார்க்காமலேயே போய்விட்டது.

     பிறந்தநாள்

    பிறந்தநாள்

    சிவாஜி இறந்ததில் இருந்தே இந்த வருத்தம் இருந்தாலும், இன்றைய தினம் நம் தமிழகத்திலேயே ஒரு புறக்கணிப்பு நடந்துள்ளது.. அதுவும் திரையுலக புறக்கணிப்பு நடந்திருப்பதை ஜீரணிக்கவே முடியவில்லை.. நேற்று நடிகர் திலகத்தின் 94-வது பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் உட்பட பல முக்கிய தலைவர்கள் அவரது மணி மண்டபத்தில் மரியாதை செலுத்தினர்..

    வைரமுத்து

    வைரமுத்து

    ஆனால் தமிழக திரையுலகைச் சேர்ந்தவர்கள், இன்றைய இளைய நடிகர்கள், இயக்குநர்கள் யாருமே செல்லவில்லை.. வைரமுத்து மட்டும் சென்று மரியாதை செலுத்தி உள்ளார்.. இது வருந்தத்தக்கது என்பதுடன், கண்டனத்துக்குரியதும் என்றும் கருத்துக்கள் வெடித்து கிளம்பி உள்ளன.. குறிப்பாக, நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே.சந்திரசேகரன், இதை ஒரு அறிக்கையாகவே பதிவு செய்துள்ளார்..

    புகைப்படம்

    புகைப்படம்

    அந்த அறிக்கையில், "தமிழ் சினிமாவின் முகவரியாக, தமிழ்க் கலையின் அடையாளமாகத் திகழ்ந்து மறைந்த நடிகர்திலகத்திற்கு மரியாதை செலுத்தக்கூட நேரமில்லாமல் தமிழக திரையுலகினர் இருக்கிறார்களா? கொரோனாவைக் காரணமாகக் கூறினாலும்கூட, தனிப்பட்ட முறையிலாவது தங்கள் வீட்டில் புகைப்படம் வைத்து மரியாதை செய்திருக்கலாம்.

     போட்டோ

    போட்டோ

    கூகுள் தனது முகப்பில் நடிகர்திலகம் புகைப்படத்தை வைத்து கெளரவப்படுத்திய நிலையில், தங்கள் வீட்டு நாய் குட்டிபோட்டதைக்கூட ட்விட்டரில் பதிவிட்டு பெருமை கொள்ளும் பலகலைஞர்கள், நடிகர்திலகம் பிறந்தநாளுக்காக ஒரு வாழ்த்துப் பதிவைக்கூட போடாமல் அமைதிகாத்தது ஏனோ? மொத்தத்தில் நன்றி மறந்துவிட்டதா தமிழ்த்திரையுலகம் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது" என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    தமிழர்கள்

    தமிழர்கள்

    அதேசமயம், சிவாஜிக்கு, முதல்முறையான அவமானம் நேற்றுதான் நடந்தது என்று சொல்ல முடியாது.. ஏற்கனவே இதுபோல 2, 3 முறை இதே தமிழகத்தில் நடந்துள்ளது.. அன்று, அவரது சிலையை மெரினாவில் இருந்து அகற்றியதே பெருத்த அவமானம்தான்.. இது சிவாஜி என்ற மாபெரும் கலைஞனுக்கு மட்டும் நேர்ந்த அவமானமில்லை.. ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் நேர்ந்த அவமானம்.

    நிராகரிப்பு

    நிராகரிப்பு

    போக்குவரத்து இடையூறு என்று சிலையை அகற்ற அரசு சொன்ன காரணத்தில் துளியும் உண்மையில்லை என்பது அப்போது எல்லாருக்குமே தெரியும்.. காரணம், 2006-ல் இதே போல ஒரு காரணத்தை சொல்லி, சிலைதிறப்புக்குத் தடைபோட முயன்றபோது நீதிமன்றமே அந்த காரணத்தை நிராகரித்திருந்தது.. 2013-ல் அதிமுக ஆட்சி காலத்தில் இதே வழக்கு வந்தது.. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, சிலையை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டது நினைவிருக்கலாம்.

    வளர்ச்சி

    வளர்ச்சி

    ஆனால், ஒரு ஒப்பற்ற பெருங்கலைஞனுக்கு சிலையை வைக்க இப்படி ஒரு வாதம் தேவையா என்பதுதான் நமது கேள்வி.. அதுமட்டுமல்ல, சிவாஜியை இழிவுபடுத்தும் சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் காங்கிரஸ் கட்சி பெரிய அளவுக்கு ஆதரவாக நின்றதில்லை.. கடைசிவரை அவரை தங்களது கட்சிகளின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொண்டார்களோ? என்ற சந்தேகம்தான் எழுகிறது.. அதேபோல, இந்த சிலை விவகாரத்தில் திமுகவும் பெரிய அளவு அழுத்தம் தராமல் இருந்ததையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டி உள்ளது.

     ராதாரவி

    ராதாரவி

    இப்படித்தான் லட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன் மரணத்திற்கு மாலையுடன் ராதாரவி உள்ளிட்ட நடிகர்கள் ஊர்வலமாக மாலைப்போட காத்திருந்தும், யாருமே வரவில்லை, வெகுசிலரே வந்திருந்தனர்... நடிகை காந்திமதி இறந்தபோதும் இப்படித்தான் நடந்தது.. நல்ல உள்ளம் கொண்ட விஜயகாந்த் உட்பட ஒருசிலரே சென்றிருந்தனர்.. அதைவிட கொடுமை, நடிகர் திலகம் மறைந்தபோது அவர் உடலைக்காண மருத்துவமனைக்கு ரஜினிவந்தபோது சூப்பர் ஸ்டார் வாழ்க கோஷம் போட்டார்கள்..

     மலிவு ரசனை

    மலிவு ரசனை

    மரண வீட்டிலும் கோஷம் போடும் ரசிகர்களின் எண்ண ஓட்டமும், மலிவு ரசனைகளும் வேதனையை தருகிறது என்றாலும், திரையுகிலேயே ஆகப்பெரும் சகாப்த நடிகர்களை புறக்கணிக்கும் போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்றைய இளம் நடிகர்களுக்கு சிவாஜி என்ற டிக்‌ஷனரியின் அர்த்தம் புரியாமல் இருக்கலாம்.. ஆனால், மூத்த கலைஞர்களுக்கும், சீனியர்களுக்கும் பொறுப்புணர்ச்சியும் கடமையுணர்ச்சியும் இல்லாமல் இருப்பது வேதனைதான்..

    திரையுலகம்

    திரையுலகம்

    எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், மனித உயிருக்கான மதிப்பு இவ்வளவுதான் என்பதை இன்றைய திரையுலகம் நிரூபித்துவிட்டது.. ஆனால் ஒன்று, சின்ன - பெரிய என்ற பாகுபாடின்றி, தலைசிறந்த கலைஞர்களுக்கு மரியாதை செய்யாத எந்த தேசமும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை... தன் போக்கை திரையுலகம் இனியாவது மாற்றி கொள்ள வேண்டி உள்ளது..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+