7 விஷயம்! முஷ்டி முறுக்கிய ஸ்டாலின்.. ரூ.1000 உரிமை தொகை திட்டத்தில் முதல்வர் தீவிரமாக இருப்பது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது.

Why does CM Stalin serious about the 1000 RS from the Kalaingar Housewives money Scheme?

இந்த திட்டம் தேசிய அளவில் பல மாநிலங்களுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக மாறி உள்ளது. சமீபத்தில் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிபெற இந்த திட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. இங்கு திமுகவின் மிக முக்கியமான வாக்குறுதியாக பார்க்கப்பட்டது குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் திட்டம்.

பிரியங்கா இதே திட்டத்தை Har Ghar Laxmi Campaign என்ற பெயரில் 1500 ரூபாயை எல்லா மாதமும் பெண்களுக்கு வழங்குவோம் என்று தெரிவித்தார். இந்த வாக்குறுதி பெண்களின் வாக்குகளை கவர மிக முக்கியமான காரணமாக அமைந்தது. அங்கே இந்த திட்டத்திற்கான வரவேற்பு அப்படியே வாக்குகளாகவும் மாறியது.

அதேபோல் கர்நாடகாவிலும் சட்டசபை தேர்தலில் இதே திட்டம் அறிவிக்கப்பட்டது. 1000 ரூபாய்க்கு பதிலாக 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது அம்மாநிலத்தில் காங்கிரசின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்த நிலையில்தான் இந்த திட்டங்களுக்கான முன்னோடியான தமிழ்நாடு, இதை முறையாக செயல்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

இதன் காரணமாகவே கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி பின் வரும் விஷயங்கள் முறையாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம்.

1. எக்காரணம் கொண்டும் தகுதி உள்ள பெண்களுக்கு நிதி கிடைக்காமல் போக கூடாது.
2. கண்டிப்பாக 1 கோடி என்ற இலக்கை அடைய வேண்டும்.
3. தகுதி பட்டியலுக்குள் வராத பெண்களுக்கு முறையான விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்.

4. வங்கி கணக்குகளை வாங்குவதில் எந்த முறைகேடும், தவறும் நடக்க கூடாது.
5. அப்ளிகேஷன் நிராகரிக்கப்பட்ட பின் மேல்முறையீடு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு உடனடி பதில் தர வேண்டும்.
6. அப்ளிகேஷனை நிரப்புவதில் மற்ற பணிகளிலும் பெண்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
7. பயனாளிகளை தேர்வு செய்வதில் எந்த இடங்களிலும் அரசியல் தலையீடு இருக்கவே கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறாராம்.

இந்த திட்டத்தின் கீழ் முறையாக பணம் கொடுத்து இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம். அதோடு அடுத்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் இதை தேசிய வாக்குறுதியாக கொடுக்க வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு வழிகாட்டிய இருக்கவும் ஸ்டாலின் விரும்புகிறாராம். இந்த திட்டத்தின் கீழ் 21 வயதை தாண்டிய பெண்களுக்கு பணம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் உங்கள் குடும்பம் கூட்டு குடும்பம். ஒரே ரேஷன் கார்டில் 2-3 பெண்கள் 21 வயதுக்கு மேல் உள்ளனர். அவர்களுக்கு திருமணமும் ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம்.

இதில் யார் குடும்ப தலைவி என்ற குழப்பம் ஏற்படலாம். இதற்கான விளக்கத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.

இவர்கள் எல்லோருக்கும் திருமணம் ஆகி இருந்தால் அவர்களுக்கு தனி ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே தனி தனியாக பணம் கொடுக்கப்படும். ஒரே ரேஷன் கார்டில் பணம் தரப்படாது. சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு ரேஷன் கார்டில் ஒருவருக்கு மட்டுமே பணம் தரப்படும்.

குடும்ப தலைவிகள்: இந்த திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியான குடும்ப தலைவிகள் யார் யார்.. குடும்ப தலைவிகள் என்ற தகுதி பெறுபவர்கள் யார் என்ற விவரத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.

Why does CM Stalin serious about the 1000 RS from the Kalaingar Housewives money Scheme?

* குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.
* ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி விண்ணப்பிக்கலாம்.
* குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் என குறிப்பிட்டுள்ள பெண்
குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.
* குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த குடும்பத் தலைவரின் மனைவி, குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.
*திருமணம் ஆகாத தனித்த பெண்கள்; கைம்பெண்கள் & திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்ப தலைவிகளாகக் கருதப்படுவர்.
*அதேபோல் திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்

திருநங்கைகள்: திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

திருநங்கைகள் குடும்ப தலைவிகளாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்பது மிகப்பெரிய சமூக நீதி திட்டமாக, அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பல வீடுகளில் திருநங்கைகள் சேர்ந்து குழுவாக வசிக்கிறார்கள். இதில் சில ஒரே குடும்பமாக பதிவு செய்து ரேஷன் அட்டைகளும் பெறுகிறார்கள். சிலர் தனி ரேஷன் அட்டைகள் பெறுகிறார்கள். இதனால் இவர்களும் இப்போது ரூ. 1000 பெறுவது எளிதாகி உள்ளது. சமூக நீதி மிக்க இந்த அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+