சுளுக்கெடுத்த ஸ்டாலின்.. முகத்தில் ஈயாடலையே.. ‘அடங்காத அலை’ - கடைசி ஓவர் சரவெடிக்குப் பின்னணி இதானா?
சென்னை : திமுக அமைச்சர்கள் சர்ச்சைகளில் சிக்கியது பற்றி ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விட்டிருந்தாலும், மக்கள் மத்தியில் அதிருப்தி நீங்கவில்லை என உளவுத்துறை முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் அளித்துள்ளது. அதனால் தான் இன்றைய பொதுக்குழுவிலேயே பொங்கி எழுந்தார் எனக் கூறப்படுகிறது.
சமீப சில நாட்களில் அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் சர்ச்சைகளில் சிக்கினர். இது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. எனினும், எதிர்க்கட்சியினர் திமுக நிர்வாகிகள் பேசுவதை வெட்டி ஒட்டி தவறாகப் பரப்புவதாகவே அறிக்கை விட்டு அமைதியானார்.
சமீபத்தில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்திலும் இதுகுறித்து அமைச்சர்களுக்கு அறிவுறுத்திய ஸ்டாலின், அதன்பிறகு வந்த உளவுத்துறை ரிப்போர்ட் காரணமாகவே இன்று திமுக பொதுக்குழு மேடையிலேயே பொங்கித் தீர்த்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

கடைசி ஓவரில் இறங்கி சரவெடி
திமுக பொதுக்குழு சிறப்பாக நடந்தேறி, மூத்த தலைவர்கள் பலரும் பாராட்டு மழைகளைப் பொழிந்து கொண்டிருந்த நிலையில், கடைசி ஓவரில் இறங்கி கட்சியின் சீனியர்களை ஸ்டாலின் வெளுத்தெடுத்தார். இதைக் கண்டு மேடையில் இருந்தவர்களும் சரி, பொதுக்குழுவில் பங்கேற்றவர்களும் சரி ஆடிப்போய் விட்டனர். அதிலும், சமீபமாக சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்கள் முகத்தில் ஈயாடவில்லை. ஸ்டாலினின் இந்த சரவெடிக்குப் பின்னணி, உளவுத்துறையிடமிருந்து வந்த தகவல் தான் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.

நிற்க வைத்த சர்ச்சை
சமீப சில நாட்களில் மட்டும் திமுகவைச் சேர்ந்த 3 அமைச்சர்கள் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினர். வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தன்னை சந்திக்க வந்த, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த திமுக எம்.பி தனுஷ்குமார் மற்றும் வனவேங்கைகள் கட்சித் தலைவர் இரணியன் உள்ளிட்டவர்களை தனது வீட்டில் நிற்க வைத்து பேசி அனுப்பியதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

பொன்முடி - இரட்டை சர்ச்சை
இந்த பிரச்னை முடிவதற்குள், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பொதுக்கூட்டம் ஒன்றில், அரசு பஸ்சில் பெண்கள் 'ஓசி' பயணம் செய்வதாக பேசி, புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார். அதற்கு முன்னதாக வேறொரு சர்ச்சையிலும் சிக்கி இருந்தார் அமைச்சர் பொன்முடி. அரசு விழா மேடையில் வைத்து திமுக ஒன்றிய சேர்மனிடம், நீங்க எஸ்.சி தானே என கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சீனியர் துரைமுருகன்
அதைத் தொடர்ந்து, வேலூரில் ஒரு நிகழ்ச்சியில் மூத்த மூத்த அமைச்சர் துரைமுருகனிடம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது வழங்குவீர்கள் என கேட்டதற்கு, அவர் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்க சில்லறை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என கிண்டலாக தெரிவித்ததும் சர்ச்சையைக் கிளப்பியது.

ஸ்டாலின் சொன்ன மேட்டர்
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில், "எப்படியாவது தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கும் மதவெறி நச்சு சக்திகள் மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்க பார்க்கின்றன. அதற்காகக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் பேச்சுகளை வெட்டியும் ஒட்டியும், குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் தவறான பொருள்படும்படியான வாசகங்களுடன் வெளியிட்டு, அவற்றைத் தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள்." எனக் கூறியிருந்தார்.

ஆதங்கம் - விமர்சனம்
கடந்த சில மாதங்களாக திமுக அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவ்வப்போது கண்டித்து வந்தார். நான் என் சக்திக்கு மீறி உழைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தித் தருகிறீர்கள் என சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் ஆதங்கத்தைக் கொட்டியிருந்தார் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின். எனினும் அவர் சமீபத்தில், அமைச்சர்கள் மீது தவறு இல்லை என்பதுபோல் அறிக்கை விட்டது விமர்சனங்களைக் கிளப்பியது.

ரிப்போர்ட்
முதல்வர் ஸ்டாலின், தனது அமைச்சரவை சகாக்கள் மக்களை ஏளனமாக இழிவுபடுத்தும் வகையில் பேசியதையும், நடந்துகொண்டதையும் கண்டிக்கவில்லை என சமூக வலைதளங்களிலும், பொதுவெளிகளிலும் பேச்சுகள் எழுந்தன. குறிப்பாக, பாஜக, அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து இதுபற்றி பேசி வந்தனர். இதனால், மக்களிடையே நிலவி வரும் அதிருப்தி அலை பற்றி உளவுத்துறை ஸ்டாலினுக்கு அவசர ரிப்போர்ட்டை அளித்துள்ளது.

கடிவாளம்
அமைச்சர்களுக்கு கடிவாளம் போடாவிட்டால் அரசுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவை அதற்கான சரியான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் சூடாக, திமுக சீனியர்களை மேடையில் வைத்துக்கொண்டே வறுத்தெடுத்ததாக கூறப்படுகிறது.

சுளுக்கெடுத்த ஸ்டாலின்
திமுக பொதுக்குழு மேடையில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கையோடு, சீனியர்களை சுளுக்கெடுத்துள்ளார் ஸ்டாலின். திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், "ஒருபக்கம் திமுக தலைவர், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் இருக்கிறது என் நிலைமை. என்னை மேலும் துன்பப்படுத்துவது போல மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உருவாக்கினால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது?

அதான் உங்களுக்கும் நல்லது
காலையில் கண் விழிக்கும்போதே நம்மவர்கள் யாரும் புது பிரச்சனையை உருவாக்கி இருக்கக்கூடாது என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்க விடாமல் கூட ஆக்கி விடுகிறது. பொது இடங்களில் சிலர் நடந்துகொண்ட செயல்கள் காரணமாக திமுகழகம் பழிகளுக்கு, ஏளனத்திற்கு ஆளானது. ஒவ்வொரு நொடியையும் கண்ணியமாக பயன்படுத்த வேண்டும். உங்கள் நன்மைக்காகவும் சேர்த்தே இதனைச் சொல்கிறேன். பொதுமேடைகளில் மட்டுமல்ல, அடுத்தவர்களிடம் பேசும்போது கூட எச்சரிக்கையாக பயன்படுத்துங்கள்." எனக் கடுமையாகப் பேசியுள்ளார் ஸ்டாலின்.
-
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications