அதிமுகவை பலவீனப்படுத்தவே தனித்து போட்டி என களமிறக்கப்படுகிறதா தேமுதிக?
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுகவை பலவீனப்படுத்தும் நோக்கத்தில்தான் தேமுதிக தனித்துவிடப்படுகிறதா? என்கிற கேள்வியும் சந்தேகமும் எழுந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக 41 இடங்களை எதிர்பார்த்தது. ஆனால் வெறும் 13 இடங்கள் பிளஸ் ஒரு ராஜ்யசபா சீட் என சொன்னது அதிமுக.
இதனை ஏற்க மறுத்து திடீரென அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது தேமுதிக. இந்த அறிவிப்பு பல்வேறு கேள்விகள், சந்தேகங்களை எழுப்புகின்றன.

திடீர் முடிவு
ஒவ்வொரு தேர்தலின் போதும் ராஜ்யசபா சீட் பேரம் பேசிய கட்சி தேமுதிக. இதை இப்போது அதிமுக ஏற்றுக் கொண்டது. இதை சுதீஷும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். இப்போது திடீரென ராஜ்யசபா சீட்டும் வேண்டாம் கூட்டணியும் வேண்டாம் என்கிறது தேமுதிக.

அதிமுக மீது விமர்சனம்
அத்துடன் இல்லாமல் அதிமுகவை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சிக்கிறது தேமுதிக. சட்டசபை தேர்தலில் நிச்சயமாக அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து தேமுதிகவினர் களம் காணப் போகிறார்கள். இது பல தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி பெறும் தொகுதிகள் எண்ணிக்கையை வெகுவாகவே குறைத்துவிடும்.

அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சி
அதிமுகவின் இமேஜும் மிக மோசமாக பாதிக்கப்படும். அதிமுகவை மிக மிக மோசமாக பலவீனப்படுத்தும் வகையில்தான் தேமுகவின் இந்த நடவடிக்கை தெரிகிறது. ஒருவேளை அதிமுக அப்படியான ஒரு நிலைக்கு போவதுதான் தங்களுக்கு நல்லது என நினைக்கும் சக்திகளால் தேமுதிக இப்படி ஒரு முடிவை எடுத்ததோ என்கிற சந்தேகம் இயல்பாகவே எழுகின்றன.

திட்டமிட்டு களமிறக்கப்படும் தேமுதிக
ஏனெனில் காங்கிரஸ் கட்சி 25, பாமக 23, பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் இடதுசாரிகள் தலா 6 இடங்களில்தான் போட்டியிடுகின்றன. மதிமுகவும் 6 இடங்களில் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதனடிப்படையில் 13 தொகுதிகள் பிளஸ் ஒரு ராஜ்யசபா சீட் என்பது ஒன்றும் கவுரவ குறைச்சலான எண்ணிக்கையாகவும் தெரியவில்லை. அதனால்தான் அதிமுகவுக்கு எதிராக திட்டமிட்டே தேமுதிக களம் இறக்கப்படுகிறதா?என்கிற சந்தேகம் எழுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications