பிளாஸ்டிக் சேர்களில் மட்டும் நடுவே ஓட்டை இருக்கே ஏன்? 99% பேருக்கு தெரியாத உண்மை.. சர்ப்ரைஸ் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த காலத்தில் பெரும்பாலும் நாம் பிளாஸ்டிக் சேர்களையே பயன்படுத்துகிறோம். அந்த சேர்களில் கீழ் அடிப்புறத்தில் சிறிய துளை இருக்கும். பெரும்பாலான நபர்களுக்கு அந்த துளைக்கான காரணம் தெரியாது. ஆனால், இதன் மூலம் பல வழிகளில் நமக்கு நன்மை ஏற்படுகிறதாம். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

இப்போது நாம் பார்க்கும் பெரும்பாலான பிளாஸ்டிக் சேர்களில் நடுவில் துளை இருக்கும். இவை பார்க்க அழகாக இருக்கும் என டிசைனுக்காக மட்டும் வடிவமைக்கப்பட்டது இல்லை. மாறாக இதற்கு பல்வேறு பயன்கள் உள்ளன. இந்த ஒரு துளைக்கு பின்னால் எடையைக் குறைப்பது, உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்துவது மற்றும் காற்றோட்டத்தை மேம்படுத்துவது எனப் பல காரணங்கள் உள்ளன. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

offbeat India

பிளாஸ்டிக் சேர் துளை

பெரும்பாலான பிளாஸ்டிக் சேர்களில் பின்புறத்தில் ஒரு துளை இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். இது ஒரு சாதாரண டிசைன் என்று பலர் கருதினாலும், இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கிய காரணங்களில் ஒன்று, பிளாஸ்டிக் சேர்களை அடுக்கி வைப்பது தொடர்பானதாகும். பிளாஸ்டிக் சேர்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கும்போது, அவற்றுக்கு இடையே காற்று சிக்கி, ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது.

காரணம் என்ன

இதுபோல வெற்றிடம் உருவாகும்போது, பிளாஸ்டிக் சேர்களை பிரிப்பது கடினமாகிறது. மேலே இருக்கும் சேர்களை எடுக்க கஷ்டமாக இருக்கும். அதேநேரம் நடுவில் நாம் துளை போடும்போது காற்று எளிதாக வெளியேறும். இதனால் நாற்காலிகள் ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும். இதனால் சேர்களை ஒன்றன் மீது ஒன்றாக போட்டாலும் கூட அதை ஈஸியாக எடுக்க முடியும்.

மற்றொரு காரணம் உற்பத்தி தொடர்புடையது. பொதுவாக உருகிய பிளாஸ்டிக்கை மோல்ட் (moulds) ஊற்றி தான் பிளாஸ்டிக் சேர்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் துளை நாற்காலியை மோல்ட்டில் இருந்து எளிதாக அகற்ற உதவுகிறது.. அப்படி இந்த துளை இல்லை என்றால் சேரை மோல்ட்டில் இருந்து எடுக்கும் போது அது சேதம் அடையலாம். அதையும் இந்த துளை காப்பாற்றுகிறது. இதன் மூலம் சேர்கள் அதிகளவில் சேதம் அடையாது.

செலவு குறையும்

மேலும், இந்த சிறிய துளை சேரின் ஒட்டுமொத்த எடையைக் குறைக்கிறது. இதற்குத் தேவைப்படும் பிளாஸ்டிக் அளவையும் குறைக்கிறது.. இதன் மூலம் உற்ப்ததி செலவு குறையும். இவ்வளவு சின்ன பிளாஸ்டிக் எல்லாம் ஒரு மேட்டரா என நமக்கு தோன்றும். ஆனால், தினசரி பல லட்சம் சேர்களை உருவாக்கும்போது இந்த சிறிய சேமிப்பு கூட கணிசமானதாக மாறும்.

காற்றோட்டம்

இது மட்டுமின்றி நாற்காலியில் அமர்ந்திருக்கும் நபருக்கு இந்தத் துளை நல்ல காற்றோட்டத்தையும் வழங்குகிறது.. வியர்வை காரணமாக ஏற்படும் அசௌகரியத்தைத் தவிர்க்க உதவுகிறது. மேலும், ஒருவேளை சேரில் தண்ணீர் சிந்தினால் அல்லது மழையில் இருந்தால் மேற்பரப்பில் தண்ணீர் தேங்காமல் இருக்க துளை உதவும். அந்த துளை வழியாக தண்ணீர் எளிதாக வடிந்துவிடும்.

இப்படி அந்த சின்ன துளைக்கு ஏகப்பட்ட பயன்கள் உள்ளன. எனவே, அதை சாதாரண டிசைன் முடிவு என நாம் கருத முடியாது. பிளாஸ்டிக் சேரில் உள்ள ஒரு சிறிய துளை கூட, அழகியலுக்கு அப்பாற்பட்டு, பல முக்கியமான நோக்கங்களை கொண்டுள்ளதையே இது காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+