இனி உடல்நிலை முக்கியம்.. பொதுமேடைகளுக்கு விஜயகாந்த் அதிகம் வர மாட்டார்.. தேமுதிகவில் முக்கிய முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயகாந்த் இனிமேல் பொதுமேடைகளுக்கு வர மாட்டார்.. அவர் பெரும்பாலும் ஒதுங்கியே இருக்க வாய்ப்பு உள்ளதாக தேமுதிக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். விஜயகாந்த் உடல்நிலை மோசமான நிலையில்.. பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளர் ஆகி உள்ளார்.

பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பிரேமலதாவை ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பிரேமலதா கையை தூக்கி விஜயகாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Why DMDK Vijayakanth wont be participating in any of the public and party meetings hereafter?

விஜயகாந்த் உடல்நலம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

வெளியே வர மாட்டார்: இனிமேல் விஜயகாந்த் பொதுமேடைகளுக்கு வர மாட்டார்.. அவர் பெரும்பாலும் ஒதுங்கியே இருக்க வாய்ப்பு உள்ளதாக தேமுதிக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அவர் இனி ஒதுங்கியே இருப்பார். கட்சி தொடர்பான நிகழ்வுகளில் கலந்து கொள்ளவே மாட்டார் என்று கூறப்படுகிறது.

அவர் வெறும் கட்சியின் நிறுவனராகவே இருப்பார். மற்றபடி உறுப்பினராக நீடிப்பார். அதை தாண்டி கட்சியில் எந்த முடிவுகளையும் எடுக்க மாட்டார். அவர் பொது மேடைகளுக்கு வரவே வாய்ப்புகள் இல்லை. அவர் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் அதிகம் உள்ளது. அதனால் இனி அவர் வீட்டிலேயே ஓய்வு எடுப்பார்.

உடல்நிலை மோசமாகி விட்டதால்.. அவர் இனி வரும் காலங்களில் ஓய்வு எடுப்பார். அரசியல் நிகழ்வு, சினிமா நிகழ்வு எதிலும் கலந்து கொள்ள மாட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜயகாந்த் உடல்நிலை: விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு அவ்வப்போது இப்படி உடல்நிலை மோசமானது வழக்கம். இதற்காக அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதும் வழக்கம். ஆனால் இந்த முறை அவரின் உடல்நிலை மிகவும் நலிவுற்றதாக கூறப்படுகிறது.

அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ரத்த கொதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தது. முக்கியமாக நுரையீரல் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ள மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

எனினும் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம் என்று கூறியது. அதன்பின் அவருக்கு தொடர்ச்சியாக 1 வாரம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்.. முழுமையாக உடல்நிலை குணமாகி அவர் கடந்த 2 நாட்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

போட்டோ வெளியிட்டார்: இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் புகைப்படத்தை அவரின் மனைவி, கட்சியின் பொருளாளர் பிரேமலதா வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. வதந்திகளை எல்லாம் உடைக்கும் வகையில், வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த புகைப்படத்தை விஜயகாந்த் மனைவி பிரேமலதா வெளியிட்டு உள்ளார்.

Why DMDK Vijayakanth wont be participating in any of the public and party meetings hereafter?

பரவிய வதந்திகள்: சமீபத்தில் அவரின் உடல்நிலை மோசமானதாக செய்திகள் வந்தன. அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிட்டது.. மோசமாக்கிக்கொண்டு இருக்கிறது. அதனால் ரசிகர்கள், தொண்டர்கள் அங்கே குவிந்து வருகிறார்கள் என்று செய்திகள் வந்தன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்றுவரும் மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனைக்கு சுமார் 10 போலீசார் பேரிகார்டுகளுடன் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

அங்கே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது மேலும் சந்தேகத்தை கொடுத்தது. இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் தங்கள் கற்பனைகளை, சோகமான போஸ்டுகளை போட தொடங்கினர். இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது. இதையடுத்தே பிரேமலதா விஜயகாந்த் அந்த போட்டோக்களை வெளியிட்டு வதந்திகளை நீக்கினார் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+